சின்ன கவிதைகள் – 3

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

ஆனந்தன்


வெட்கப்படு பெண்ணே..!
உன் உதட்டில் பூக்க
அந்த புன்னகைக்கும்
ஆசை!

0

அந்த பூவின் கண்களில்
பொறாமை
உன் உதட்டில்
பூத்த புன்னகையைப்
பார்த்து!

0

அதிர்ஷ்ட மச்சத்திற்கும்
அதிர்ஷ்டம் தான்
உன்
கீழ் உதட்டின் ஓரத்தில்
சிரிக்க!

0

பெண்ணே!
என்னை கோபித்துக் கொள்ளேன்,
பீளிஸ்..!
உன் பிடியில் அந்த
கோபம் கூட
அழகுதான்!

0

மெல்ல நட பெண்ணே..!
நீ
புயலெனக் கடக்கும் போது
என் மேல் வீழும்
காற்று கூட
என் உயிரை
அசைத்து பார்க்கிறது…!

0

எனை நோக்காதே
கண்ணே…!
நம் பார்வைகள்
கலந்தால் கரைவது
என் உயிர் மட்டும் தான்!

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்