This entry is in the series 20100620_Issue

வே பிச்சுமணி



சிட்டு க்குருவிகளின் கிசு கிசுத்த
காதல் பேச்சில்
தூக்கம் கலைந்த ஆதவன்
சினம் கொண்டு சிவந்தான்
சுட்டெரிக்க பின் தொடர
மரங்களில் மறைந்தன குருவிகள்
கோபத்தில் தவறுதலாக கழுகுகளின்
கழுத்தை கறுக்கினான்
குருவிகள் கொரில்லா போர் முறையில்
ஆதவனிடம் விளையாட்டு காட்டின
நடுவானம் வந்து
மனிதனை வெறுப்பேற்றினான்
குடைகொண்டு தன்னாட்சி செய்த
மனிதனின் அறிவு வியந்து
சிட்டுக் குருவி மீதான கோபம் சொன்னான்
ஆதவனுக்கு உதவ
மனிதன் கைபேசி கோபரங்களை நட்டு
சிட்டு குருவிகளின் சிறகுகளை
காட்டுக்குள்ளே முடக்கினான்

Series Navigation