சிதைந்த இரவிலொன்று

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

இளங்கோ


இலக்கியம் பேச மாலையில் வருவதாய்
கூறிய பனிப்பொழுதில்
நேரந்தாழ்த்தி நிகழ்கிறது
அவன் வருகை

குரூரம் வழியும் நவீனத்துவம்
எதற்கென விலக்கி
எதிரேயிருந்த
இரவுவிடுதியுள் நுழைகிறோம்

நள்ளிரவுக்கப்பாலும் தொடர்கிறது
மதுவும் நடனமும்

ாீடோ மோலின்*
அழுக்குவழியும் நடைவழிப்பாதையில்
ஜாஸ் கலைஞனை
உச்சிமோர்ந்து முத்தமிடும்
சப்வே பிச்சைக்காாிமேல்
ஒன்றிப்போகிறது அவன் கவனம்

அந்தக்காட்சியை
அற்புதமென வர்ணிக்கிறான்
தோழியருடன் சூழவிருந்து
பாீட்சைக்கு தீவிரமாய் கற்கும்
ஓர்பொழுதிற்கு தொடர்பற்று

நான் இடைமறிக்கையில்
இருத்தலின் இல்லாமை
குறித்துப்பேச போதிய அவகாசமில்லை;
விாிவுரைகளுக்கு ஒழுங்காச்சென்று
கற்றலும் விவாதித்தலும்
வாழ்வின் அபத்தத்தினை
ஆறப்போடுமென்கிறான்

இன்று
எல்லாவற்றிலும் நியாயத்தின் திசை
நிற்குமவன் நெஞ்சுறுதி
என்னுள் அச்சமூட்ட
அவனுறவைத் துண்டித்து
காத்திருக்கின்றேன்
நள்ளிரவிற்கான கடைசி பஸ்சிற்காய்

காலம் இப்படித்தான்
நல்லவர்களை நகர்த்தி
வீணேகழியும் மெளனமாய்
நினைவுகளை மட்டும்
வழிநெடுகிலும் எாியவிட்டு.

**
**
இளங்கோ
2001.06.01
**
* Rideau Mall – A largest mall in Ottawacl

Series Navigation

இளங்கோ

இளங்கோ