This entry is in the series 20040219_Issue

கவிநயா


உனக்காகப் பல கோடி
தீபங்கள் ஏற்றி வைத்தேன்
உள்ளே இழுத்து விட்ட
ஒரே மூச்சில் அணைத்து விட்டாய்

வரவேற்க வண்ண வண்ணக்
கோலங்கள் போட்டு வைத்தேன்
நுழைகையிலே கால்களினால்
மிதித்துக் கலைத்து விட்டாய்

நீ நடக்கும் பாதையெங்கும்
பூ விரித்துக் காத்திருந்தேன்
நடந்து வரும் போதே நீ
நசுக்கிக் கசக்கி விட்டாய்

கனவு பல தேக்கி வைத்து
கற்பனையில் வாழ்ந்த என்னை
சட் டென்று எழுப்பிடவே
சாட்டை அடி தந்தாயோ ?

Series Navigation