சிறுபான்மையினர் கல்விநிலையங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

பாவ்தீப் கங்


சிறுபான்மையினர் தங்கள் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான உரிமை பற்றிய சமீபத்திய நீதிமன்ற விவாதம், இது பற்றிய ஆளும் கூட்டணியின் ஒருமித்தக் கருத்தைத்தான் வெளிக்காட்டியது. சிறுபான்மையினர் தங்கள் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு இருக்கும் வரையற்ற உரிமையை கட்டுப்படுத்த விரும்பும் மத்திய அரசு, எல்லா தேசிய முன்னணி கூட்டணி உறுப்பினர் ஆதரவையும் இதில் பெற்றிருக்கிறது. அவுட்லுக் பத்திரிக்கைக்கு கொடுக்கப்பட்டிருந்த மத்திய மந்திரிக் குழும குறிப்புகள், சிறுபான்மைகளின் உரிமைகளுக்கு தீவிர ஆதரவாக இருக்கும் கட்சிகளிடமிருந்து கூட எந்த வித எதிர்ப்பையும் வெளிக்கொணரவில்லை என்பதைக் காட்டியிருக்கிறது.

சுப்ரீம் நீதிமன்றத்துக்கு முன்னர் மத்திய அரசின் சோலிஸிட்டர் ஜெனரலான ஹரிஷ் சால்வே அவர்களால் விலாவாரியாக பேசப்பட்ட இந்த நிலைப்பாடு, அட்டார்னி ஜெனரலாக இருக்கும் சோலி சோராப்ஜி அவர்களது நிலைப்பாடுக்கு நேர் எதிரானதாக இருந்தது. சோலி சோரப்ஜி அவர்கள் நீதிமன்றத்தின் முன்னர், தனிப்பட்ட முறையில் personal capacity தோன்றினார். சோலி சோரப்ஜி 1997ஆம் வருட ஐக்கிய கூட்டணி கொண்டிருந்த நிலைப்பாடுடன் பேசினார்.

ஜோஷி அவர்கள் தலைமை தாங்கி நடத்திய தேசிய முன்னணி கூட்டத்தில், ஒரு மாநிலத்தில் சிறுபான்மையாக இருக்கும் ஒரு சமூகம் அந்த மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை நடத்தலாம் என்று பேசப்பட்டது.

இந்த நிலைப்பாடு பல மந்திரிக் கூட்டங்களில் நடந்த பேச்சு வார்த்தைகள் பின்னால் தோன்றி, மத்திய மந்திரிக் குழுமத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாடு, சோலிஸிட்டர் ஜெனரலாலும், பல மந்திரிகளின் ஆதரவாலும் உருவானது.

அரசாங்க உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், அந்த சிறுபான்மையினருக்காக இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும் கூறுகிறது. உதவி பெறாத, ஆனால் அரசாங்க உதவி பெறும் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களும், கல்வி நிலைய அனுமதியிலோ, அல்லது அந்த கல்வி நிறுவன நிர்வாகத்திலோ முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட மாட்டாது எனவும் கூறுகிறது. அரசாங்கம், ‘தேசிய நலனுக்கு அப்பாற்பட்டதாக, எந்த குடிமக்களுக்கும் எந்த உரிமையையும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கவில்லை ‘ என்று கூறுகிறது.

மத்திய மந்திரிக் குழுமம்,(கேபினட்) அரசாங்கத்தின் நிலைப்பாடு 97க்குப்பிறகு மாறியிருப்பதை தெளிவாகச் சொல்கீறது. அன்றைய அட்டார்னி ஜெனரலாக இருந்த அசோக் தேசாய், 7 (பின்னர் 11ஆக உயர்த்தப்பட்ட) நீதிபதிகள் முன்னர் வாதிட்டார். 1993லிருந்து இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ‘ என்றால் என்ன, அவைகளின் அனுமதி கொள்கைகள் என்ன என்ன, அவற்றில் எவ்வாறு மாணவர்கள் படிக்க பணம் கொடுக்கிறார்கள் போன்ற 11 கேள்விகளைக் கேட்டது. இந்த மத்திய மந்திரிக் குழுமம், இது சம்பந்தமாக அனைத்துக்கும் பதில் கொடுத்திருக்கிறது.

சிறுபான்மை கல்வி நிலையங்களில் எந்த அளவுக்கு அரசாங்க குறுக்கீடு இருக்கும் என்ற கேள்விக்கு, முந்தைய நிலைப்பாடு, அரசாங்கம் மிகவும் சிறிய அளவே இடையூறு செய்யும் என்பதும், அதுவும் அந்த சிறுபான்மையினர் நலத்துக்காகவே என்பதும் ஆகும். இன்றைய அரசாங்கம், இன்னும் பரந்த அளவில் அதிகாரங்களை எடுத்துக்கொள்ள, தேசிய நலன் கருதி இது சம்பந்தமாக பல சட்டங்களை செய்ய அரசாங்கத்துக்கு உரிமை உண்டு எனக் கூறுகிறது.

சிறுபான்மையினர் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பது பற்றி, மத்திய அரசாங்கம், ‘ஆர்ட்டிகிள் 30 மொழி மற்றும் மதம் சார்ந்த சிறுபான்மையினர் என்று கூறுகிறது ‘ என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. முன்னர் தேவே கவுடா அரசாங்கம், இந்த கேள்விக்கு பதில் தராமல், அப்படி பதில் தந்தால், அது மக்களுக்கு இடையே பிரச்னையை உண்டுபண்ணும் என்று நழுவியது.

தேவே கவுடா அரசாங்கத்தின் நிலைப்பாடு, சிறுபான்மையினர் அல்லாத மற்றவர்கள் கல்வி நிலையங்களை நடத்த உரிமை உள்ளதா என்ற கேள்விக்கு பதில், இல்லை எனக் கூறி அதனை சிறுபான்மையினரைப் பாதுகாக்க தேவையான பாரபட்சம் என கூறியது. ஆனால், இன்றைய அரசாங்கம், ஆர்டிகிள் 19(1)g ஐக் குறிப்பிட்டு, ‘எல்லா மத சமூகங்களும் அதில் இருக்கும் எல்லா உள்மதக் குழுக்களும், கல்வி நிறுவனங்களை ஆர்டிகிள் 26இன் கீழ் நடத்தலாம் ‘ என கூறுகிறது.

இந்த கல்வி நிறுவனங்கள் தாங்கள் விரும்பியபடி மாணவர்களுக்கு அனுமதி கொடுக்கலாமா என்ற கேள்விக்கு, கவுடா அரசாங்கம், செய்யலாம் எனக் கூறியது. இன்றைய அரசாங்கம், அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இப்படிப்பட்ட அனுமதிகள் கொடுக்கப்பட வேண்டும் என கூறுகிறது. கல்வி நிலையத்தில், எந்த சீட்டுகள் இலவசம், எந்த சீட்டுகள் காசு கொடுத்து பெறும் சீட்டுகள் என்ற கொள்கையை நிர்ணயிப்பது அரசாங்கமே என்றும் கூறுகிறது. இதனை நீதிமன்றம் நிர்ணயிக்கலாம் என ஐக்கிய முன்னணி அரசாங்கம் கூறியது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம், மத ரீதியிலான முறையில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு, எத்தனை இடங்கள் அனைவருக்கும் என்ற இடப்பங்கீடுகளைச் செய்து கொள்ளலாம் என்று கூறியது. தேசிய முன்னணி அரசாங்கம், இட ஒதுக்கீடு என்பது bona fide அல்ல என்று வாதிடுகிறது. ஏற்கெனவே நீதிமன்றத்தில் செயிண்ட் ஸ்டாபன் கல்லூரி வழக்கினால், அரசாங்க உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு இருக்கும் சுயாட்சியை தேசிய முன்னணி அரசு எதிர்க்கிறது. அந்த தீர்ப்பு மாற்றப்பட வேண்டும் எனக் கோருகிறது.

அரசாங்கத்திடமிருந்து பண உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்கள் மாணவர்கள் அனுமதியில் பாரபட்சம் காட்டலாமா என்ற கேள்விக்கு, ஐக்கிய முன்னணி அரசு, அந்த கல்வி நிலையங்களின் சிறுபான்மை குணத்தை காப்பாற்றுவதற்காக அவை அனுமதியில் பாரபட்சம் காட்டலாம் என்று கூறியது. ஆனால், தேசிய முன்னணி அரசு, மாணவர்களை, பெரும்பான்மை சேர்ந்தவர்கள், சிறுபான்மை சேர்ந்தவர்கள் என பாரபட்சம் காட்டக்கூடாது என கூறுகிறது.

உயர்கல்வி நிறுவனங்களும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கு, 1997இல் அரசாங்கம், அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்கள், இந்திய மருத்துவ கவுன்ஸில், ஆல் இந்திய டெக்னிகல் எசுகேஷன் போன்ற மற்ற நிறுவனங்களால் மேற்பார்வை பார்க்கப்பட வேண்டும் எனக் கூறியது. அரசாங்கம், ஏற்கெனவே இருக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிகளைச் சுட்டிக்காட்டி, ஆர்டிகிள் 30, உயர்கல்வி நிறுவனங்களையும் சேர்த்துக்கொள்கிறது எனக் கூறியது.

ஒரு மாநிலத்தில், மொழிச் சிறுபான்மையாக இருக்கும் ஒரு சமூகம், இன்னொரு மாநிலத்தில் பெரும்பான்மையாக இருந்தாலும், இன்னொரு மாநிலத்தில் சிறுபான்மையாக இருக்கும் இடத்தில் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்கலாம் என அரசாங்கம் கூறுகிறது. ஒரு உள் மதக் குழுமம் (sect) மதம் அல்ல என்பதால், அதற்கு தனி மத அந்தஸ்து கிடையாது எனவும் அரசாங்கம் கூறுகிறது. ஆகவே, ஆர்டிகிள் 30இன் கீழ் அவை பலனை அடையமுடியாது. அரசாங்க உதவி பெற்ற சிறுபான்மை கல்வி நிலையங்களை நடத்த முடியாது. ஆனால், அது ஒன்றுதான், 97க்கும் இன்றைக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.

***

அவுட்லுக் பத்திரிக்கையிலிருந்து

Series Navigation

author

பாவ்தீப் கங்

பாவ்தீப் கங்

Similar Posts