சித்ராதேவி

This entry is part 7 of 7 in the series 20000507_Issue

கே. ஆர். அய்யங்கார்


ஒரு முடிவில்லாத சாலை. சாலையில் சத்ய நாதர் ஓடிக் கொண்டிருந்தார். சாலை தொடர்ந்து நீண்டுகொண்டே போனது. மூச்சு ரைக்க ரைக்க சற்றே நின்ற போது எங்கிருந்தோ அந்த அழகி தோன்றினாள். எங்கோ பார்த்த முகம். ‘சத்ய நாதரே. எதற்காக ஐயா ஓடுகிறீர், எனக்கு சாஸ்வதமான உயிர் கொடுத்துவிட்டாரே. உமக்கு நான் பாிசு தர வேண்டாமா ‘ எனச் சொன்னாள் சத்யனாதன் மலங்க மலங்க திகைத்து விழிக்கையிலேயே காட்சி மாறியது. சாலை மறைந்து மலைப்பிரதேசமாகக் காட்சி அளிக்க அந்தப் பெண் ‘அதோ அது தான் என் பாிசு ‘ எனச் சொல்லி மறைய, அவள் காட்டிய திசையில் மலையில் ருந்து ஒரு பாறை கனவேகமாக அவரை நோக்கி உருண்டோடி வந்தது. தப்பிப்பதற்காக மறுபடி ஓட முற்பட்டு கற்தடுக்கி கைகள் பரப்பிக் கீழே விழ அந்தப் பாறையானது அவரது வலது கையின் மீது ஏறி றங்க….

சத்யநாதன் விழித்துக் கொண்டார். அட என்ன கனவு து. எதற்காக ப்படி. யோசித்தவண்ணம் திரும்பிப் பார்த்தார். அருகில் சித்ரா தேவி. ஆடைகள் சற்றே நெகிழ்ந்திருக்க கண்கள் அழகாய் மூடியிருக்க சற்றே மெலிதான புன்முறுவலுடன் உறங்கிக் கொண்டிருந்தாள். அங்கு ஏற்றப்பட்டிருந்த தீபத்தின் ஒளியிலும் அவளது விகல்பமில்லாத அழகு மின்னியது. பக்கத்துப் பஞ்சணையைப் பார்த்தார். ராகுலன் சின்னக் கைகளைத் தலைமேல் வைத்த வண்ணம் உறங்கிக் கொண்டிருந்தான்.அறையின் சாளரம் வழியாக வானத்தைப் பார்த்தார். அந்தச் சிறு டைவெளியில் ருட்டுத் தான் தொிந்தது. ன்னும் விடியவில்லை.

மெல்ல றங்கி அந்த அறையில் ருந்து வெளிவந்து உப்பாிகைக்கு வந்தார். பெளர்ணமிக்கு முதல் நாள் என்பதால் நிலவு அழகாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் நட்சத்திரங்கள். ராஜகுமாாியும் சேடிப்பெண்களும் போல ருக்கிறது என நினைத்துக் கொண்டார் சத்ய நாதன். அந்த உப்பாிகை மூன்றாவது அடுக்கு என்பதால் அங்கிருந்து எதிரே கொஞ்சம் தொலைவில் யமுனை நதியின் சலனம் தொிந்தது. நிலவின் வெள்ளிக்கிரணங்கள் அதன் மீது பிரதிபலிக்க அது மென்மையாய்ச் சிாிக்கும் சிறு பெண்ணைப்போல சிற்றலைகளுடன் ஓடிக்கொண்டிருந்தது. அதன் மறுவிளிம்பில் அந்த விந்தை நின்று கொண்டிருந்தது. பளிங்கினால் கட்டப்பட்ட பானு மஹலின் மேல் நிலவு தன் கிரணங்களைப் பாய்ச்சியதால் அவை தங்கமாகி மின்னின. அதன் பிரதிபிம்பம் யமுனை நதிக்கரையில் பிரதிபலிக்கக் கண்கொள்ளாக் காட்சியாக ருந்தது.

பானு மஹலைப் பார்க்கப் பார்க்கப் பரவசமானார் சத்யநாதன். சாதாரண விஷயமா து. எத்தனை நாள் கனவு. எவ்வளவு நபர்கள் சேர்ந்து உழைத்த அதிசயம். து உருவாவதற்குத் தானும் ஒரு காரணம் என எண்ணுகையில் மனது மகிழ்ந்து துள்ளிக் குதித்தது.

நினைவுகள் பின்னோக்கிப் போயின. ருபது வயதில் தனது தந்தையுடன் போய் வேலை நடப்பதைப் பார்த்துக் கொண்டது, உஸ்தாத் அஹமத் லஹெளாியின் சித்திரங்களுடன் தனது தந்தையின் சித்திரங்களையும் சேர்த்து நிகழ்ந்த சம்பாஷணையில் தானும் உடன் ருந்தது. பானு மஹல் கட்டத்துவங்கிய ரு வருடங்களில் தனது தந்தை அரவம் தீண்டி மாண்டது. பின்னர் அஹமத் லஹெளாி முழுநம்பிக்கையுடன் பேரரசர் ஷாஜஹானிடம் தன்னைப் பற்றிச் சொல்லி தனது தந்தையின் டத்தில் தான் வந்தது போன்றவற்றை நினைத்துப் பார்த்தார். ஒன்றா ரண்டா பதினைந்து வருடங்கள். மொத்தமாய்ப் பதினேழு வருடங்கள் எவ்வளவு முறை போயிருப்பேன். எத்தனை மாறுதல்கள் நானும் குரு அஹமத் லஹெளாியும். அங்கேயே தங்கி ஒரு படைப்பிாிவைப் போல வேலைசெய்பவர்களைப் பிாித்து அதற்குத் தகுந்தவர்களைத் தலைவராக்கி அவர்களையும் மேற்பார்வைபார்த்து, முக்கியமான சில சித்திரங்களை நானே வரைந்தேன். சக்கரவர்த்தி பார்த்து வியந்தார். பிறந்தது தென்னாடு தான். அவர் பேசும் உருது மொழியில் சரளமாய்ப் பேசியதும் ன்னும் அன்பு கொண்டார். திருக் குர் ஆனின் வார்த்தைகளைப் பதிப்பிக்கும் யோசனை சொன்னது நானென்று குரு சொல்லிவிட நன்று என்று எப்படி உரக்கச் சொன்னார்.

சக்கரவர்த்தியும் எப்படிப்பட்டவர். தனது காதல் மனைவி சொன்ன வார்த்தைக்காக வ்வளவு செலவு செய்து எப்பேர்ப்பட்ட விந்தையை உருவாக்கிவிட்டார். ன்னும் பேரரசி பாக்மதி பானு பேகம் நினைவாகவே ருக்கிறார்.

அவரது ஆழ்ந்த சிந்தனையைக் கலைத்தது மெலிதாகக் கேட்ட செருமல். திரும்பினார். சித்ரா தேவி. கேசம் கலைந்து நெற்றியில் சற்றே புரள, விழிகளில் ன்னும் சிவப்பிருக்க திலகம் முகத்தில் சற்றே அழிந்திருக்க அதுவே அவளது அழகுக்கு அழகூட்ட நின்றிருந்தாள். ‘என்ன சிற்பியாரே அதிகாலையில் என்ன யோசனை.ன்னும் வெள்ளி முளைக்கவில்லையே ‘ எனக் கேட்டாள்.

‘உறக்கம் கலைந்தது சித்ரா. எனவே உன்னைத் தவிர நான் விரும்பும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன் ‘ என்றார் சத்யநாதன்.

‘அதைத் தான் பதினேழு வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே. ன்னும் என்ன ‘ என்றவண்ணம் அவரது தோளில் சாய்ந்து கொண்டாள். உப்பாிகை வழியாக சில்லென்ற தென்றல் காற்று அவர்களை வருடிவிட்டுச் சென்றது.

மெல்ல அவளை அணைத்த வண்ணம் நடந்து அங்கிருந்த ருவர் அமரத்தக்க ஊஞ்சலில் தானும் அமர்ந்து அவளையும் அமர வைத்தார்.

‘சித்ரா. மஹலைப் பார்ப்பதில் எனக்கு எப்படி சலிக்க முடியும். எத்துணை நாள் கனவு.எவ்வளவு உழைப்பு. அது ஒருவழியாய் முடிந்து விட்டது என்று எண்ணும் போது கொஞ்சம் ஆச்சர்யமாகக் கூட ருக்கிறது ‘

‘என்னவோ சொல்லுங்கள். ஏதோ முடிந்து விட்டது என்று சொல்லுகிறீர்கள், மீண்டும் ஆரம்பிக்காமல் ருந்தால் சாி ‘

‘ ஏன் சித்ரா ந்த சலிப்பு ‘

‘நான் எங்கு சலிப்படைந்திருக்கிறேன். எனது பத்து வயதில் உங்களுக்கு மணம் புாிந்து வைத்தார்கள். அப்பொழுதெல்லாம் என்னைப் பார்த்திருக்கிறீர்களா. மலர்ந்து உங்களுக்காக மணம்வீசக் காத்திருந்தபோது என்னை நினைத்திருக்கிறீர்களா. எப்போதும் மஹல் மஹல் என்ற நினைப்பில் தான் ருந்தீர்கள். உங்களைத் தொடர்ச்சியாகப் பலமாதங்கள் பார்க்காமல் ருந்திருக்கிறேன். ஒரு தவமாய் நீங்கள் வேலை செய்து கொண்டு ருந்தீர்கள். உள்ளே உறங்கும் ராகுலன் கூட… ‘

கூறி வருகையிலே சித்ராவின் முகம் சிவந்தது. ‘ மூன்று வருடங்களுக்குமுன் தே போல ஒரு பெளர்ணமிப் பொழுதினில் வேலையெல்லாம் முடிந்து விட்டது என்று என்னிடம் வந்திருந்தீர்கள். அப்போது மயங்கியபோது தான் வன் பிறந்தான். மறுபடியும் வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சென்று விட்டார்கள் ‘

தோளில் சித்ராதேவியைச் சாய்த்து அவள் விழிகளைக் கூர்ந்து கவனித்தார் சத்யநாதன். ‘மேலும் சொல் சித்ரா ‘

‘என்ன சொல்வதற்கிருக்கிறது. மறுபடியும் பானு மஹல் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒன்று. தங்களின் முக்கிய பங்கினால், தாங்கள் வகிக்கும் முக்கியப் பொறுப்பினால் நானும் பயனடைந்து ருக்கிறேன். அரண்மணையில், தெருக்களில் போனாலும் தலைமைச் சிற்பியின் மனைவி என்று மாியாதையுடன் பார்க்கிறார்கள். ளவரசிகள் ரோஷனாரா,ஜஹானாரா அன்புடன் ருக்கிறார்கள். மறுபடியும் போய்விடுவீர்களா ‘

‘ல்லை சித்ரா. முடிந்து விட்டது. சக்கரவர்த்தி கூட ன்று அரண்மனைக்கு வரச் சொல்லியிருக்கிறார். என்னையும் என்னைப் போன்ற தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் நூறு பேரையும். அவர்களில் முதல்வன் நான் என்பது தான் உனக்குத் தொியுமே. ஏதோ பாிசு கொடுக்கப் போகிறாராம். எதற்குப் பாிசு. ப்படிப்பட்ட விந்தையை வடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் ‘

‘நன்றாய் ருக்கிறது நீங்கள் சொல்வது. குடும்பத்தை, சொந்த ஆசைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு நீங்கள் வேலை செய்திருக்கிறீர்கள். அவருக்கென்ன சக்கரவர்த்தி. காதல் மனைவிக்கு அழகாய்க் கல்லறை எழுப்ப வேண்டுமென்று ஏகச்செலவு செய்திருக்கிறார். உங்களுக்கும் கொடுப்பதில் குறைந்து விடாது ‘ எனச்சொன்ன சித்ராதேவி ‘உங்களிடம் ஒன்று கேட்க ஆசைப் படுகிறேன் ‘ என்றாள்.

‘சொல் சித்ரா ‘ என்றார் சத்யநாதன்.

‘ உங்கள் தந்தையும் தென்னாட்டிலிருந்து தான் ங்கு வந்தார். நானும் தென்னாட்டிலிருந்து உங்களை மணம் புாிவதற்காக பன்னிரு வருடங்களுக்கு முன் ங்கு வந்தேன். எனது தாயாாின் தாயார் அங்கே தெற்கே குருவாயூர் என்ற டத்தில் ப்போது ருக்கிறாளாம். போன தடவை வணிகர்கள் ங்கு வந்தபோது அவர்களிடம் சேதி அனுப்பி ருந்தாள். நம் ராகுலனைப் பார்க்க ஆசைப் படுகிறாள். அங்கே உள்ள குட்டிக் கிருஷ்ணனையும் நாம் பார்க்கவேண்டும் நீங்கள் மன்னாிடம் சொல்லிவிட்டு என்னுடன் வரவேண்டும். நாமும் ஒரு ஆறு மாதங்கள் அந்தப்பக்கம் போய் வரவேண்டும். நிறைவேற்றுவீர்களா ‘ என்றாள் சித்ரா தேவி.

வானில் வெள்ளி முளைப்பதற்கான அறிகுறிகள் தொிந்தன.

‘அதற்கென்ன ஆகட்டும் சித்ரா ‘ என்றவண்ணம் அவளை மென்மையாக முத்திட்டார் சத்யநாதன்.

********************

சித்ராதேவி பஞ்சணையில் புரண்டாள். காலையிலேயே சத்யநாதன் கிளம்பி அரண்மணைக்குச் சென்றுவிட்டார். பிறகு சற்று நேரம் கழித்து எழுந்து காலை வேலைகளை முடித்துக் கொண்டு ராகுலனை கவனித்துக் கொண்டு ருந்ததில் நேரம் ஓடி விட்டது. மதிய உணவை முடித்துக் கொண்டு மூன்றாம் மாடியில் ருந்த தனது அறையில் வந்து விழுந்து களைப்பில் உறங்கி விட்டாள். மெலிதாக விழிப்பு வர பஞ்சணையில் படுத்தபடி யோசித்தாள். அறை மூலையில் ஒரு மேஜையின் மீது ரு பொம்மைகளைக் கண்டாள். ரண்டும் யானைகள் ஒன்று மரத்தால் ஆனது. கரு வண்ணம் பூசப் பட்டது. ன்னொன்று பளிங்கினால் செய்யப் பட்டது மரயானையைப் பார்த்ததும் அந்த நாளின் நினைப்பு வந்தது.

திருமணமான புதிதில் பத்து வயது சின்ன சித்ரா மலங்க மலங்க விழித்தவாறே சத்யநாதனிடம் கேட்டாள் ‘ உங்களை எப்படிக் கூப்பிடுவது ‘ சத்யநாதன் சிாித்தார். ‘ என் பெயரைச் சொல்லியே கூப்பிடேன் ‘ ‘ல்லை.அது தவறு என்று பாட்டி சொல்லியிருக்கிறாள் ‘ ‘உனக்குத் தோன்றியதைச் சொல்லி அழை ‘

‘நீங்கள் உங்கள் தந்தையைப் போல சிற்பம் வடிப்பீர்களா ‘

‘தந்தையிடம் தான் அதைக் கற்றுக் கொண்டேன், கட்டிடக் கலையும் கற்றுக் கொண்டு ருக்கிறேன் ‘

‘பின் உங்களை சிற்பியாரே என்று கூப்பிடட்டுமா ‘ குறுகுறுத்த விழிகளுடன் கேட்ட குழந்தைத் தனத்தை நினைத்து சிாித்த வண்ணம் சாியென்றார் சத்யநாதன்.

சில நாட்கள் கழித்து அவளிடம் ந்த மரயானையைக் கொணர்ந்து கொடுத்தார். ‘து நானே செதுக்கியது சித்ரா, உனக்காக ‘ என்றார். அகமகிழ்ந்து அதை வாங்கிக் கொண்டாள் சித்ரா. அப்போதெல்லாம் அந்த யானையும் அவளுடனேயே உறங்கும்.

பளிங்கினால் செய்த யானை ராகுலன் பிறந்த பிறகு அவனுக்காக அவர் செய்தது.

காலையில் நிகழ்ந்த பேச்சுக்களையும் அதன் பின் நிகழ்ந்த நிகழ்வுகளையும் நினைத்த சித்ராதேவியின் முகத்தில் வெட்கம் அரும்பியது. ‘அதனால் தான் நான் தூங்கி விட்டேன் போலும். மாலைப் பொழுது ஆகியிருக்குமோ.ன்னும் வரைக் காணோமே ‘ என யோசித்தவண்ணம் பணிப் பெண் நஸ ‘மாவைக் கூப்பிட்டாள்

நஸ ‘மா வர சற்று எழுந்து அமர்ந்து கொண்டு ‘நஸ ‘மா, அந்தச் சதுரங்கப் பலகையை எடுத்து வா. விளையாடலாம் சிறிது நேரம் ‘ என்றாள்

அவள் கொண்டு வரவும் ருவரும் விளையாட ஆரம்பித்தனர். ‘ ராகுலன் என்ன செய்கிறான் நஸ ‘மா ? ‘ ‘அவன் கீழே ரஜாயாவுடன் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு தூங்கி விட்டான் தலைவி ‘ என்றாள் நஸ ‘மா.

விளையாட்டில் சிறுபொழுது போக, நஸ ‘மா ‘தலைவி த்துடன் நிறுத்திக் கொள்ளலாம் ‘ என்றாள்:

‘ஏன் ‘

‘ன்னும் நான் ஒரு நகர்வு செய்தேனென்றால் உங்கள் ராஜா கைது செய்யப் படுவார். எனில் நிறுத்திக் கொள்ளலாம் ‘

‘பரவாயில்லை.செய். பயப்படாதே. உன்னை ஒன்றும் சொல்ல மாட்டேன் ‘ என்றாள் சித்ரா.

நஸ ‘மா நகர்த்த சித்ராவின் வெள்ளை ராஜா செயலிழந்து போவது போல் தோன்ற, சித்ரா தனது வெள்ளை ராணியை நகர்த்தினாள். அவளின் செய்கையில் வெள்ளை ராணி வெட்டுப் பட்டது. ‘எப்படியோ ராஜாவைக் காப்பாற்றிவிட்டார்கள் தலைவி ‘

‘பிறகு. என் ராஜா செயலிழக்கையில் நான் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும். அது என்ன சத்தம் ரதம் வருவது போலிருக்கிறதே ‘

ருவரும் எழுந்து உப்பாிகையிலிருந்து பார்த்த போது அரண்மணை ரதம் வாயிலில் நின்றிருந்தது. அங்கிருந்து சில காவலர்கள் நிறைய கூடைகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். மாலை வெய்யில் சற்றே சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. எங்கே சிற்பியார் எனத் தேட சத்யனாதன் ன்னொரு ரதத்தில் வந்து றங்கினார். உடலைப் பொன்னிற சால்வையினால் போர்த்தியிருந்தார். கீழிருந்தே சித்ராவைப் பார்த்துத் தான் மேலே வருகிறேன் என்றார்.

சில நிமிடங்களில் மேலேயும் வந்தார். அவர் வரவும் நஸ ‘மா விலகி உள்ளே சென்றாள்.

‘என்ன வ்வளவு பொழுது ? ‘

‘என்ன பண்ணுவது சித்ரா. மன்னர் கொஞ்சம் காத்திருக்க வைத்துவிட்டார். சில வெளிநாட்டுப் பிரமுகர்கள் வந்திருந்ததால். ‘

‘என்ன பாிசு கொடுத்தாரா ? ‘

‘அது தான் பார்த்தாயே. கூடைகூடையாக முத்துக்கள், மணிகள், உனக்கு விதவிதமான பட்டுச் சேலைகள், ராகுலனுக்கு உடைகள் ன்னும் பலப்பல கொடுத்திருந்தார் தைத் தவிர நாம் ருக்கும் ந்த ஏழடுக்கு மாளிகை, மற்றும் காஸாயாபாத் அருகே ஒரு சிறு கிராமம் ‘ சற்றே சோர்வாகச் சொன்னார் சத்யநாதன்

தொடர்ந்தார் ‘ அது மட்டுமல்ல சித்ராதேவி. அவர் ஒரு பாிசும் கேட்டார் ‘ எனச் சொல்லி நிறுத்தினார்.

‘என்ன அது ? ‘

அது வரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் சத்யநாதனிடம் மேலெழுந்தது. குரல் தழுதழுத்தது. ‘ என்னை ஊமையாகச் சொன்னார் சித்ராதேவி ‘

பஞ்சணையில் அமர்ந்திருந்த சித்ரா சரேலென எழுந்தாள். அவர் அருகில் சென்றாள் தோளைத்தொட்டு ‘என்ன சொல்கிறீர்கள் ? ‘ எனக் கேட்ட போது அந்தச் சால்வை விலகியது

வலது கையின் நுனியில் ஒரு பச்சிலைக் கட்டு போடப் பட்டிருந்தது. கொஞ்சம் ரத்தமும் காய்ந்திருந்தது.

‘என்னது து ? ‘ சித்ரா வீறிட்டாள். ‘ சித்ரா, பதற்றப் படாதே. நான் சொல்வதைக் கேள். பானு மஹலைப் போல வேறொன்று ந்த உலகத்தில் ருக்கக் கூடாதாம். நாங்கள் அதை மறுபடியும் அதன் சாயலிலாவது படைத்து விடலாம் என பயப்பட்டார் பேரரசர்.அதற்காக என்னையும் ன்னும் சில பேர்களையும் தங்கள் விரல்களைத் தியாகம் பண்ணச் சொன்னார். எனவே து. விரல்களைத் துண்டாக்கிய பிறகு நான் மயங்கி விழுந்து விட்டேன். பின்னர் பச்சிலை வைத்துக்கட்டுவதற்கே வ்வளவு நேரம் ஆகிவிட்டது. அதனால் தான் து ‘

சத்யநாதன் மேலும் மேலும் கூறிக்கொண்டிருந்தது சித்ராவின் காதில் ஏறவில்லை, கட்டுப்பட்ட கையையே பார்த்தாள்.

‘என்ன ஒரு தைாியம். என்ன ஒரு திமிர் அவருக்கு ‘

‘சித்ரா ‘

‘சும்மா ருங்கள். எனக்கு ஆற்றாமை பொங்கி வருகிறது. மன்னனே ஆனாலென்ன. அவருக்குத் தானே நீங்கள் ராப்பகலாக உழைத்தீர்கள். எத்தனை வருடங்கள் .எத்தனை ரவுகள் பகல்கள் ந்த விரல்களால் வரைந்த சொற்சித்திரங்கள் எத்தனை. அவரது மனைவியின் கல்லறை எல்லோரும் வியக்கும் வண்ணம் வரைபடம் வரைந்தது யார். பளிங்குக் கற்கள் , மரகதக் கற்கள் மற்றும் பலவிதமான முத்துக்கள் எல்லாவற்றையும் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் வணிகாிடம் சொல்லி பார்த்துப் பார்த்து வாங்கியது யார் ? ‘

‘சித்ரா ‘

சித்ராதேவி மேலும் கண்ணீருடன் தொடர்ந்தாள். ‘ பதினான்கு குழந்தைகள் பெற்றபிறகு பதினைந்தாவது குழந்தைப் பிறப்பின் போது தானே அவர் மனைவி பானு அவரைவிட்டு பிாிந்தாள். அவருக்கெப்படி அவள் மீது உண்மையான காதல் என்று சொல்ல முடியும், அதற்கு வேறு வொரு வார்த்தை ருக்கிறது.

உங்களை உங்கள் விரல்களை ஊமையாக்கிப் பார்க்க யார் அவருக்குச் சொன்னார்கள். எல்லாம் திமிர் தான். பிற்காலத்தில் உலகமே பானுமஹலைப் பார்த்து வியக்கலாம். காதலிக்காக ந்தப் பேரரசர் அதிசயமான ஒன்றைப் படைத்து விட்டார் என்று. ஆனால் ன்று என்னைப் பொறுத்தவரை அங்கே பானு மஹலில் ருப்பது அவர் மனைவியின் சமாதியல்ல. உங்களைப் போன்ற கலைஞர்கள் பலரது விரல்களின் சமாதியாகத் தான் தொிகிறது ‘

சித்ரா குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். என்ன செய்வதென்று தொியாமல் திகைத்தவண்ணம் அவளை டது கரத்தினால் அணைத்துக் கொண்டார்.

சித்ராதேவி விலகினாள். ‘எத்தனை தடவை நீங்கள் அங்கே வேலைகள் நடக்கும் போது சென்றிருந்தபோது உணவெடுத்து வந்திருப்பேன். அப்போது அருந்திவிட்டு அயர்ந்து தூங்கும் போது உங்கள் விரல்களையே பார்த்து கொண்டிருப்பேன். என்னவொரு மாய விரல்கள் வை என்று. அதைப் போயா வெட்டினார் அவர் ‘

‘சித்ரா. கொஞ்சம் அடங்கேன் ‘

‘நான் னிமேல் அடங்குவதாயில்லை. சற்று நேரமுன்னர் தான் நஸ ‘மாவிடம் சொன்னேன். எனது ராஜாவிற்கு ஒன்றென்றால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ப்போது என்னைப் பார்க்க வைத்துவிட்டானே ஆண்டவன் ‘ என்றவண்ணம் எழுந்து அந்த அறையில் ருந்த ஒரு பெட்டியைத் திறந்தாள் சித்ராதேவி.

‘எல்லாம் செய்துவிட்டு பாிசுகள் பொற்காசுகள் வேறு கொடுக்கிறாரா சக்கரவர்த்தி. தோ ங்கு நீங்கள்,உங்கள் குரு அஹமத் லஹெளாி முதலியவர்கள் வரைந்த வரைபடங்கள். வையும் உங்கள் விரல்களுடன் சாம்பலாகட்டும் ‘ என்றவாறே அந்தத் துணிகளையெல்லாம் அந்த அறையிலே போட்டு அங்கு ருந்த தீபத்தால் அதைப் பற்ற வைத்தாள் சித்ரா. சத்யநாதனால் அவளைத் தடுக்க யலவில்லை

கொழுந்து விட்டொிந்த துணிக்குப்பலைப் பார்த்தவாறே சொன்னாள் சித்ரா;

‘தயவு செய்து பேரரசாிடம் கூறிவிடுங்கள் தாங்கள் தென்னாட்டுப்பக்கம் செல்வதாக. திரும்புவதற்கு ஆறு மாதங்கள் ஆகுமென்று. நாம் தென்னாடு சென்று அங்கேயே தங்கி விடுவோம். திரும்பி வரவேண்டாம். அந்த மஹலைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கு உங்கள் விரல்களின் ஞாபகம் தான் வரும். தயவு செய்து செய்வீர்களா. ‘ கண்ணீருடன் கேட்டாள் சித்ரா.

சத்யநாதன் சாியென்று சொன்னார். மேலும் சொன்னாள் சித்ரா. ‘ என் சிற்பியாரையும், மற்ற கலைஞர்களையும் ஈவிரக்கமில்லாமல் வ்வண்ணம் செய்தவர் நன்றாக ருப்பார் என நினைக்கிறீர்களா. அவர் னி றுதிக்காலத்தில் அந்த மஹலுக்குக்கூட ப் போக முடியாது ‘ பேசிக்கொண்டிருந்தவள் குரலுடைந்து கீழே அமர்ந்து அழலானாள்.

வெளியில் யமுனை நதிக்கரைக்கு மறுபுறமிருந்த பானு மஹலின் மீது மாலைக் கதிரவன் தனது கிரணங்களைப் பாய்ச்ச அது சிவந்து அதன் பிரதிபலிப்பு ஒரே செவ்வண்ணமாய் யமுனையில் தொிந்தது.

*************************

சில சமயங்களில் அஷ்டத்திக்கு பாலகர்கள் நாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பார்களாம் அவர்களுக்குத் தோன்றிய பொழுதில் ாததாஸ்துா(அவ்வண்ணமே ஆகட்டும்) என்றுவிடுவார்களாம் சித்ராதேவி கூறியதும் அவர்களின் செவிகளில் விழுந்திருக்குமோ. எனில் பானு மஹல் என்று சொல்லப் பட்ட, தாஜ்–மஹல் என்று சொல்லப்பட்ட, தாஜ் மஹாலை றுதிக்காலத்தில் ஷாஜஹானால் அருகில் சென்று பார்க்க முடியவில்லை என்பதும்,அதைப் பார்த்துக் கொண்டே அவர் உயிரை விட்டார் என்பதும் சாித்திரம்

**********************************

பின்னுரை: என்றோ கேட்டது – சிறுவயதில் எனது சாித்திர ஆசிாியரோ வேறு யாரோ சொன்னது – தாஜ்மஹாலைக் கட்டியதும் ஷாஜஹான் அதைக் கட்டியவர்களின் விரல்களை வெட்டினான் என்று. எனவே ந்த நூலிழைக் கற்பனைக்கு சாித்திர முலாம் பூசலாம் என வலைப்பக்கங்களில் நுழைந்தால் கிடைக்கும் தகவல்கள் ஆச்சாியமாக ருக்கின்றன. (சில பக்கங்கள் தாஜ்மஹல் – தமிழ்த் திரைப்படம் என வெறுப்பேற்றுகின்றன)

P.N.Oak என்பவர் தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப்படுவதற்கு முன்பே ருந்தது என்றும் அது தாஜபிலேஸ்வரர் கோவில் என்னும் ஹாந்துக்களின் கோவில் என்றும் கூறுகிறார். ஏன் ஷாஜஹான் கட்டியிருந்தால் அதைப் பற்றிய வரைபடங்கள் ருக்கவேண்டுமே. ஏன் ஒன்று கூடக் கிடைக்கவில்லை என்கிறார். சொல்லும் தகவல்கள் சுவாரஸ்யமாய் ருக்கின்றன. ஹாந்து மத சாஸ்திரப் படிதான் கட்டப் பட்டிருக்கிறது என்றும் மேலும் பல தகவல்கள் தருகிறார்.

விாிந்த பல பக்கங்கள் கட்டி முடித்திருக்கும் வருடங்கள் எண்ணிக்கை பதினேழு முதல் ருபத்திரண்டு என்கின்றன. ன்னும் சில தாஜ்மஹால் ராஜ புத்திரப் பெண்களின் மாளிகை என்கின்றன

எது எப்படியாயினும் தாஜ்மஹால் நமது நாட்டில் ருக்கும் னிய அதிசயம் தான். அதன் மீது எனக்கு எப்பொழுதும் பிரமிப்பும் பாசமும் உண்டு. காலம் காலமாக காதலிக்காக கட்டப் பட்ட ஒரு காவியம் என்றே சொல்லி வருவது போலவே நினைக்கத் தோன்றுகிறது.

ந்தச் சிறுகதை கற்பனையே.

 

 

  Thinnai 2000 May 07

திண்ணை

Series Navigation

கே.ஆர். அய்யங்கார்

கே.ஆர். அய்யங்கார்