சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -10

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

சாக்ரடிஸ்

******************************

Fig. 1
Trial of Socrates

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -10

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

நீதிபதி ·பிளிப்: போதும் நிறுத்து சாக்ரடிஸ் ! முப்பெரும் தேசத் துரோகங்களுக்கு உம்மைக் குற்றம் சாட்டியோர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! சாக்ரடிஸ் நாடு கடத்தலை ஏற்றுக் கொள்கிறார். அல்லது ஒரு மினா பணத்தை அபராதம் கட்ட ஒப்புக் கொள்கிறார். நாங்கள் எமது தீர்ப்புக் தண்டனையைத் தீர்மானித்து விட்டோம். (நீதிபதிகள் சைரஸ், டிரிப்தோலிமஸ் ஆகியோர் இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்துப் பேசிய பிறகு) நீதிபதிகள் உமக்கிடும் தண்டனை இதுதான் ! மரண தண்டனை ! ஆம் மரண தண்டனை ! சாக்ரடிஸ் ! நீ கெம்லாக் நஞ்சைக் குடித்து மடிய வேண்டும் ! அந்த நாளை நாங்கள் பின்னொரு சமயம் குறிப்பிடுவோம்.

(லைகான், மெலிடஸ், ஆனிடஸ் மூவரும் எழுந்து கைகுலுக்கிக் கொண்டு கைதட்டுகிறார். நீதி மன்றத்தில் கைதட்டல்களும் ஆரவாரக் கூச்சல்களும் செவியைப் பிளக்கின்றன. சாக்ரடிஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.)

சாக்ரடிஸ்: (எல்லோரையும் சுற்றி நோக்கி கைநீட்டி) உங்கள் எல்லோருக்கும் தெரியும், நான் மரண தண்டனையை எதிர்பார்த்தேன் என்று. மன்றத்தின் வழக்கு விசாரணை எனக்கு மரண தண்டனை விதிப்பதில் வென்று விட்டது ! முதலில் என் நற்குண நண்பருக்கு நன்றி கூற வேண்டும். என்னை விடுவிக்க ஓட்டளித்தமைக்கு ! என்னைக் காப்பாற்றி விடலாம் என்று கனவு கண்டதற்கு ! என்னைத் தப்புவிக்க அனுதினம் ஆர்வமோடு இருந்ததற்கு ! ஆனால் நாமொன்று நினைக்க விதி ஒன்றைச் செய்யும் ! மரண தேவன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான். மரண தேவனுக்கு அழைப்பு விடுத்த பிறகு யாரும் அவனை நிறுத்த இயலாது ! நேர்மை நெறிக்கு மதிப்புக் குறைவு ! உண்மை காலெடுத்து வெளியே எட்டு வைப்பதற்குள் பொய்மை ஊரை மூன்று முறை சுற்றி விடுகிறது ! மரணம் முழங்கை தூரத்தில் இருக்கும் எனது நண்பன் ! முடிவில் எல்லாம் மரணத்தில்தான் சங்கமம் அடையும் ! தப்பிக் கொள்ள நான் ஓடிப் போய் விடலாம் ! எங்கே ஓடுவது ? எந்த நாட்டுக்குள் ஒளிந்து கொள்வது ? எந்த நகரில் பாதுகாப்புக் கிடைக்கும் ? மரணப் பாதையில் யார் நம்முடன் கூட வருவது ? மறைந்து கொள்ளத் தூண்டுவது மரண மில்லை, தீய எண்ணம். முதிய இந்த வயதில் மெதுவாய் நடக்கிறேன். நான் சாவதற்கு முன் எனக்குத் தண்டிப்பு மரணமா ? மரணம் இப்போது என்னைக் கைவிடாது ! வயதாயினும் மரணம் என்னை விடாது. இளைஞாயினும் மரணத்திலிருந்து தப்ப முடியாது. பழி சுமத்தியோர் பரவசம் அடைய எனக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. செத்தவன் கடன் அடைக்க மாட்டான் ! வாழ்வது மரணம் அடைவதற்கு ! பிறப்பதின் விதி முறை முடிவில் இறப்பது ! அப்படி எண்ணினால் மரணம் ஒன்றுமில்லை ! கனவற்ற உறக்கம் மரணம் ! உறங்குவது போல்வது இறப்பு ! உறங்கி விழிப்பது போல்வது பிறப்பு ! ஒரு நாணயத்தின் ஒரு முகம் பிறப்பு ! மறு முகம் இறப்பு ! இறப்பதற்கு அஞ்ச வில்லை நான் ! பிறந்ததற்கு வருந்த வில்லை நான். நித்திய உறக்கம் இறப்பு ! உதய சூரியன் எழுப்பாத உறக்கம். சுடுகாட்டுப் பீடத்தில் அமர்ந்து நீதிபதிகள் தீர்ப்பளித்தார். தீர்ப்பைக் கையில் வைத்துக் கொண்டு என்மீது வழக்காடல் செய்தார். ஞான மேதைகள் நீதிபதிகளாய் இருந்தால் என் வார்த்தைகளுக்கு மதிப்புக் கிடைத்திருக்கும். மன்றத்தில் என் மனத்தைக் காயப் படுத்தினார் ! என் சிந்தனகளைக் கேலி செய்தார். கால தேவன் எனக்குக் கை விலங்கு போட்டிருக்கிறான். உமது வேலை முடிந்தது ! என் பணியும் முடிந்தது ! நீவீர் வாழச் செல்கிறீர் ! நான் சாகச் செல்கிறேன். கடவுள் ஒருவர்தான் அறிவார் எது நெறி, எது வெறி என்று. புனித தேவதை இறுதியில் என்னைப் பார்த்து உன் இனிய இச்சை என்ன வென்று கேட்டால், ‘மீண்டும் நானிந்த ஏதென்ஸ் நகரில் பிறக்க வேண்டும்,’ என்று நான் சொல்வேன் ! நீதிபதி அவர்களே ! உங்கள் ஏகோபித்த தீர்ப்புக்கு
என் மறுப்பு எதுவும் இல்லை !

Fig. 2
Hemlok Poison to
Socrates

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! மீண்டும் ஒருமுறைச் சொல்கிறேன் ! உன் தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை. நீ கெம்லாக் நஞ்சைக் குடிக்க வேண்டும் நாங்கள் குறிப்பிடும் நாளில் ! (காவலரை பார்த்து) அவரைச் சிறைக்குக் கொண்டு செல்வீர் ! நீதி மன்ற வழக்காடல் இத்துடன் முடிந்தது !

(காவலர் விலங்கிட்ட சாக்ரடிஸை அழைத்துச் செல்கிறார். நீதிபதி ·பிளிப் மனக் குழப்பம் அடைந்து விரைவாக எழுந்து செல்கிறார்)

நீதிபதி சைரஸ்: (காவலன் ஒருவனைப் பார்த்து) யார் அரசாங்கக் கைதிகளை மேற்பார்வை செய்கிறார் என்று தெரிந்து என்னைக் காணும்படி உடனே அழைத்து வா. (மெதுவாக) யாரும் அறியக் கூடாது எந்தச் சிறையில் சாக்ரடிஸ் அடைபட்டுள்ளார் என்று ! யாரும் அவரைக் காணக் கூடாது ! யாரும் சாக்ரடிஸை மீட்க வந்தால் அவரை உடனே கொன்று விட வேண்டும் ! அவரை நான் நாட்டு துரோகிகள் என்று பழி சுமத்துவேன் !

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சைரஸ் ! இந்த வெறியும், வெறுப்பும் நம்மை வெறியர் என்று காட்டும். இந்தக் கடும்போக்கு நமக்குத் தேவையில்லை. யாரும் சாக்ரடிஸைக் காப்பாற்றத் துணிய மாட்டார் ! அப்படி நடந்தாலும் தண்டித்த பிறகு சாக்ரடிஸ் தப்பிச் செல்ல உடன்பட மாட்டார் !

சைரஸ்: என்னருமை டிரிப்தோலிமஸ் ! தெரிந்துகொள், மிக நெருங்கிய ஓட்டு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தவர் சாக்ரடிஸ் ! அவரைக் காப்பாற்றப் பல நண்பர் காத்திருக்கிறார். நாம் தாமதம் செய்யக் கூடாது ! நாள் கடத்தாமல் நாளைப் பொழுதிலே தண்டிப்பு நாளைக் குறித்திடுவோம் ! நமது முதல் வேலை அதுதான் நாளைக் காலையில் !

(சைரஸ் எழுந்து வெளியேறுகிறார். டிரிப்தோலிமஸ் தலையில் கை வைத்துச் சிந்தனையில் ஆழ்கின்றார். பொது மக்களும், ஜூரர்களும் கலைந்து மன்றத்தை விட்டு வெளியேறுகிறார்)

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++
ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 2, 2009)

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
The Trial of Socrates

“புறப்படும் வேளை வந்து விட்டது எனக்கு ! நாம் அவரவர் பாதைகளில் போகிறோம், நான் சாவதற்கு, நீவீர் வாழ்வதற்கு ! கடவுளுக்கு மட்டும் தெரியும் எந்தப் பாதை மிகச் சிறந்தது என்று. ஆழ்ந்து சிந்திக்காத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”

“நான் கிரேக்கனோ அல்லது ஏதென்ஸ் நகரத்து மனிதனோ அல்லன். ஆனால் நானோர் உலகக் குடிமகன்.”

“எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -9

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

Fig. 2
Judges Philip & Cyrus Plotting to Kill
Socrates

நீதிபதி ·பிளிப்ஸ்: சாக்ரடிஸ் ! உன்னைக் குற்றம் சாட்டியவர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! மாறாக நீ என்ன தண்டனைத் தேர்ந்தெடுக்கிறாய் ? உனக்கு அவ்வுரிமை தரச் சட்டம் அனுமதிக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்டதை யாம் முடிவு செய்வோம். உனக்கு மூன்றில் ஒருபங்கு ஆதரவாளர்தான் இருக்கிறார். நீவீர் தேர்ந்தெடுக்கும் சட்ட விதிக்குட்பட்ட தண்டனையைப் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்.

சாக்ரடிஸ்: எனக்கு நானே தண்டனை இட்டுக் கொள்ள என்ன இருக்கிறது ? எந்தக் குற்றமும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. நீவீர் சாட்டிய எந்தக் குற்றதையும் நான் ஏற்றுக் கொண்டதும் இல்லை. இங்கு ஜூரர்களில் பெரும்பான்மையோர் என்ன முடிவு செய்தார் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நீதிபதி சைரஸ்: சாக்ரடிஸ் ! உமக்கு விழுந்த ஓட்டுக்களின் எண்ணிக்கை பற்றி உளவிக் கருத்தாட எமக்கு அங்கீகாரம் உள்ளது.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீயே சொல் உன் குற்றத்துக்கு உகந்த தண்டனையை !

சாக்ரடிஸ்: அப்படியானால் சொல்கிறேன். நான் இதுவரைச் செய்தவை என்ன என்று முதலில் பார்க்கலாம். குணம் நாடிக் குற்றமும் நாடித் தீர்ப்பு அளிப்பீர் ! நான் நாட்டு விடுதலைக்குப் பகைவரை எதிர்த்துப் போராடினேன் ! உமது வாழ்வுக்கு நீங்கள்தான் பொறுப்பாளிகள் என்று மனிதக் கடமையைச் சுட்டிக் காட்டினேன். தேசத்தின் செல்வாக்குக்கும் சீரழிவுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நீண்ட காலமாய்ச் சொல்லி வருகிறேன். நான் வறுமையில் உழன்றாலும் உம்மை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறேன். நானிப்படிச் சமூகத்தின் நலனுக்காக மெய்வருந்தக் கூடாது என்று என் மனைவி தினமும் என் கன்னத்தில் இடிக்கிறாள். இவற்றை எல்லாம் தீர்ப்புக்கு எடுத்துக் கொண்டால், தண்டனையாக என்னை ஏதென்ஸ் நாட்டிலிருந்து நாடு கடத்தலாம். நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்தினால் என் வயதான மனைவிக்கு ஆயுள் பூராவும் ஓய்வு ஊதியம் (பென்சன்) அளிக்கும்படி வேண்டுகிறேன். அல்லது நீங்கள் எனக்குப் பண அபராதம் விதிக்கலாம். நான் செல்வந்தனாக இல்லாததால் பெரிய தொகை தர இயலாது. என்னால் சிறிதளவுத் தொகை தர முடியும். என் ஆலோசனை ஒரு மினா (Mina means Ancient Greek Money about 5 dollar) அபராதம் ! அது மிகச் சிறு தொகை என்று எனக்குத் தெரியும். அதுதான் உமக்குக் கிடைக்கும் ! அதுதான் என்னிடம் இருப்பது ! நாடு கடத்தலா இல்லை பண அபராதமா ? நீதிபதி அவர்களே ! அது உங்கள் முடிவு !

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! உமக்குத் தெரிகிறதா ? உமது ஆலோசனைத் தண்டனைக்கும் வழக்கிட்டோர் விதித்துள்ள தண்டனைக்கும் இடைப்பட்ட ஒரு முடிவை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்பது எங்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. சட்டம் வேறெதைத் தேர்ந்திடவும் வழி காட்டவில்லை. ஆனால் உமது ஆலோசனைத் தண்டனை வேடிக்கையாக உள்ளது, மூன்று பெரும் தேசத் துரோகங்களுக்கு ஒரு மினா அபராதமா ? எங்களுக்குக் கெட்ட பெயர் கிடைக்க வழி செய்கிறீர். நாடு கடத்தினால் மீண்டும் ஏதென்ஸ் நாட்டுக்குள் புகுவாய் என்னும் புகார் எழுந்துள்ளது.

சாக்ரடிஸ்: அபராதத் தண்டனைக்கு ஓர் ஏழை எளியன் தன் உடைமை அனைத்தையும் சமர்ப்பிப்பான் என்பது உங்கள் நினைப்பா ? நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஓப்புக் கொள்ளாத குற்றங்களுக்கு எப்படி நீங்கள் தண்டனை இடலாம் நீதிபதி அவர்களே ? ஒன்றும் இல்லாதவன் என்று நினைத்துத்தானே என்னை நீங்கள் அவமானப் படுத்துகிறீர் ! என்னுடைய அபராத தண்டனை ஆலோசனையை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

நீதிபதி ·பிளிப்: போதும் நிறுத்து சாக்ரடிஸ் ! முப்பெரும் தேசத் துரோகங்களுக்கு உம்மைக் குற்றம் சாட்டியோர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! சாக்ரடிஸ் நாடு கடத்தலை ஏற்றுக் கொள்கிறார். அல்லது ஒரு மினா பணத்தை அபராதம் கட்ட ஒப்புக் கொள்கிறார். நாங்கள் எமது தீர்ப்புக் தண்டனையைத் தீர்மானித்து விட்டோம். (நீதிபதிகள் சைரஸ், டிரிப்தோலிமஸ் ஆகியோர் இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்துப் பேசிய பிறகு) நீதிபதிகள் உமக்கிடும் தண்டனை இதுதான் ! மரண தண்டனை ! சாக்ரடிஸ் ! நீ கெம்லாக் நஞ்சைக் குடித்து மடிய வேண்டும் ! அந்த நாளை நாங்கள் பின்னொரு சமயம் குறிப்பிடுவோம்.

(லைகான், மெலிடஸ், ஆனிடஸ் மூவரும் எழுந்து கைகுலுக்கிக் கொண்டு கைதட்டுகிறார். நீதி மன்றத்தில் கைதட்டல்களும் ஆரவாரக் கூச்சல்களும் செவியைப் பிளக்கின்றன. சாக்ரடிஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.)

Fig. 3
The Final Verdict to
Socrates

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 25, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -5

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Trial of Socrates

“ஒரு செல்வந்தன் தனது சொத்து சேமிப்பைப் பற்றிப் பெருமை அடைந்தால், எப்படி அவன் அந்தப் பணத்தைச் செலவழிக்கிறான் என்று அறிவதற்கு முன்னே அவனைப் பற்றி ஒருவர் புகழக் கூடாது.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ அறிவன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் மெய்ஞானிகள் அல்லது தீர்க்க தரிசிகளிடம் காணப்படும் ஒருவகைத் தன்னுணர்ச்சி அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -5

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

சாக்ரடிஸ்: நான் நம்புவதை பிறருக்குச் சொல்லித் தருகிறேன். கடவுளைப் பற்றி அறிவதை உமது சேமிப்புச் செல்வத்துக்கு மேலாக, உயிர் வாழ்வுக்கும் மேலாக மதிக்க வேண்டும். ஏனெனில் சேமிப்புச் செல்வமும், சுகபோக வாழ்வும் நேர்மை நெறியைப் புகட்ட மாட்டா ! கடவுளைப் பற்றி அறியும் உயர்ந்த ஞானமே அவற்றைத் தர வல்லது. நேர்மை நெறியிலிருந்து பொது மனிதப் பண்பாடும் தனி மனிதப் பண்பாடும் உருவாகின்றன. நான் கடவுளைப் பற்றி வாலிபருக்குக் கூறியவை நாட்டுத் துரோகம் என்று கூறப்பட்டால், என்னைக் குற்றவாளி என்பவர் வெற்றி பெற்றவர் ஆவார். நான்தான் தீயவன் ஆவேன். நான் தண்டிக்கபட வேண்டியவன் ஆயினும் அந்தத் தண்டனை என் கருத்துகளை ஒருபோதும் மாற்ற முடியாது.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் கடவுளின் நியதியை முறிக்க வில்லை என்று வாதாடுகிறீர். மனிதர் உமது குற்றத்தை மறந்து விட வேண்டும் என்று பிழைத்துக் கொள்ள நினைக்கிறீர். மனிதரோடு கடவுளும் உம்மை மன்னித்து விட வேண்டும் என்று எதிபார்க்கிறீர். அவை ஒருபோதும் நிறைவேறா !

சாக்ரடிஸ்: ஏன் அப்படிச் சொல்கிறீர் நீதிபதி அவர்களே ?

டிரிப்தோலிமஸ்: இரண்டு கால் மனிதரை நீவீர் வேதாந்த முகில் படிந்த இரண்டு கால் பொதி மூட்டையாய் மாற்றப் பார்க்குகிறீர். ஏதென்ஸ் நகரக் கடவுளை நீவீர் எப்போதும் மதிப்பவதில்லை !

சாக்ரடிஸ்: அது உண்மை நீதிபதி அவர்களே !. வெறுப்பும் பொறாமையும் நிரம்பிய ஏதென்ஸ் நகரத் தெய்வங்கள் எந்தப் புனித மனிதருக்கும் ஏற்றவை அல்ல ! அவற்றைப் புராணக் கதைகளில் ஓய்வெடுக்க விட்டு விடுவீர் !

டிரிப்தோலிமஸ்: இந்த துணிச்சலான தெய்வ அவமதிப்பு சாக்ரடிஸின் தலைக் கர்வத்தைக் காட்டுகிறது. இது தெய்வத் துரோகம் ! தேசத் துரோகம் ! தண்டிக்கப் பட வேண்டிய துரோகம் ! நாங்கள் ஒரு கருவியாய் அதைக் காட்டித் தண்டனையைக் கண்டு களிக்க எமக்கோர் வாய்ப்பு கிடைத்துள்ளது !

லைகான்: கேட்டீரா சாக்ரடிஸ் ? நீதிபதி ஒருவர் இப்போதே உமக்குத் தீர்ப்பளித்து விட்டார் !

சாக்ரடிஸ்: நான் கேட்ட வினாவுக்கு இன்னும் எனக்குப் பதில் கிடைக்க வில்லையே ! உலகக் கடவுள் ஒன்றை நான் மதிப்பது தவறென்று யாரும் கூறவில்லையே ? அந்தக் கடவுள் ஏதென்ஸ் நாட்டுக்கும் தெய்வமே ! அதை நீவீர் நிராகரிக்க வில்லை ! ஆகவே என் போக்கில் தவறில்லை என்பதை நான் சொல்லலாமா ?

லைகான்: பாருங்கள் இந்த வேடிக்கை மனிதரை ! எப்படியெல்லாம் தனது கருத்தைத் திரித்துத் தான் தப்பிக் கொள்ள முனைகிறார் என்று பாருங்கள். ஏதென்ஸ் சும்மா விடாது நம்மை இந்தக் கிழவரை நாமின்று அவிழ்த்து விட்டால் ! குற்றங்களைக் கூறி ஜூரரிடம் விட்டு ஓட்டெடுங்கள் !

(ஒரே ஆரவாரம் ! கூக்குரல் ! “ஓட்டெடுப்பீர்” என்று ஒரே கூட்டொலி ! )

நீதிபதி ·பிளிப்: பயப்படாதே சாக்ரடிஸ் ! உன் சார்பாக நீ வாதாடுவதைத் தொடர் ! உனக்கு ஒன்றும் தீங்கு நேராது இங்கு ! அஞ்சாதே சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: அச்சம் என்றால் என்ன ? எனக்கு அச்சம் என்றால் என்ன வென்று தெரியாது ! என் எதிர்ப்பாளர் தண்டனையை நான் நீதி மன்றத்துக்கு வரும் முன்னே தீர்மானித்து விட்டார் ! நான் சொல்வது அவரது செவிகளில் நுழைவதில்லை ! அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் என்னைக் காயப் படுத்தவும் அவர் தயாராக உள்ளார்.

லைகான்: நாங்கள் ஏதென்ஸ் குடிமக்கள் ! எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை !

சாக்ரடிஸ்: (சாந்தமாக) நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்துவீர் ! சிறையில் தள்ளுவீர் ! அல்லது கொன்று விடுவீர் ! ஆனால் யாரும் காயப் படுத்த முடியாது என்னை ! காயப் படுத்துவது உடலையன்று, உள்ளிருக்கும் ஆத்மாவை ! தீய வினை செய்து நீவீர் காயப் படுத்துவது என் ஆத்மாவை இல்லை ! உமது ஆத்மாவை !

லைகான்: ஏதென்ஸ் நகருக்கு எதிராகப் பாபங்களைச் செய்து நீவீர் எவரது ஆத்மாவைக் காயப் படுத்துகிறீர் ?

சாக்ரடிஸ்: நீவீர் பாபங்கள் புரிவது கடவுளுக்கு எதிராக ! எனக்கு எதிராக இல்லை. எனது கடவுள் ஏதென்ஸ் நகரத்தில் இல்லை ! எனது கடவுள் எங்கும் பரவி இருக்கிறார்.

லைகான்: சிந்தித்துப் பேசு சாக்ரடிஸ் ! ஏதென்ஸ் நீ பிறந்த பூமி ! உன் தந்தை நாடு ! மகன் தந்தைக்குச் செய்யும் கடமையைச் செய் ! ஏதென்ஸ் நீரைத் தினமும் நீ அருந்துகிறாய் ! அதில் விளைந்த தானியத்தை உணவாகத் தின்கிறாய் ! உன்னைப் பாதுகாக்கிறது ஏதென்ஸ் ! அதன் கலாச்சாரத்தில் மூழ்கியவன் நீ ! நீவீர் அங்கே உறங்குகிறீர் ! உலவுகிறீர் ! உபதேசம் செய்கிறீர் ! விழித்துப் பார் சாக்ரடிஸ் சாவதற்கு முன் ! பார் உன் நாட்டை ! எப்படி நீ அதைத் தூற்றுகிறாய் சீரழிக்கிறாய் என்று சிந்தித்துப் பார் ?

சாக்ரடிஸ்: சிற்பச் சிலைகள் நிரம்பி யுள்ளது ஒரு நகரைக் காட்டாது ! மனித இதயங்களில் நாடும் வாழ்க்கையும் உள்ளன. சில்லிட்ட சிலைகள் வெறும் சின்னங்கள் மட்டுமே ஆகும் ! லைகான் ! நானும் பார்க்கிறேன் ! ஆனால் நான் ஏதெஸில் காண்பது என்ன ? வாழும் மனிதத் தசைகள் எலும்புக் கூட்டில் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நான் காணும் ஏதென்ஸ் உயிரிழந்து கொண்டிருக்கிறது. பளிங்குக் கூண்டு கற்பனைக் காட்சியாக ஏமாற்றிக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் ஒருபோதும் சீராய் இருந்ததில்லை. மனித மூளையில் ஒட்டடை மண்டி உளுத்துப் போயுள்ளது ! அதைத் துடைக்க முயன்றவன் நான் ! என்னை ஒழிப்பதால் அந்த ஓட்டடை நீங்கிப் போகாது ! சிந்தித்துச் செய்வீர் சீமான்களே !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 28, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
The Trial of Socrates

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ ஞானமன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் தீர்க்கதரிசிகள் அல்லது தேவ தூதரிடம் காணப்படும் ஒருவகை உள்ளுணர்வு அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயமாகத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -2

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதாரமற்றது ! இதுவரை யாரும் அதற்குச் சான்றுகள் தர வில்லை.

ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! இந்தக் கிழவர் கூறுவது பொய். என் வாலிப மகனைக் கெடுத்தவர் இந்தக் கிழவர். நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.

மாஜிஸ்டிரேட் ·பிளிப்: சாக்ரடிஸ் ! உங்களுக்கு ஆனிடஸ் மகனைத் தெரியுமா ?

சாக்ரடிஸ்: ஆமாம் தெரியும் எனக்கு. ஒரு சிலநாட்கள் என்னுடன் பழகினான்.

ஆனிடஸ்: அத்துடன் என் மகன் சில நாட்கள் சாக்ரடிஸ் இல்லத்தில் தங்கினான். என் மகனை மயக்கி என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டவர் இந்தக் கிழவர். எங்கள் இல்லத்தை மறக்கும்படி மகன் மீது தனது அறிவுக் கவர்ச்சியை வீசியவர் இந்தக் கிழவர்.

·பிளிப்: சாக்ரடிஸ் ! ஆனிடஸ் மகனை ஏன் அவனது வீட்டுக்கு அனுப்பவில்லை ?

சாக்ரடிஸ்: அவன்தான் தன் வீட்டுக்குப் போவதை விரும்பவில்லை ! நான் போகச் சொன்னாலும் அவன் போக மறுத்தான்.

ஆனிடஸ்: என் மகனைக் கிழவர் ஏன் தன் வீட்டில் தங்க வைத்தார் என்று கேளுங்கள்.

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! போக மறுக்கும் வாலிபன் கழுத்தைப் பிடித்து என்னால் தள்ள முடியாது. அவன்தான் விரும்பி என்னோடு இல்லத்தில் தங்கினான்.

ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! (தயங்கிக் கொண்டு) சாக்ரடிஸ் இருபால் (Bisexual) இச்சை உள்ளவர் !

·பிளிப்: சாக்ரடிஸ் ! இது உண்மையா ? நீவீர் இருபால் இச்சை உள்ளவரா ?

சாக்ரடிஸ்: (தயங்கிய வண்ணம்) ஆமாம் நீதிபதி அவர்களே !

·பிளிப்: சாக்ரடிஸ் ! உமக்கும் ஆனிடஸ் மகனுக்கும் முரணான உடற் தொடர்புண்டா ?

சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே !

·பிளிப்: நீவீர் உண்மையைச் சொல்கிறீரா ?

சாக்ரடிஸ்: உண்மை ! நான் சொல்வது முற்றிலும் உண்மை ! உண்மை தவிர வேறில்லை ! எனக்கும் ஆனிடஸ் மகனுக்கும் உடற் தொடர்பில்லை !

ஆனிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இந்தக் கிழவரை நான் நம்பமாட்டேன் ! இவர் சொல்து அனைத்தும் பொய். என் மகனைக் கெடுத்தவர் இவர் ! இவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் !
இந்தக் கிழவர் மற்ற ஆடவரிடம் உடலுறவு வைத்திருந்ததை நான் அறிவேன்.

·பிளிப்: சாக்ரடிஸ் ! நீவீர் வேறு சில ஆடவரோடு உடற் தொடர்பு கொண்டது உண்மையா ?

சாக்ரடிஸ்: உண்மை. ஆனால் ஆனிடஸ் மகனோடு நான் உடற் தொடர்பு கொள்ளவில்லை !

ஆனிடஸ்: கிழவர் பொய் சொல்லித் தப்பிக் கொள்ள முனைகிறார். நீதிபதி அவர்களே ! நம்பாதீர் இவரை ! என் தொழிலில் ஈடுபடாமல் என் மகனைத் தடுத்தவர் இந்தக் கிழவர் !

·பிளிப்: ஆனிடஸ் ! உன் தொழில் என்ன வென்று சொல் முதலில் !

ஆனிடஸ்: தோல் பதனிடுவது எனது தொழில் கனம் நீதிபதி அவர்களே ! இவரைச் சந்தித்த பிறகு என் மகன் தோலைத் தொடுவதில்லை ! தோல் செப்பணிடும் தொழிலில் ஈடுபடுவதில்லை.

·பிளிப்: சாக்ரடிஸ் ! தந்தை செய்யும் தோல் பதனிடும் தொழிலில் மகன் ஈடுபடக் கூடாது என்று நீவீர் தடுத்தீரா ?

சாக்ரடிஸ்: நான் தடுக்க வில்லை கனம் நீதிபதி அவர்களே ! ஆனிடஸ் மகன் மேற்படிப்புக்கு போக விரும்பினான். நான் அதை ஊக்கிவித்தது உண்மை ! ஆனால் அதற்குத் தந்தையுடன் செய்யும் தொழில் இடையூறாக இருக்குமே என்று எச்சரித்தேன். ஆனால் நான் தோல் பதனிடும் தொழிலை விட்டுவிடச் சொல்லி வற்புறுத்த வில்லை ! மேற்படிப்பு முக்கியமா குடும்பத் தொழில் முக்கியமா என்று முடிவு செய்தவன் ஆனிடஸ் மகன் ! நான் அதற்குப் பொறுப்பாளி அல்லன். தந்தையின் தொழில் முக்கிய மென்றால் மகனைத் திருப்பும் பொறுப்பு தகப்பனைச் சார்ந்தது. தகப்பனால் மகனைத் தன் தொழிலுக்குத் திருப்ப முடியவில்லை என்பது உண்மை.

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 7, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப்

Fig. 1
Statue of Socrates

“ஓர் ஆத்மா தன்னை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது ஆத்ம நன்னெறி, ஞானம் போன்ற துறைகளைத் தேடும் மற்றோர் ஆத்மாவோடு ஈடுபட வேண்டும். யாராவது கூற முடியுமா புரிதலும், அறிதலும் மேவிய ஆத்மாவை விடத் தெய்வீகம் பெற்ற ஒன்று இருக்குமா என்று ? அப்போது அத்துறையே எல்லாவற்றையும் புரிந்து, அறிந்து கொண்ட தெய்வீக உணர்வு பெற்றுத் தன்னையும் உணர்ந்திடும் பண்பாடைப் பெறுகிறது.”

“ஞானமும், திறமையும் கொண்டுள்ள ஒருவரை நாம் உடனே தெரிந்து கொள்கிறோம். அவை அவனுடைய உடல் தோற்றத்தையோ, செல்வத்தையோ, அதிகார ஆற்றலையோ சார்ந்தவை அல்ல.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -3

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதி·பிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.

Fig. 2
Socrates & Plato
In Athens

சாக்ரடிஸ்: நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியக் கவனம் செலுத்தி எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு ஏதென்ஸ் வாலிபரை எல்லாம் வசப்படுத்திக் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே. என்னை அவர் தண்டிப்பதை நான் தடுக்கப் போவதில்லை !

யூதி·பிரோ: இப்படி நீங்கள் தணியக் கூடாது. உன்னத குறிக்கோளில் அறிவை விருத்தி செய்யும் நீங்கள் மூடருக்கு அடிபணியக் கூடாது.

சாக்ரடிஸ்: நான் சொல்வதில் நியாயம் அநியாயம், நல்லது, கெட்டது, அழகானது அவலட்சணமானது எவை என்று கூறுவாய் ? அவற்றின் வேறுபாட்டை அறிவதில்தான் எனக்கும் அரசுக்கும் மனப்போர் ! மனிதருக்கு மனிதர் மதிப்பளிக்காததால் ஒருவர் கூறுவதை ஒருவர் புரிந்து கொள்ளாமல் புகார் செய்கிறார் !

யூதி·பிரோ: இவற்றை எல்லாம் ஒவ்வொருவர் தமது கண்ணோட்டத்தில்தான் ஆராய்வார் ! நியாயமாக நீங்கள் கருதுவதை அடுத்தவர் அநியாயமாக எடுத்துக் கொள்வார் !

Fig. 3
Socrates Argues with People

சாக்ரடிஸ்: மெய்யான கருத்தோட்டம் ! மனிதர் நல்லது கெட்டது எதுவென நினைக்கும் போது தெய்வங்கள் எது நியாயம் எது அநியாயம் என்று சொல்வதுண்டா ?

யூதி·பிரோ: தெய்வங்கள் கூறுவதாக எதுவும் தெரியவில்லை ! மனிதர்தான் தெய்வங்கள் கூறுவதாக எழுதியிருக்கிறார்.

சாக்ரடிஸ்: மெய்யான வாசகம் யூதி·பிரோ ! ஆனாலும் ஒரு கடவுள் நியாயம் என்று குறிப்பிடுவதை வேறோர் கடவுள் அநியாயம் என்று கூறவில்லையா ? அந்த வேற்றுமை உணர்வால் தெய்வங்களுக்குள் போர் மூண்டதில்லையா ?

யூதி·பிரோ: ஆமாம் சாக்ரடிஸ் அப்படிப் போர்கள் நேர்ந்துள்ளன !

சாக்ரடிஸ்: சரி இதற்குப் பதில் சொல் ! எந்தக் கடவுள் ஏற்றுக் கொள்ளும் நீ உன் தந்தையைச் சிறைப்படுத்தி இருப்பதை ? எந்த தெய்வத்துக்குப் பிடிக்காது ? ஜீயஸ் (Zeus) கடவுளுக்கு நியாயமாகத் தோன்றலாம் ! குரோனாஸ், ஔரானஸ் (Kronos & Ouranos) ஆகிய தெய்வங்களுக்கு அநியாயமாகத் தெரியும் இல்லையா ?

யூதி·பிரோ: சாக்ரடிஸ் ! என் தந்தையை நான் கைது செய்ததை எந்தக் கடவுளும் தவறாக எடுத்துக் கொள்ளாது ! நான் கைது செய்யா விட்டாலும் அநியாயமாகக் கொன்றவர் எவரும் கடவுளால் தண்டிக்கப் படுவர்.

சாக்ரடிஸ்: அதாவது நியாய அநியாயத்தைக் கடவுளே கண்காணித்து வருவதாக நீவீர் இப்போது கூறுகிறீர் ! குற்றம் செய்தோரைத் தெய்வமே தண்டிக்கும் என்னும் கொள்கையை உறுதிப் படுத்துகிறீர். நான் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்து இது !

யூதி·பிரோ: எனக்கு இதில் ஐயப்பாடு இல்லை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: நான் ஒன்று கேட்கிறேன் பதில் சொல் ! நாம் பேசும் போது சொல்வதில்லையா ? சிலர் வழிகாட்டி நடத்துனர் ! சிலர் காட்டிய வழியில் நடப்பவர் ! சிலர் தூக்கிச் செல்பவர் ! சிலர் தூக்கப் படுபவர் ! சிலர் உற்று நோக்குபவர் ! சிலர் உற்று நோக்கப் படுபவர் ! இந்த இருதரப்பாரிலும் வேறுபாடுகள் உள்ளன, எப்படி நேருகின்றன என்று நீவீர் நினைப்பதுண்டா ?

யூதி·பிரோ: ஆம், இருதரப்பாரிலும் வேறுபாடுகள் உள்ளன !

சாக்ரடிஸ்: அப்படியானால் நேசிப்பிலும் ஒருவர் நேசிப்பதிலும் ஒருவர் நேசிக்கப் படுவதிலும் வேறுபாடுகள் உள்ளன அல்லவா ?

யூதி·பிரோ: நிச்சயமாக உள்ளன !

சாக்ரடிஸ்: நேசிக்கப்படுவது தானாக வருவதாகவோ அல்லது ஒன்றால் பாதிக்கப் பட்டதாகவோ இருக்கலாம் அல்லவா ?

யூதி·பிரோ: நிச்சயமாக !

சாக்ரடிஸ்: ஒன்று நேசிக்கப்படும் காரணத்தால் நேசிப்போர் அதனை நேசிக்க வில்லை ! அல்லது நேசிப்போர் நேசிப்பதால் அது நேசிக்கப் படுகிறதா ?

யூதி·பிரோ: மூளையைக் குழப்புகிறதே உங்கள் வினா ! புரியாமல் புரிகிறது !

சாக்ரடிஸ்: புரிந்ததை எடுத்துக் கொள்வோம். அதாவது தெய்வப் பற்றைப் பற்றி நீ சொல்கிறாய். தெய்வப் பற்றைத் தெய்வங்கள் வரவேற்கும் என்று !

யூதி·பிரோ: ஆமாம் நான் அப்படிக் கூறினேன்.

சாக்ரடிஸ்: அது தெய்வப் பக்தி என்பதால் தெய்வங்கள் வரவேற்கின்றனவா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ?

யூதி·பிரோ: வேறெந்தக் காரணமும் இல்லை !

சாக்ரடிஸ்: அதாவது அது நேசிக்கப் படுகிறது காரணம் தெய்வப் பக்தி இருப்பது ! ஆனால் ஒன்று தெய்வ பக்தியில்லை, அது நேசிக்கப்படும் காரணத்தால் !

யூதி·பிரோ: அப்படி ஊகித்துக் கொள்ளலாம் !

சாக்ரடிஸ்: அப்படியாயின் கடவுள் மீது அன்பு கொள்வது பக்தியில்லை ! பக்தியும் கடவுள் நேசிப்பும் ஒன்றல்ல !

யூதி·பிரோ: அதை எப்படிச் சொல்ல முடியும் சாக்ரடிஸ் ?

சாக்ரடிஸ்: மனிதரின் கடவுள் நேசிப்பைத் தெய்வங்கள் வரவேற்றன. ஒன்றைக் கடவுள் நேசிப்பதால் அது நேசிக்கப் படுவதில்லை. !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள்

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((July 7, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates Speaks

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் வசப்படுத்துகிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

“எவன் ஒருவன் ஓடிப் போகாமல் தன்னிலையில் நின்று எதிரியை எதிர்த்துப் போர் புரிவானோ அவனே ஊக்கமுள்ள மனிதன்.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -2

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதி·பிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.

Fig. 2
Last Day of Socrates

சாக்ரடிஸ்: அட கடவுளே ! இது எப்படி நடந்தது ! உனது தந்தை யாரைக் கொலை செய்தார் ! சொந்தக்காரனையா ? அல்லது வழிப்போக்கனையா ? வழிப்போக்கன் ஒருவனாக இருந்தால் தகப்பனை நீ கைது செய்ய மாட்டாய் அல்லவா ?

யூதி·பிரோ: கேலிக் கூத்தாகப் போனது சாக்ரடிஸ் ! மடிந்தவன் யாராய் இருந்தால் என்ன ? சொந்தக்காரனோ, வழிப்போக்கனோ குற்றவாளி செய்தது நியாயமா அல்லது அநியாயமா என்பதை நான் அறிய விரும்புகிறேன். நியாயம் என்றால் அவனை விட்டுவிடலாம். அநியாயம் என்றால் அவனைக் கைது செய்யப்பட வேண்டும் ! ஒரே கூரைக்குக் கீழ் இருந்தாலும் சரி, ஒரே மேஜை மீது உணவு உண்டாலும் சரி, தந்தையோ, தமயனோ யாராயினும் விசாரணைக்கு நான் இழுத்து வருவேன்.,

சாக்ரடிஸ்: கொலை செய்யப்பட்டவன் யார் என்று முதலில் சொல்வாயா ?

யூதி·பிரோ: அவன் எனக்கு முன்பு ஊழியம் செய்தவன். எங்கள் வயலில் வேலை செய்தவன். அவன் குடித்துச் சினமடைந்து என் அடிமைகளில் ஒருவனைக் கொன்று விட்டான். கோபங் கொண்ட என் தந்தை குடிகாரனைக் கட்டிப் போட்டு ஒரு குழியில் தள்ளி விட்டார். அதற்குப் பிறகு மதக் குருவிடம் ஆள் அனுப்பி குற்றவாளியை என்ன செய்வதென்று ஆலோசனை கேட்டார். அதுவரைக் குழியில் கிடப்பவன் என்ன ஆனான் என்று அறியும் ஆர்வமின்றி என் தந்தை சும்மா இருந்து விட்டார். தூதுவன் வந்து பார்த்த போது குழியில் இருந்தவன் பசியாலும், பிணியாலும் இன்னல்பட்டுச் செத்துக் கிடந்தான். நான் அதனால் என் தந்தையாரைக் கைது செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் அது கொஞ்சமும் என் உறவினருக்குப் பிடிக்க வில்லை ! மகன் தந்தையைக் கைது செய்வது தெய்வ அநீதி என்று என்னை இகழ்கிறார் ! அவர் குறிப்பிடும் தெய்வ நீதியும் தெய்வ அநீதியும் எனக்குப் புரியவில்லை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: கடவுள் நீதிக்குப் பணியும் நீ ஆத்ம சுத்தமாக நடந்து கொள்கிறாய் ! தெய்வ நீதி, தெய்வ அநீதி இரண்டையும் அறிந்தவன் நீ ! உன் தந்தையை நீ கைது செய்த போது உனக்குச் சிறிதும் அச்சமில்லை ! உன் கைகள் நடுங்க வில்லை அல்லவா ?

யூதி·பிரோ: ஆம் சாக்ரடிஸ் ! ஆனாலும் நான் சாதாரண மனிதன்தான். ஆயினும் எது நீதி எது அநீதி என்பதைச் செம்மையாக அறியாதவன் இல்லை நான் !

சாக்ரடிஸ்: நான் உனது மாணவனாகப் பயிற்சி அடைந்திருக்க வேண்டும். அப்போது நான் மெலிடஸ் போன்ற மூர்க்கரை நீதி மன்றத்தில் எதிர்த்து வாதாட முடியும் ! என்னைத் தெய்வத் துரோகி என்றும் மெலிடஸ் பழிசுமத்தியுள்ளார் ! உன்னைத் தெய்வத் துரோகி என்று யாராவது பழிசுமத்தி வழக்கில் மாட்டி விட்டால் நீ என்ன செய்திருப்பாய் ?

யூதி·பிரோ: என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். நீங்களும் உங்கள் மீது சுமத்தியுள்ள பழிக் குற்றத்தை எதிர்த்துப் போராட வேண்டும். சிறைக்குள் இருந்து மறைந்து கிடப்பதை விட சுதந்திரப் பறவையாய்த் திரிவது மேலானது ! நீங்கள் உலகுக்குச் செய்ய வேண்டிய சாதனைகள் இன்னும் பல உள்ளன. அவற்றைத் தொடர வேண்டும் நீங்கள்.

சாக்ரடிஸ்: அது நல்ல அறிவுரைதான். ஆனால் நாம் நினைப்ப தெல்லாம் நடப்பதில்லையே !

யூதி·பிரோ: ஒரு குறிக்கோளை மனதில் கொண்டு அதை நிறைவேற்றத் துணிவதுதான் என் கோட்பாடு !

சாக்ரடிஸ்: ஒன்று உன்னைக் கேட்கிறேன். எனக்கு இந்த வேறுபாடுகளைச் சற்று விளக்குவாயா ? எது நீதி ? எது அநீதி ? எது தெய்வ பற்று ? எது தெய்வத் துரோகம் ?

யூதி·பிரோ: நானொரு காவல்துறைப் பணியாளி. என் தொழில்விதி குற்றவாளியைக் கண்டுபிடிப்பது ! அவரைத் தண்டிப்பது ! அது எனது நீதி ! தந்தையானாலும் சரி தாயானாலும் சரி அல்லது மேறு யாராயினும் சரி, குற்றம் இழைப்பாராயின் நீதிதேவன் முன்பு அவர் தண்டிக்கப் பட வேண்டும். அவரைக் காப்பாற்றித் தப்ப வைப்பது அநீதி ! கடவுளுக்கு அஞ்சாமல் பிறருக்குக் குற்றம் இழைப்பவர் தெய்வத் துரோகிகள் ! கடவு?ளை வழிபட்டு மனித நேயம் கொள்பவர் தெய்வப் பற்றுள்ளவர். இவையே என் கருத்து. என் தந்தையைக் கைது செய்யக் கூடாது என்று சொல்வோர் தெய்வத் துரோகிகள் சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: மிகத் தெளிவான விளக்கங்கள் யூதி·பிரோ !

யூதி·பிரோ: இவைதான் கல்மேல் பொறித்த வாசங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். இவை என் தனிப்பட்ட கருத்துக்கள்.

சாக்ரடிஸ்: உன் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். பரிவுக் கடவுளைப் பணியும் நீவீர் இவற்றை எல்லாம் நம்புகிறீரா ? நான் ஒன்று கேட்கிறேன் : கவிஞர்கள் சொல்வது போல் தெய்வங்களுக் குள்ளே சண்டை, சச்சரவு உண்டா ? அவருக்குள் பயங்கரப் பகைமை உண்டா ? நூல்களும், பூர்வீகக் கதைகளும் கூறுவது போல் “அக்ரோபொலிஸ்” *(Acropolis of Athens ) மாளிகைக்குத் தேவதைகளின் அங்கிகள் எடுத்துச் செல்லப்பட்டுப் புனிதமாக்கப் படுகின்றனவா ? இவை யெல்லாம் உண்மை என்று நாம் நம்ப முடியுமா ?

யூதி·பிரோ: இவை எல்லாம் உண்மை இல்லை சாக்ரடிஸ் ! கடவுளைப் பற்றிக் கூறப்படும் பல கருத்துக்கள் மெய்யானவை அல்ல ! அவற்றை நான் கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர் !

சாக்ரடிஸ்: இவற்றை எல்லாம் நான் தெரிந்து கொள்ள விழைகிறேன். அவற்றை அடுத்ததொரு சந்திப்பில் உரையாடுவோம். நானின்று அறிந்து கொள்ள விரும்புவது: வேறென்ன உதாரணங்கள் சொல்ல முடியும் உம்மால் தெய்வப் பற்றுக்கும், தெய்வத் துரோகத்துக்கும் ?

யூதி·பிரோ: சொல்கிறேன் : கடவுள் நெறிக்கு உகந்தது தெய்வப் பற்றுள்ளது. கடவுள் நெறிக்கு அப்பால் பட்டது தெய்வத் துரோகமானது !

சாக்ரடிஸ்: அந்தக் கருத்து சரிதான் ! ஆனாலும் அவற்றுக்குச் சில உதாரணங்கள் கூற முடியுமா ? நாம் இப்போது உரையாடுவதைச் சற்று ஆழ்ந்து உளவுவோம். கடவுளுக்குப் பிடித்த ஒரு வினை அல்லது மனிதன் தெய்வப் பற்றில் சேர்க்கப்படும். கடவுளுக்குப் பிடிக்காத ஒரு வினை அல்லது மனிதன் தெய்வத் துரோகத்தில் இணைக்கப்படும் என்று கூறுவீரா ? மேலும் நாம் கதைகள் கூறி வருகிறோம் : தெய்வங்கள் முரணான கொள்கை உடையவை, ஒன்றை ஒன்று எதிர்த்துப் போரிடுபவை, அவை பகையாளிகள் என்ப தெல்லாம் பரவி உள்ளன அல்லவா ?

யூதி·பிரோ: ஆம் அவை எல்லாம் உண்மைதான்.

சாக்ரடிஸ்: நான் கேட்கிறேன் தெய்வங்களுக்குள் ஏனிந்த வேறுபாடுகள், கோபப்பாடுகள், பகைமைகள், போர்கள் ? அவற்றுக்குக் காரணங்கள் என்ன ? உயர்ந்தது என்றும் தணிந்தது என்றும் தெய்வங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள், பிரிவுகள் ஏற்படாலாமா ? அப்படி மாறுபாடுகள் நேர்ந்தாலும் சண்டை செய்யாமல் சமாதான முறையில் பகைமைத் தவிர்க்கலாமே !

++++++++++++
* The Acropolis of Athens is the best known Acropolis (Greek) in the world. Although there are many other Acropolises in Greece, the significance of the Acropolis of Athens is such that it is commonly known as The Acropolis without qualification. The Acropolis was formally proclaimed as the pre-eminent monument on the European Cultural Herita. The Acropolis is a flat-topped rock which rises 150 m (490 ft) above sea level in the city of Athens, with a surface area of about 3 hectares.
++++++++++++

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((July 1, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
A Double Portrait of
Socrates & Plato

“எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது.”

“நான் கிரேக்கனோ அல்லது ஏதென்ஸ் நகரத்து மனிதனோ அல்லன். ஆனால் நானோர் உலகக் குடிமகன்.”

“புறப்படும் வேளை வந்து விட்டது எனக்கு ! அவரவர் பாதைகளில் போகிறோம் நாம், நான் சாவதற்கு, நீ வாழ்வதற்கு ! கடவுளுக்கு மட்டும் தெரியும் எந்தப் பாதை மிகச் சிறந்தது என்று. ஆழ்ந்து சிந்திக்காத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -1

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதி·பிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.

யூதி·பிரோ: (வியப்புடன்) என்ன சாக்ரடிஸ் ! நீங்கள் நீதி மன்றத்தில் வாசல் முன்னே நிற்கிறீர் ! எதற்காக இங்கே நீங்கள் வரவேண்டும் ? நிச்சயம் நீங்கள் யாரையும் குற்றக் கூண்டில் நிறுத்த வரவில்லை என்று நினைக்கிறேன் !

சாக்ரடிஸ்: ஏதென்ஸ் நகரக் குற்றச் சாட்டு முறையைப் பற்றி நான் என்ன சொல்ல ? குற்றக் கூண்டில் எப்படியாவது ஒருவரைத் தள்ளுவதுதான் சிலருக்குப் பொழுது போக்கு !

யூதி·பிரோ: யாராவது உங்களை நீதி மன்றத்தில் ஏற்றப் புகார் செய்துள்ளாரா ?

சாக்ரடிஸ்: ஆமாம் ஒருவர் என் மீது புகார் செய்திருக்கிறார்.

யூதி·பிரோ: யாரவன் சாக்ரடிஸ் ?

சாக்ரடிஸ்: அவரை எனக்குத் தெரியாது. அவரை மெலிடஸ் என்று அழைக்கிறார். நீண்ட தலைமயிர், குறுந்தாடி, கோண மூக்கு, அகண்ட வாய் ! நீண்ட நாக்கு !

யூதி·பிரோ: எனக்கும் தெரியவில்லை ! என்ன குற்றச் சாட்டைச் சுமத்திருக்கிறான் ?

சாக்ரடிஸ்: நான் செய்யும் தொழில் சட்ட எதிர்ப்பானதாம் ! மெலிடஸ் என்ன குற்றம் சாட்டுகிறான் தெரியுமா ? ஏதென்ஸ் வாலிபர் மனதெல்லாம் வசீகரப்பட்டுப் பாழாகப் போகிறதாம் ! அப்படி வாலிபரைக் கெடுத்தது யாரென்று அவருக்குத் தெரியுமாம் ! என்னுடைய உரையாடல் வாலிபரை வசீகரிப்பதுவாம் ! வாலிபர் மனதில் நஞ்சியிட்டு விட்டாம் ! இந்தப் புகாரை மெலிடஸ் வீடு வீடாய்ச் சென்று கூறி வாலிபரின் தாய்மார்களை மூட்டி விட்டிருக்கிறார். இப்போது என்னைக் குற்றம் சாட்டி அரச நீதி மன்றத்துக்கும் மனுவை அனுப்பியுள்ளார். என்னைச் சிறையில் அடைத்து அவர் ஓர் தேசீயத் தீரராய்ப் பாராட்டுகள் பெறப் போகிறார்.

Fig. 2
Socrates & Alcibiodes

யூதி·பிரோ: இவையெல்லாம் நினைத்தபடி நடக்கும் என்று தோன்றவில்லை எனக்கு ! அதற்கு எதிராக நடக்கும் என்று நான் அஞ்சுகிறேன். உங்களைப் பழிசுமத்தி ஏதென்ஸ் நகர மக்களின் இதயங்களைப் புண்ணாக்கப் போகிறார் ! சொல்லுங்கள், எப்படி வாலிபர் மனதைப் பாழாக்குவதாக உம்மைக் குற்றம் சாட்டுகிறார் ?

சாக்ரடிஸ்: எனக்கே புரியவில்லை ! ஆனால் வியப்பாக இருக்கிறது. மெலிடஸ் சொல்வதெல்லாம் இதுதான் : ஏதென்ஸில் நான் புதிய தெய்வங்களை உருவாக்குவதாகக் குற்றச் சாட்டு ! ஏதென்ஸ் வழிபடும் பண்டைத் தெய்வங்களை நான் நம்புவதில்லை என்றும் குற்றச் சாட்டு !

யூதி·பிரோ: எனக்குப் புரிகிறது நீங்கள் சொல்வது. ஆனால் அவரது கண்களுக்குத் தெரியும் காரணம் வேறு ! உங்களுக்கு ஏதோ தெய்வ அசரீரிக் குரல் கேட்கிறது என்று நீங்கள் சொல்லி வருவது மெலிடஸைத் திகைக்க வைக்கிறது. இதை ஓர் மதச் சார்பான குற்றச் சாட்டாய் எடுத்து அவர் நீதி மன்றத்துக்குப் புகார் செய்ததாக எனக்குத் தெரிகிறது. இதே போல் எனக்கும் முன்பு நேர்ந்திருக்கிறது. தெய்வச் சார்பில் நான் எதிர்காலத்தைப் பற்றி முன்னறிவிப்பு செய்யும் போதெல்லாம் எள்ளி நகையாடி என்னை அவமானப் படுத்தினார். ஆயினும் நான் முன்னறிவித்தவை எல்லாம் நிகழாமல் போகவில்லை ! அதனால் என் மீது பலருக்குப் பொறாமை உண்டானது ! ஆனால் நாமதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. இவற்றை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.

சாக்ரடிஸ்: என்னருமை நண்பா ! அவர் எள்ளி நகையாடுவது ஒருபுறம் இருக்கட்டும் ! ஏதென்ஸ் நகர வாசிகள் தம்மை விடச் சிந்தனை மிக்க நபரைக் கண்டால் வெறுப்படைவதைத் தவிர்க்க முடியாதது ! தனது ஞானத்தை எவரும் போதித்தால் அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது ! தம்மை விடப் பிறர் தாழ்ந்திருப்பதையே அவரால் தாங்கிக் கொள்ள முடியும் !

யூதி·பிரோ: நான் இப்போதெல்லாம் அவரை தடுத்துப் பேசுவதில்லை ! ஒதுங்கிப் போகிறேன்.

சாக்ரடிஸ்: ஆனால் நீ என்னைப் போல் யாருடனும் வாதாடுவதில்லை ! உனது உன்னத சிந்தனையை நீ வெளிக்காட்டுவது மில்லை !

யூதி·பிரோ: சரி அதெல்லாம் போகட்டும் இப்போது என் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள்.

சாக்ரடிஸ்: ஆம் நானும் கேட்க மறந்து விட்டேன். எதற்காக நீதி மன்றத்துக்கு நீ வந்திருக்கிறாய் ?

யூதி·பிரோ: ஒருவரைச் சிறையில் தள்ள வந்திருக்கிறேன்.

சாக்ரடிஸ்: யாரைத் தள்ளப் போகிறீர் ? வாலிபரா அல்லது என்னைப் போல் வயோதிகரா ?

Fig. 3
Statues of Socrates & Plato

யூதி·பிரோ: வயோதிகர் ! ஆனால் உங்களைப் போன்ற ஓர் உத்தமர் அல்லர் ! ஒரு கயவர் !

சாக்ரடிஸ்: (ஆர்வமுடன்) யார் அந்தக் கயவர் ?

யூதி·பிரோ: தந்தையார் ! என்னருமைத் தந்தையார் !

சாக்ரடிஸ்: (வியப்போடு) என்ன ? உமது தந்தையாரா ?

யூதி·பிரோ: ஆமாம், என்னைப் பெற்றவர் ! என்னை வளர்த்தவர் ! என்னை விட்டு விலகிச் சென்றவர் !

சாக்ரடிஸ்: என்ன தவறு செய்தார் உன் தந்தை ?

யூதி·பிரோ: பயங்கரக் கொலை செய்துள்ளார் சாக்ரடிஸ் ! மாபாதகக் கொலை !

சாக்ரடிஸ்: அட கடவுளே ! இது எப்படி நடந்தது ! உனது தந்தை யாரைக் கொலை செய்தார் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((June 24, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -6

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates Statue -1

“எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே அச்சம் இருக்கும். ஆனால் அச்சமுள்ள எல்லா இடத்திலும் மதிப்பு இருப்பதில்லை ! ஏனென்றால் அச்சம் மதிப்பை விட அகண்ட தளத்தில் விரிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம்.”

“ஏனென்று சிந்தித்து வியப்புறுவதில்தான் ஒருவனுக்கு ஞானம் பிறக்கிறது.”

“பொறாமை என்பது ஆத்மாவின் குடற்புண் (Ulcer).”

“பிறர் உனக்குச் சினமூட்டும் ஒன்றை நீ பிறருக்கு உண்டுபண்ணாதே !

சாக்ரடிஸ்

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

Fig. 2
Statue of Socrates -2

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

Fig. 3
Socrates & Alcibiades

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

******************************

Fig. 4
Socrates Discussing with Youngsters

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -6

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி இருவருக்குள் குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான். மெக்லில்லஸ் தன் திருமணம் பற்றிப் பேசுகிறான். தன் காதலிக்கு எழுதிய கவிதையை வாசிக்கச் சொல்லி சாக்ரடிஸிடம் தருகிறான்.

***********************

மெக்கில்லஸ்: சாக்ரெடிஸ் ! எப்படி இருக்கிறது என் கவிதை ? கடைசி வரியைச் சற்றுக் கவனமின்றி எழுதி விட்டேன். அறிவில்லாமல் ஏதோ கிறுக்கி விட்டேன். என்ன நினைப்பாளோ என்னருமைக் காதலி ?

சாக்ரடிஸ்: ஆமாம் நீ எழுதிய இறுதி வரிகள் சிந்திக்காமல் வந்தவைதான் ! மெக்கில்லஸ் ! நான் யாருக்கும் அறிவுரை புகட்டுவ தில்லை. ஆனால் இதை மட்டும் நானுனக்குச் சொல்கிறேன் ! ஒருபோதும் பெண்ணைப் புகழாதே ! ஒரு பெண்ணைப் புகழ்ந்து வேறோர் பெண்ணிடம் பேசாதே ! அது உனக்கு இனிப்பாக இருக்கும் ஆனால் அவளுக்குக் கசப்பை அளிக்கும் ! உன்னை பம்பரமாய் ஆட்ட சாட்டை தருகிறாய் அவளுக்கு ! திறந்த புத்தகமாய் நீ இருக்கக் கூடாது ! மர்ம மனிதனாக இரு ! நீ புதிராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவள் உன்னைத் தேடி வருவாள் !

கோவாதெர்டு மனைவி: எழுபது வயது மனிதர் இப்படி யெல்லாம் இருபது வாலிபனுக்குச் சொல்லிக் கொடுக்கலாமா ? வாழ்வில் அடிபட்டு இளைஞர் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படிச் சொல்லிக் கொடுத்தால் இளைஞர் மாதரைச் சித்திரவதை செய்யலாம் !

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! பெண்ணைக் கோபுரத்தில் ஏற்றாதே ! பிறகு அவள் கீழே இறங்கி வரமாட்டாள் ! ஒவ்வொரு தரமும் நீதான் மேலேறிச் செல்ல வேண்டும் ! உன் காலை ஒடித்து விடுவாள் ! நீ தாழ்த்தப் படுவாய் ! பெண் தூக்கு மூக்குடன் நடப்பாள் ! பெண்ணுக்கு அடிமை ஆகாதே ! குறைகளைக் காட்டு ! தவறுகளைக் காட்டு ! பெண் நன்றி கூறுவாள் உனக்கு அவள் மீது நீ கவனம் செலுத்துவதாக !

கோவாதெர்டு மனைவி: சாக்ரடிஸ் ! எப்போதாவது நீங்கள் இந்த உபதேசத்தை வீட்டில் மனைவிடம் உபயோகித்தது உண்டா ?

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அப்படிச் சோதிக்கப் பட்டதாக இது தெரிகிறதா உனக்கு ? என் வீட்டில் வேகாத பதார்த்தம் ! (வேறு பக்கம் திரும்பி) பேரவைக் கூட்டம் முடிந்து மக்கள் யாவரும் ஈதோ வருகிறார். பார் ! சிலர் முகத்தில் சிரிப்பு ! சிலர் முகத்தில் அருவருப்பு !

கோவாதெடு மனைவி: ஷாந்திப்பி மீது பழிசுமத்த மாட்டேன் ! அவளிடம் தவறில்லை. அது நன்றாகத் தெரியும் எனக்கு. வேதாந்தம் காதுக்கு இனிமையானது ! ஆனால் வயிற்றை நிரப்பாது ! ஆனால் சில விசயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் பிறரிடமிருந்து !

சாக்ரடிஸ்: நான் எல்லா விசயங்களையும் பிறரிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறேன். எனக்கு எதுவும் தெரியாது. வெளியே என் வயது எழுபத்தி மூன்று ! வீட்டுக்குள் என் வயது ஏழுதான் ! ஷாந்திப்பி எனக்குத் தாய், தந்தை எல்லாம் ! உட்கார் என்றால் உட்காருவேன். உண் என்றால் உண்பேன் ! போ என்றால் போவான் ! வா வென்றால் வருவேன் ! நான் வேலை செய்யாத ராஜா ! வேலை செய்பவள் ஷாந்திப்பி ! வேலைக்காரியும் அவள்தான் ! வீட்டு எஜமானியும் அவள்தான் !

கோவாடெர்டு மனைவி: ஏதென்ஸில் பலர் ஞானி போல் நடிப்பார் ! பார்க்கப் போனால் ஏதென்ஸில் ஞானமுள்ள பத்துப் பேர் கூட கிடையாது ! அவரிடம் நீங்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும் ? உங்கள் அனுபவம் மூலம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

சாக்ரடிஸ்: என் மூளைக்குள் முளைப்ப தெல்லாம் வினாக்கள்தான் ! விடைகளை மற்றவர் மூளையில் விளைவிப்பது என் வினாக்கள் ! நான் கற்ற தெல்லாம் அப்படிக் வினாக்களை எழுப்பி அறிந்து கொண்டவை ! வேறு பாதை தெரியா தெனக்கு ! நாமெல்லாரும் ஒரே மாதிரிதான் !

கோவார்தெர்டு மனைவி: பெண்கள் யாரும் ஒன்றுதான் ! ஆனால் ஆடவர் வேறானவர். அவர்களில் நீவீர் ஒரு மாதிரி ! நீங்கள் ஒரு வேதாந்தி ! இல்லத்தைத் துறந்து வெளியேறி இருக்க வேண்டியவர் ! உமக்கு வீடும் தேவையில்லை ! மனைவியும் தேவையில்லை ! பலருக்கு உம்மைப் பிடிக்க வில்லை ! நான் எச்சரிகை செய்கிறேன். வாலிபர் பக்கத்தில் போய் வாய்த் தர்க்கம் செய்யாதீர். அவருடைய தகப்பன்மார் உம்மை ஒருநாள் தடியால் அடிக்கப் போகிறார்.

சாக்ரடிஸ்: வாலிபர்தான் என்னைத் தேடி வருகிறார். நான் எப்படி அவரை விரட்டுவது ? அவரது தகப்பனார் சினத்துக்கு ஆளாகித் தலையில் அடிபட்டால் தாங்கிக் கொள்ள முடியும் என்னால் ! ஒருவன் என்னை அடிக்கும் போது அவன் தன்னைத்தான் அடித்துக் கொள்கிறான். நான் பதிலுக்கு அடிக்காமல் நழுவிச் செல்வதால் வலி அவனுக்குத்தான் ஏற்படுகிறது !

கோவாதெர்டு மனைவி: அப்படி நீவீர் பேசுவதால்தான் உம்மை நான் வேதாந்தி என்று சொல்கிறேன்.

(அப்போது பேரவையில் பெரும் அரவம் கேட்கிறது. அல்சிபையாடஸ் வேகமாய் வருகிறான்.)

அல்சிபையாடஸ்: அந்த முடிவு காதில் விழுந்து என் மனம் அலைமோதுகிறது.

சாக்ரடிஸ்: என்ன நடந்தது நண்பனே ?

அல்சிபையாடஸ்: தேவர்கள் முடிவு இது ! உலகிலே உயர்ந்த ஞானி யாரென்று சொல்லி விட்டார் !

கோவாதெர்டு மனைவி: எனக்குத் தெரியும் அவர் யாரென்று ? சாக்ரடிஸ் !

அல்சிபையாடஸ்: உனக்கு எப்படித் தெரியும் ? நீதான் பேரைவைக்குப் போக வில்லையே !

கோவாதெர்டு மனைவி: அவரைத் தவிர ஏதென்ஸில் பேரறிஞர் வேறு யார் இருக்கிறார் ! அந்தப் புகழே அவருக்கு ஆக்கத்தை அளிக்கப் போகிறது. அழிவையும் தரப் போகிறது !

(சாக்ரடிஸ் எதுவும் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறார்)

அல்சிபையாடஸ்: அது எப்படி உனக்குத் தெரியும் ?

கோவாதெர்டு மனைவி: அவ்விதம் என் ஆத்மா சொல்கிறது !

(அப்போது ஆகாத்தானும் கிரியோவும் பேரவையிலிருந்து வேகமாக வருகிறார்கள்)

ஆகாத்தான்: ஏதென்ஸ் சாக்ரடிஸ்தான் உலகத்தின் ஞானியாம் ! ஆச்சரியமாக இருக்கிறது !

கிரிடோ: (சாக்டரிஸ் காதுக்குள்) சாக்ரடிஸ் ! சொல்வதைப் கேட்பீர் ! உங்களை நாங்கள் உடனே ஏதென்ஸ் நகரை விட்டு நீக்கி ஒளித்து வைக்க வேண்டும்.

சாக்ரடிஸ்: ஏன் அப்படிச் சொல்கிறாய் கிரிடோ ?

கிரிடோ: அயோக்கியன் லைகானும், ஆங்காரன் மெலிடோசும் ஒரு சதிக் குழு அமைக்கிறார் ! உம்மைப் பழிசுமத்திக் குற்றக் கூண்டில் ஏற்றப் போகிறார் ! மாஜிஸ்டிரேட்டுகள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். தேவர்கள் தீர்ப்பை அவர் நிராகரிக்கிறார்.

அல்சிபையாடஸ்: அவர் வருவதற்குள் நாம் மறைந்து போக வேண்டும்.

கிரிடோ: நாம் தெருவில் நிற்பதே ஆபத்து ! சாக்ரடிஸ் ! ஏன் வானத்தை பார்க்கிறீர் ? உமக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லையா ? வாருங்கள் போகலாம் உம்மைப் பிடித்து அடைப்பதற்குள் !

(இருவரும் சாக்ரடிஸைப் பற்றி இழுக்கிறார்)

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

12. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((June 10, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates & his Wife Xanthippe in
The Market Place

“ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

சாக்ரடிஸ்

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

Fig. 2
Socrates Friend : Alcibiades

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

Fig. 3
Socrates & Xanthippe in Argument

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

******************************

Fig. 4
Socrates Eating Carrot in the
Market Place

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -5

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி இருவருக்குள் குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான்.

***********************

(அப்போது பேரவைக் கூட்டத்தில் ஆரவாரம் கேட்கிறது)

விவசாயி: என்னமோ நேர்ந்து விட்டது ! மக்கள் கூக்குரல் காதைப் பிளக்கிறது !

மெக்கில்லஸ்: தேவரின் தீர்ப்பை வாசித்து விட்டது போல் தெரிகிறது ! உலகில் பெரிய ஞானி யாரென்று தெரிவித்து விட்டார் ! அதன் விளைவைத்தான் நாமினி எதிர்பார்க்க வேண்டும் !

விவசாயின் மனைவி: நான் சற்று உள்ளே போய் என்ன முடிவென்பதைத் தெரிந்து கொள்ளப் போகிறேன் ! வா ஷாந்திப்பி ! என்ன நடந்துள்ளது என்று நாமிருவரும் கண்டு வருவோம்.

ஷாந்திப்பி: நான் இங்கே நின்று கொள்கிறேன். நான் படப்போகும் அவமானத்தை இங்கிருந்தே பார்த்துக் கொள்கிறேன் ! (விவசாயியை நோக்கி) உன் மனைவி உன்னைப் புரிந்து கொள்வதில்லை என்று என் செவியில் பட்டுத் தெறிக்கச் நீ சொல்லப் போகிறாயா ?

(ஷாந்திப்பி விவசாயி மனைவியுடன் வெளியேறுகிறாள். சாக்ரடிஸ் தோழரோடு உரையாடப் போகிறார்.)

விவசாயி: ஆமாம் ! என் கெட்ட காலம் ! என் மனைவி என்னைப் புரிந்து கொள்ளவ தில்லை ! அது மட்டுமா ? என் மனைவி மண்டைக்கு எதுவும் எட்டுவதில்லை ! புகுத்தினாலும் அது வெளியே தவ்வி விடும் !

கோவாதெர்டுவின் மனைவி: ஆண்பிள்ளை நீங்கள் யாரும் எங்கே போவீர், நாங்கள் மாதர் இல்லா விட்டால் ?

கோவாதெர்டு: மனிதருள் மாணிக்கமான ஆடவர் எல்லாரும் தாயின் கருவில்தான் உண்டாகிறார். மாதர் இன்றேல் மனிதன் பைத்தியமாகி விடுவான் !

மெக்கில்லஸ்: (ஒரு குவளை மதுபானத்தை சாக்ரடிசுக்கு வழங்கி) இதைக் குடிப்பீர் நண்பரே !

சாக்ரடிஸ்: வேண்டாம் மது எனக்கு ! தொப்பை நிரம்பி விட்டது ! குடித்தால் மனைவி சண்டை போடுவாள் ! வேண்டாம் ! எனக்கு மதுபானம் அளித்து எனது மனைவின் சாபத்தை வாங்கிக் கொள்ளாதே !

மெக்கில்லஸ்: குடித்தவன் அல்லவா மனைவிடம் சண்டை போடுவான் ! அது சரி ! குடிக்கா விட்டாலும் சதா உன்னோடு சண்டை போடுபவள் உன் மனைவி அல்லவா ? தினமும் உம்மை வாய்ச் சண்டைக்கு இழுத்து நிம்மதியைக் கலைப்பவள் ஆயிற்றே !

சாக்ரடிஸ்: என் வாய்க்குடி நாற்றம் என்னைக் காட்டிக் கொடுத்து விடும். சண்டையில் சரம்மாறி பெய்வாள் ! (குவளை மதுவை வாங்கிக் குடிக்கிறார்).

மெக்கில்லஸ்: யார் வீட்டில்தான் சண்டை இல்லை ! எந்தக் குடும்பத்தில்தான் சண்டை போடாத பெண்டாட்டி இருக்கிறாள் ? பெண் அமைதியாவள் என்றால் ஆண்மகன் சண்டைச் சேவலாய் இருக்கிறான் ! குடும்ப வாழ்வே அப்படித்தான் ! ஒரே வெந்நீர் கொப்பரையில் வேகும் இரண்டு உடைந்த முட்டைகள் ! இப்போது நானே குடும்ப சாகரத்தில் குதிக்கப் போகிறேன் ! எனக்குப் புதிய வேலை கிடைத்திருக்கிறது ! சிறைச்சாலையில் ஒரு சிறைக் காப்பாளியாக வேலை !

சாக்ரடிஸ்: என்ன ? சிறைக் காப்பாளியா நீ ? அது ஓர் அற்ப வேலை அல்லவா ? சொற்ப ஊதிய மானாலும் துச்சமான வேலை ! கைதிகளைச் சித்திரவதை புரிந்து உண்மையைக் கக்க வைக்கும் அக்கிரம வேலை ! மக்கு மடையர் புரியம் திக்குமுக்கான வேலை !

(அப்போது வெடிச் சத்தமுடன் பேரவையில் ஆரவாரமும் எழுகிறது)

விவசாயி: என்ன கூச்சல் அங்கே ? தேவரின் தீர்ப்பு வெளியாகி விட்டதா ?

சாக்ரடிஸ்: அதை விட்டுத் தள்ளு ! என்ன தீர்ப்பு வந்தாலும் சரி ! நான் கவலைப்பட மாட்டேன் ! எப்போது நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் ? அதைச் சொல் முதலில் எனக்கு.

மெக்கில்லஸ்: எப்போதென்று எனக்குத் தெரியாது ! இப்போது நான் அவளுக்குக் காதல் கவிதை எழுதி வருகிறேன் ! அவளும் இரண்டு நாளுக்கு முன்பு என்னைக் கனவில் கண்டிருக்கிறாள் !

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அவள் ஏன் உன்னைக் கனவில் காண வேண்டும் ? நேராகவே உன்னைக் கண்டு பேசலாமே ? யாரை நீ இடைத் தரகனாக வைத்திருக்கிறாய் ?

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உங்களைத்தான் நம்பியிருக்கிறேன் நான் ! நீங்களே சொல்லுங்கள் ! (பையிலிருந்து கவிதையை எடுத்துக் கொடுக்கிறான்)

சாக்ரடிஸ்: இந்தக் கவிதையை உன் அன்புக் காதலி விரும்பினாளா ? நான் படித்து என்ன சொல்ல முடியும் ?

மெக்கில்லஸ்: (சிரிப்புடன்) நானொரு தவறு செய்தேன் ! இந்தக் கவிதையை அவள் வீட்டுப் பலகணியில் எறிந்தேன் ! ஆனால் அது அவள் தாயின் அறை !

சாக்ரடிஸ்: அட கடவுளே ! அப்புறம் என்ன ஆயிற்று ? அவள் தாய் உன் கன்னத்தில் அறைந்தாளா ?

மெக்கில்லஸ்: கதையே மாறிப் போச்சே ! அந்தக் கவிதை அவள் தாயிக்குப் பிடித்துப் போனது !

சாக்ரடிஸ்: அப்புறம் என்ன ஆயிற்று ?

மெக்கில்லஸ்: அவள் தாயிக்கு என்மேல் மோகம் ! எனக்கோ அவள் புதல்வி மீது மோகம் ! என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகிறேன் ! நீங்கள்தான் ஒரு வழிகாட்ட வேண்டும் !

சாக்ரடிஸ்: வேறொரு கவிதை எழுதி மகள் இருக்கும் அறைப் பலகணியில் எறிந்து விடு ! தாய் மகள் இருவரில் யாருக்கு உன்மீது ஆசை அதிகமோ அவர் பிடித்துக் கொள்வார் உன்னை !

(மெக்கில்லஸ் கவிதையைப் படிக்கிறார்)

ஒவ்வோர் அழகுப் பிறவியும்
ஓர் அழகுத் துணைப் பிறவி தேடிப்
பேரிச்சையால்
உனை நோக்கித் திரும்பும் !
ஹெரா என்பவன் ஓர் அழகிய மயில் !
உன்னைப் போலொரு
பெண் மயிலை
ஒருபோதும்
கண்ட தில்லை அவன் !
பூமி எழில் ஊட்டும்
உனக்கு !
சொர்க்க புரி காதலிக்கும்
உன்னை !
நரகமும் தன் கரங்களால்
உன் மேனியைத் தொட
விரும்பும் !
ஒவ்வோர் அழகு ஆடவனும்
உன்னைத் திருமணம் புரிய
இச்சை யுறுவான் !
பேரழகுக் கண்மணி !
ஆரணங்கே !
திருமணம் செய்ய மாட்டாயா
என்னை ?
நம்பிடு ! நம்பிடு என்னை !
உறுதி மொழி
தருவேன் நானுனக்கு !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

12. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((June 3, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
The Face of Socrates

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ அறிவன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் மெய்ஞானிகள் அல்லது தீர்க்கதரிசிகளிடம் காணப்படும் ஒருவகைத் தன்னுணர்ச்சி அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

“ஒரு செல்வந்தன் தனது சொத்து சேமிப்பைப் பற்றிப் பெருமை அடைந்தால், எப்படி அவன் அந்தப் பணத்தைச் செலவழிக்கிறான் என்று அறிவதற்கு முன்னே அவனைப் பற்றி ஒருவர் புகழக் கூடாது.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

சாக்ரடிஸ்

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

******************************

Fig. 2
The Trial of Socrates
In Athens

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -4

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான்.

***********************

ஷாந்திப்பி: எழுபத்தியிரண்டு வயதாச்சு ! ஒன்றும் தெரியாது என்று சொல்ல உமக்கு வெட்கமாய் இல்லையா ?

சாக்ரடிஸ்: (காரட்டைத் தின்று கொண்டு) வயதுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஐந்து வயதில் அறிந்து கொள்ள எத்தனை ஆவல் இருந்ததோ அதே ஆர்வம் எழுபது வயதிலும் எனக்கு உள்ளது. ஆனாலும் நான் இன்னும் அறியாமையில் உழல்கிறேன். கற்றது கைப்பிடி அளவு ! கற்காதது உலகளவு ! எனக்கு குருமார்கள் யார் ? குழந்தைகள், வாலிபர், வயோதிகர், பெண்டிர்கள். யாரிடமும் நான் கற்றுக் கொள்ள தயார். உனக்கு ஒரு காரட் வேண்டுமா ?

ஷாந்திப்பி: நான் முயல் குட்டி இல்லை ! உங்களுக்குதான் அகோரப் பசி ! தொந்தி வயிறு நிரம்பவே செய்யாது !

சாக்ரடிஸ்: இன்று மன்றத்தில் நீதிபதிகள் கூறப் போகும் தேவர் தீர்ப்பை நான் கேட்க வேண்டும்.

ஷாந்திப்பி: உமக்குச் சம்பந்தம் இல்லாத காரியங்களில் மூக்கை நுழைக்காதீர். குடும்பம் ஒன்று இருப்பதே உமக்கு நினைவில் இல்லாமல் மறக்கிறது. நமக்குக் குழந்தைகள் இருப்பதும் மறக்கிறது. யாரிடம் போய் இதை முறையிடுவது ? எனக்கோ பிள்ளைகளுக்கோ என்ன நேர்கிறது என்று உமக்குக் கவலை இல்லை. வீட்டில் உண்ண உணவில்லை என்றால் தெருப் பன்றிகள் தின்ன மிச்சத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம் ! அதுவும் கிடைக்கா விட்டால் உமது வேதாந்ததைச் சமைத்து உண்ணலாம் !

சாக்ரடிஸ்: உண்மை ஷாந்திப்பி ! ஓர் முதியவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. வேதாந்தம் ஆத்மாவின் விருந்து என்றவர் கூறியது முற்றிலும் உண்மை !

ஷாந்திப்பி: வேதாந்தம் உமது மூளையிலிருந்து எப்போது விளையும் ? சொல்லுங்கள் ! அப்போது அறுவடை செய்து சமைக்கிறேன். சீமான்கள் மாளிகையில் அடிக்கடி விருந்துணவைத் தின்று தின்று தொந்தி பெருத்து இப்போது முழங்காலைத் தொடுது ! ஆனால் அது உமது வேதாந்த உணவால் உப்பிய தொந்தியா ?

சாக்ரடிஸ்: முதிர்ந்த வயது, பெருத்த உடம்பு, பழுதுக் கிட்னி இவற்றால் பாடுபடுகிறேன் !

ஷாந்திப்பி: சரி ! அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

சாக்ரடிஸ்: குதிரை கீழே தள்ளி குழியும் தோண்டியதாம் ! உன்னை நீயே உளவு செய் ! இதிகாசப் பூதங்கள் எல்லோரைக் காட்டிலும் உக்கிரமான அபூர்வக் காரிகை நீ !

ஷாந்திப்பி: சிந்திக்காமல் பேசாதீர் ! யார் குடும்பத்தை நடத்துவது ? இல்வாழ்க்கை என்றுதான் பேர். காலையில் காணாமல் போகும் கணவனுக்கு நடுநிசிக்குப் பிறகுதான் வீட்டு நினைவு வருகுது ! ஒரு நல்ல உடை உண்டா ? வாய் சுவைக்கும் உணவு உண்டா ? குடியிருக்க நல்ல குடிசை உண்டா ? நான்தான் சதா அடுக்களைக் கரிக்கட்டையாய் எரிந்து கொண்டிருக்கிறேன் ! இரவு பூராவும் விழித்திருந்து பகல் முழுதும் தூங்கி விழுகிறீர் ! இதென்ன உயிர்ப் பிறவி ?

சாக்ரடிஸ்: ஷாந்திப்பி ! நீ குத்திக் காட்டுவது என்னையன்று ! என் மூப்பு வயதை ! நான் எழுபது வயதுக் கிழவன் ! உனக்குப் புத்தாடை வாங்கவும், சுவை உணவு அளிக்கவும் என்னிடம் காசில்லை ! எனக்கு வேலை செய்யவும் வலுவில்லை ! வேலை கொடுப்பார் யாருமில்லை ! ஆனால் என்னால் பேச முடிகிறது ! அதற்கு வேலை நிறுத்தம் கிடையாது.

ஷாந்திப்பி: பேசிப் பேசியே உங்கள் நாக்கும் மூளையும் மழுங்கிப் போயின ! நீங்கள் வயதானவர் என்று முரசடிக்க வேண்டுமா ? உங்களை மணந்து கொண்டதற்கு நல்ல வெகுமதி கொடுத்திருக்கிறீர் ! வறுமை ! இதில் என்ன பெருமை உள்ளது ? நானொரு கிழவருக்குப் பணிப்பெண் ! நான் கிழவி ஆக வில்லை இன்னும் ! இன்னும் எனக்குப் பாதி ஆயுள் இருக்குது. உங்கள் ஆயுள் டப்பெனப் போனாலும் போய்விடும் ! எப்படி நான் மட்டும் தனியாக உயிர் வாழ்வேன் ?

சாக்ரடிஸ்: நான் சாக அஞ்சவில்லை ஷாந்திப்பி ! ஆனால் உனக்காக நான் உயிரோடு இருப்பதிலும் என்ன பயன் ? எப்போதும் குறைபாடுதான் ? அது இல்லை ! இது இல்லை ! எந்த நேரமும் உந்தன் இல்லைப் பாட்டுதான் ! தொல்லை எனக்குத்தான் ! அதனால்தான் பகலிலும் நான் வீட்டில் தங்காமல் வெளியே ஓடிப் போகிறேன் ! இரவில் உன் தொல்லை இல்லை !

ஷாந்திப்பி: இப்போது தெரியுது ஏன் ஊர் சுற்றப் போகிறீர் என்று ! உமக்குத் தொல்லை கொடுத்தால்தான் அடுப்பில் கஞ்சி தயாரிக்க முடியுது ! இல்லாவிட்டால் உங்கள் தொந்தி சுருங்கி விடாதா ? உங்கள் தொந்தி சுருங்கினால் பேச்சாவது சுருங்கும் ! வீட்டுக்குப் போக வேண்டும் என்று நினைப்பாவது உண்டாகும் ! தொந்தி பெருத்தால் மூளை சுருங்கும் என்று என் பாட்டி சொல்வாள் ! தொந்தி சிறுத்தால் மூளை செழிக்கும் ! எதைச் செய்யலாம் என்று நினைக்கிறீர் ? மூளை வளர்ச்சியா ? அல்லது தொந்தி உப்புவதா ?

சாக்ரடிஸ்: என் மூளை பெருத்தால் நான் எதுவும் கற்றுக் கொள்ள முடியாது ! மூளை சிறுத்தால் அதை வளர்க்க வேண்டும் என்று ஆர்வத்தைக் கிளப்பும். இல்லாவிட்டால் நமக்கு எல்லாம் தெரியும் என்று கர்வத்தால் என் மூளை முடங்கிப் போகும் ! வேலை செய்யாது அடங்கிப் போகும் ! கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பசி எனக்கு எப்போதும் இருக்க வேண்டும் ! மூளைப் பசி குன்றிப் போனால் மனித வாழ்வே பயனற்றுப் போகும் ! வயிற்றுப் பசியை ஆற்றினாலும் என் மூளைப் பசி தீராது !

(மெக்கில்லஸ் இருவர் உரையாடலைக் கேட்டுக் கொண்டு பின்னிருந்து வருகிறான்)

சாக்ரடிஸ்: என் கண்மணியே ! நீ தான் எனக்கு வேதாந்தம் கற்பிப்பவள் ! அனுதினமும் புதிய சிந்திப்பை எனக்கு ஊட்டுபவள் என்னருமை மனைவி ஷாந்திப்பி ! உனக்கு ஒரு காராட்டாவது நான் தர வேண்டா ?

ஷாந்திப்பி: (மனமுருகி) இத்தனை சண்டை போட்டாலும் நான் உங்கள் அருமை மனைவியா ? (புன்னகை பூண்டு) கொடுங்கள் எனக்கு ஒரு காரட் ! (சாக்ரடிஸ் ஒரு காரட்டை மனைவிக்குத் தருகிறார்.)

மெக்கில்லஸ்: (கையில் ஒயின் குவளையுடன்) சாக்ரடிஸ் ! இதோ கொஞ்சம் ஒயின் அருந்துவீர். (இருவருக்கும் ஒயினைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொடுக்கிறான்.)

சாக்ரடிஸ்: (ஒயினைச் சுவைத்துக் கொண்டே) பெரு மகிழ்ச்சி மெக்கில்லஸ் ! நன்றி !

ஷாந்திப்பி: எனக்கு வேண்டம், நன்றி ! அங்காடி வீதிக்கே ஒயினைக் கொண்டு வர வேண்டுமா ? குடிகாரத் தோழரோடு இப்போது கொஞ்சி ஆடுங்கள் ! உம்மை நான் ஏன்தான் திருமணம் செய்தோனோ ?

சாக்ரடிஸ்: இந்த அழனை வேறு யாரும் மணந்து கொள்ள முன் வரவில்லை ! என் முகத்தை ஓர் ஆந்தை கூட விரும்பாது ! பசு மாடு என் முகத்தைப் பார்த்தால் ஒரு வாரத்துக்குப் புளிக்கும் பாலைத்தான் கறக்கும் !

ஷாந்திப்பி: பாலைக் கறக்க பக்கத்தில் நீவீர் அமர்ந்தால் பசு மாடு உமது மூஞ்சியைக் காலால் எட்டி உதைக்கும் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

12. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 27, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Socrates with His Students

“ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத ஓர் ஆபாச மனக் கருத்தே.”

“திருமண இல்வாழ்வோ அல்லது பிரமச்சரியத் தனி வாழ்வோ ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் பின்னால் அதற்கு நிச்சயமாக வருத்தம் அடைவான் !”

“சாதாரண மாந்தருக்குப் பேரளவு இன்னல் தரச் சாமர்த்தியம் உள்ளது போல், பெருமளவில் நல்வினை புரியவும் அவருக்குத் திறனிருக்கலாம் என்பதை எண்ணத்தான் முடியும் என்னால்.”

“மனிதனுக்குச் சமமாக மாதருக்குச் சம உரிமை அளித்தால், மனிதனுக்கு மேலதிகாரியாக மாதர் ஆகி விடுவார்.”

சாக்ரடிஸ்

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

******************************

Fig. 2
Socrates & Alcibiades

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -3

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார்.

***********************

டிரிப்டோல்மஸ்: பொறு ! நாங்கள் சகுனத் தடைகளை மதிப்பவரில்லை ! துவங்கட்டும் நமது கடமைப் பணிகள் ! நியாய மன்றத்தில் தர்க்கம் நிகழட்டும் !

(மாஜிஸ்டிரேட்டுகள் நாற்காலியில் அமர்கிறார். சைரஸ் பின்தங்கி லைகானோடும், மெலிடஸோடும் உரையாடுகிறான்.)

சைரஸ்: லைகான் ! மெலிடஸ் ! நீங்கள் இருவரும் ஒன்றாக நிற்பீரா தெய்வத் தீர்ப்பு வாசிக்கப்படும் போது ?

மெலிடஸ்: அது போகட்டும், நமது திட்டம் மாஜிஸ்டிரேட் ·பிலிப்புக்குத் தெரியுமா ?

சைரஸ்: அவருக்குத் தெரியாது, நான் நிச்சயமாக அப்படிச் சொல்வேன்.

லைகான்: வேறு யாரெல்லாம் இந்த திட்டத்தில் நமக்கு உடந்தையாக இருப்பவர் ?

சைரஸ்: ஆச்சரியப் படாதீர் ! சாக்ரடிஸைக் குற்றம் சாற்றும் மூன்றாவது நபர் யார் தெரியமா ?

மெலிடஸ்: சாக்ரடிஸின் நண்பர்களில் ஒருவர்தானே.

(மன்றத்தில் தீர்ப்பைக் கேட்கச் சில மாதரும் ஆங்கே வருகிறார்.)

விவசாயி ஒருவரின் மனைவி: கூட்டம் பெரியது ! நின்று நின்று என் கால்கள் கடுக்கின்றன ! எப்போது மன்றம் துவங்குமோ ? சூடாக இருக்குது இடம் ! எங்கு பார்த்தாலும் தூசி மயம் !
உடம்பெல்லாம் கூடத் தூசி !

இரண்டாம் மாது: ஆடவர் சிலரது முழங்கைகளைப் பார்த்தால் கோடரித் தண்டுபோல் தெரிகிறது. எப்படித்தான் அவரது மனைவிமார் அவரோடு குடித்தனம் நடத்துவாரோ ?

சைரஸ்: கூட்டத்தில் என் கண்களைக் கவ்வி இழுப்பவள் ஒரு காரிகை ! (இரண்டாம் மாது சைரஸை பக்கப் பார்வையில் நோக்குகிறாள்)

இரண்டாம் மாது: (சலிப்புடன்) அது ஒருவிதக் குருட்டுக் கண்ணோட்டம்தான் ! (சைரஸை நோக்கி) நீ யாரென்பது எனக்குத் தெரியும் ! ஏன் நீ மாஜிஸ்டிரேட்டுகள் கூட மன்ற முன்னிலையில் உட்கார வில்லை ? உலகில் உன்னத ஞானி யாரென்று அறிய உனக்கு விருப்பம் இல்லையா ?

சைரஸ்: உன்னத ஞானி யார் ? உன்னத மாதை மணந்து கொண்டவர் உன்னத ஞானி !

இரண்டாம் மாது: நீ யார் ? உன்னத ஞானியா ? அல்லது மூட மானிடனா ?

சைரஸ்: அதாவது என் மனைவி அறிவாளியா அல்லது மூட மாதா என்று நீ கேட்கிறாய் ? நான் என் மனைவியைப் பற்றிப் பேச விரும்ப வில்லை ! அது தனிப்பட்ட என் சொந்த ரகசியம் !

இரண்டாம் மாது: அதாவது உன் மனைவி அறிவாளி இல்லை என்பதைச் சொல்லக் கூசுகிறாய் ! இல்லாவிட்டால் இந்த மன்றத் தீர்ப்பைக் கேட்க நீ உன் மனைவியை அழைத்து வந்திருப்பாய் அல்லவா ? அது சரி ! மேடையில் அமராமல் இங்கென்ன செய்கிறாய் நீ ?

சைரஸ்: (மாதின் காதில் முணுமுணுத்து) இந்த அறிவாளிகளோடு சேர்ந்து நானொரு சிறு சதித் திட்டத்தைச் செய்யக் காத்திருக்கிறேன் !

இரண்டாம் மாது: யாரையாவது தீர்த்துக் கட்டப் போகிறாயா ?

மெலிடஸ்: (கோபத்தோடு) சைரஸ் ! மூடு வாயை ! சதித் திட்டத்தைச் சொல்லி நீ சட்ட வலைக்குள் சிக்கிக் கொள்வாய் ! மௌனம் கலகத்தை நிறுத்தும் ! வாய்ப் பேச்சுக் கலகத்தை மூட்டும் !

இரண்டாம் மாது: (முதல் மாதைப் பார்த்து) பார்த்தாயா ? இதுதான் ஆடவர் லட்சணம் ! உண்மை பேச மாட்டார் ! சரி விரைவாகப் போ ! முன்னால் இடம் பிடிக்க வேண்டும் ! கூட்டத்தில் முன்னால் போவது சிரமம்தான் !

(அப்போது இதைக் கேட்டுக் கொண்டு பின்னால் வருவது ஷாந்திப்பி சாக்ரடிஸின் மனைவி. ஒரு காலத்தில் அழகாய் இருந்தவள். இப்போது வயது முதிர்ச்சியில் அழிந்த ஓவியம் போல் காணப் படுகிறாள்.)

ஷாந்திப்பி: (இரண்டாம் மாதைப் பார்த்து) நீ என்ன சொல்கிறாய் ? மேடைக்கு முன்னால் யாரும் போக முடியாதா ?

இரண்டாம் மாது: வணக்கம் அம்மா ! நலமா ? கூட்டத்தில் நெருக்கியடித்து நீங்கள் போக முடியாது ! இங்கு நின்றால் கூட மாஜிஸ்டிரேட் பேச்சு காதில் விழும் ! பெரியவர் சாக்ரடிஸ் நலமா ? எங்கே அவரைக் காணோம் ?

ஷாந்திப்பி: பெரியவர் நலம்தான் ! அதோ பின்னால் வருகிறார் ஆமை வேகத்தில் ! தாமதமாகி விட்டது ! என்னருமைக் கணவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டு நேரத்தை நழுவ விட்டார்.

(சாக்ரடிஸ் கூட்டத்தில் நெளிந்து கொண்டு வருகிறார். வயது எழுபதுக்கும் மேலிருக்கும் (72). ஆனால் தள்ளாடாமல் அவர் நிமிர்ந்து நடக்கிறார். கால் வலித்து ஒரு வீட்டோரப் படியில் சற்று அமர்கிறார். கையில் காரட் ஒன்றைக் கடித்துத் தின்கிறார். எளியராகவும் வறியராகவும் அருவருப்பான முகத்துடன் காணப்படுகிறார்.)

இரண்டாம் மாது: எழுபது வயதானலும் வெள்ளைக் கிழங்குபோல் இருக்கிறார். முகம்தான் சறு விகாரம் ! ஆனால் அவர் மேதமைத்தனம் கண்களில் பளிச்செனத் தெரிகிறது.

ஷாந்திப்பி: (சாக்ரடிஸ் இருக்கும் இடத்தை நெருங்கிக் கோபமாக) நான் முதலில் என்ன சொன்னேன் ? நாம் தாமதித்து விட்டோம் ! பேசிப் பேசி உங்கள் நாக்குதான் மொட்டையானது ! நாக்கு சுருங்கிப் போனது ! வாய் வலிக்காதா ? ஆமை வேகத்தில் தாமதமாய் வந்திருக்கிறோம் ! என்ன கனவு இப்போது கண்டு மெதுவாக வருகிறீர் ? மண்டை பூராவும் ஒட்டடை நிரம்பிக் கிடக்குது !

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அப்படியா ? உனக்கு எப்படித் தெரியும் ? நூல்களைப் படித்து என் மூளையை நிரப்பி யிருக்கேன் ! அது உனக்கு நூலாம்படையாகத் தெரிந்தால் உன்னை நான் எதிர்க்கப் போவதில்லை ! ஒன்றும் தெரியாது எனக்கு ! ஒட்டடையாய்த் தெரியுது உனக்கு !

ஷாந்திப்பி: நீங்கள் உட்கார்ந்து நூல் எதுவும் எழுதுவதில்லை ! நின்று கொண்டே பேசத்தான் தெரியும். உங்கள் உரையாடலை அப்படியே நகல் எடுத்து உங்கள் சீடர் பிளாடோ எழுதிப் பணம் சம்பாதிக்கிறார் ! அவர்தான் சாமர்த்தியசாலி ! நீங்கள் ஓர் ஏமாளி ! கிழிந்த உடை அணிந்து வாய் கிழியப் பேசி வறுமையில் உழல்கிறீர் ! பிளாடோவைப் பாருங்கள் ! பணச் செழிப்பு உடலும், நடையிலும் வழிகிறது ! பிழைக்கத் தெரிந்தவர் பிளாடோ !

சாக்ரடிஸ்: என் உரையாடலுக்கு நான் பணம் வாங்குவதில்லை ! வறுமையில் நான் மரணம் அடைந்தாலும் வசனத்துக்குப் பணம் நான் வாங்க மாட்டேன் ! பிழைத்துக் கொள்வது எப்படி என்று உன்னிடம் நான் கற்றுக் கொள்கிறேன் ! சொல்லிக் கொடு எனக்குத் தெரியாது !

ஷாந்திப்பி: எழுபத்தியிரண்டு வயதாச்சு ! ஒன்றும் தெரியாது என்று சொல்ல உமக்கு வெட்கமாய் இல்லையா ?

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

12. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 20, 2009)]

Series Navigation

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய) பிளாடோ உலகத்திலே ஓர் உன்னத மனமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். மேலும் அதே பிளாடோவை சிறந்த வேதாந்த ஞானியாக ஆக்க ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,”

பெர்டிராண்டு ரஸ்ஸல். (1872 – 1970)

“ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

“அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) படைத்தவை. ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

“என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

“அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

“எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் ! நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் ! துர்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

சாக்ரடிஸ்

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப் பட்ட போது வயது எழுபது ! கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. போரில் பங்கெடுத்த வீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரம் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர்.

சாக்ரடிஸ் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகி யுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வ வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : மரண தணடனை !. சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் ஏதென்ஸ் நகரில் கிரேக்கக் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்சியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பற்பச கசப்பான போர்கள் நிகந்தன. சாக்ரடிஸ் மூன்று போர் அரங்குகளில் இராணுவத்தில் சேர்ந்து மிக்க தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத்தன்மையை எடுத்துக் காட்டினார்.

சாக்ரடிஸ் நூல் எதுவும் எழுதாததால் அவரைப் பற்றி வேறு நான்கு முறைகளில் அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிபவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிவது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பனவா வென்று பெருத்த ஐயப்பாடு உண்டாகுகிறது ! சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் உறுதியாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரை நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! விசாரணை நடக்கும் போது பிளடோ நேரடியாகக் கண்டிருக்கிறார். சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல்கள் பற்பல உள்ளன. ஏறக் குறைய அவற்றில் எல்லாம் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். ஒரு பிரச்சனை என்ன வென்றால் வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்வது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டும் சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை உயர்வு நவிற்சியில் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இரு வித வேறுபாட்டு பண்பாடு உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி முதிய மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ் பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவி ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசி ! பிளாடோ தன் உரையாடல்களில் சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்தில் எடுத்தாளப் படுகின்றன.

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :

இந்த ஓரங்க நாடகம் சாக்ரடிஸின் வாழ்கை வரலாறைக் கூறவில்லை. அவரைப் பற்றிய காலக் குறிப்பு நிகழ்ச்சிகளும் அல்ல. அவரது இறுதிக்காலத் துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகம் சாக்ரடிஸ் மரண காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவாக ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப் பட்ட லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றார் என்னும் படிப்படி வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவற்றில் ஒரு வாசகம் : “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறி வரும் காட்டுமிராண்டிகளின் தெய்வங்களிலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் கடவுளைப் பற்றிக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய) பிளாடோ உலகத்திலே ஓர் உன்னத மனமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். மேலும் அதே பிளாடோவை சிறந்த வேதாந்த ஞானியாக ஆக்க ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -1

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி வீதி

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மீனவன், மெலிடஸ் (Meletus), ஆகாத்தான் (Agathon) அரிஸ்டோதானிஸ் (Aristothanes), மெகில்லஸ் (Megillus), லைகான் (Lycon)

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் தாங்கும் மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். மெலிந்த சரீரம், தாடி மீசை கொண்டவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு காணப்படுகிறான்.
அவன் பெயர் மெலிடஸ். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான்.

***********************

மீனவன்: (கையில் ஆக்டபஸ் ஒன்றை ஏந்திக் கொண்டு வீதியில் நடப்போரைத் தடுத்து நிறுத்தி) பாருங்கள் ஐயா ! ஈதோ புத்தம் புதிய ஆக்டபஸ் ! உயிருள்ள ஆக்டபஸ் ! கடலிலிருந்து இப்போதுதான் பிடித்த ஆக்டபஸ் ! வாங்கிச் செல்லுங்கள் ! சமைத்துப் பாருங்கள் ! சுவைத்துப் பாருங்கள் !

(வீதியில் போவோர் சிலர் நின்று மீனவனிடம் ஆக்டபஸ் வாங்குகிச் செல்கிறார்)

மீனவன்: (மெலிடஸை நெருங்கி) ஆக்டபஸ் வேண்டுமா ஐயா !

மெலிடஸ்: (கோபத்தோடு) நான் ஐயா இல்லை மடையா ! நானொரு வாலிபன் ! இருபத்தியைந்து வயது இளைஞன் !

மீனவன்: வாலிபரே ! ஓர் ஆக்டபஸ் வாங்குவீர் ! வீட்டில் வைத்து ஒரு வாரம் உண்ணலாம் !
(ஆக்டபஸ்ஸை நீட்டுகிறான்)

மெலிடஸ்: (போகத்தோடு) தூக்கிப் போ உன் கடல்மீனை ! அறைந்து விடுவேன் கன்னத்தில் ! மீனவா ! யாரென்று நீ என்னை நினைத்தாய் ? தேவர்கள் தீர்ப்பு அளிப்பு தினத்தில் (Day of an Oracle) மீன் விற்பது சட்ட விரோதம் !

மீனவன்: தீர்ப்பு அளிப்பு தினமா ? யாருக்கு ? தீர்ப்பு யாருக்கு அளித்தால் என்ன ? வயிறுக்குத்
தீனி இல்லாமல் தீர்ப்பளிக்க முடியுமா வாலிபரே ! கும்பியைப் பட்டினி போடச் சட்டம் சொல்லுதா ? உமக்கு வேண்டா மென்றால் வாங்குவோரைச் சட்டத்தைக் காட்டி நீவீர் எப்படி நிறுத்தலாம் ?

[அப்போது அழகிய ஒரு செல்வந்தன் ஆகாத்தான் (Agathon) குண்டான, வயதான, கேளிக்கைக் கவிஞன் அரிஸ்டோபானிஸ் (Aristophanes) கூட்டத்திலிருந்து வெளிப்படுகிறார். மீனவன் அவரிடம் ஓடிப் போய் ஆக்டபஸ்ஸைக் காட்டுகிறான்]

மீனவன்: ஐயன்மீர் ! ஈதோ குஞ்சு ஆக்டபஸ் ! பிஞ்சாக இருக்குது ! சுட்டுத் தின்னா வெகு ருசியாய் இருக்கும் ! குழம்பு வைத்தால் குடும்பமே சுவைக்கும் ! காலையில் தான் கடலில் பிடித்தது !

அரிஸ்டோபானிஸ்: வாங்குடா ஆகாத்தான் ! இன்றைக்கு உன் வீட்டில் விருந்தல்லவா ? ஒன்று போதாது. இரண்டு ஆக்டபஸை வாங்கி விருந்தாளிக்குப் போடு !

ஆகாத்தான்: (ஒன்றை வாங்கிப் பணம் கொடுக்கிறான்) அரிஸ்டோ ! உன் தொந்திக்கே ஆக்டபஸ் ஒன்று போதாது ! (மீனவனைப் பார்த்து) ஆக்டபஸ்ஸை எங்கே கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன் !

அரிஸ்டோபானிஸ்: நாமே கொண்டு போகலாம். அவனுக்கு இடம் தெரியாவிட்டால் ஆக்டபஸ் யாரோ ஒருவர் தொந்திக்குள் நீந்தும் ! (சிரிக்கிறான்)

ஆகாத்தான்: தேவர்கள் தீர்ப்பு அளிக்கும் நேரத்தில் ஆக்டபஸை மடியில் வைத்துக் கொள்ள முடியாது !

அரிஸ்டோபானிஸ்: முட்டாள்தனம் ! கொடு என்னிடம் ஆக்டபஸ்ஸை ! நான் பையில் சுருட்டி வைத்துக் கொள்கிறேன். எனக்கு அவமானம் இல்லை ! மனைவியர் காய்கறிகளுடன் கணவருடன் ஆங்கே வருகிறார். இதில் என்ன மானம் போகுது ?

[அப்போது விவசாயி மெகில்லஸ் (Megillus) மதுபானம் குடித்துக் கொண்டு தள்ளாடி வருகிறான்]

மெகில்லஸ்: (நாக்குளறி) நான் ஓரடி கூட வைக்க முடியாது. (தள்ளாடி படியில் விழுகிறான்)

மெகில்லஸின் மனைவி: நீ நிரம்பக் குடித்திருக்கிறாய் ! நீ இங்கு உட்கார்ந்து கொள் ! நான் மட்டும் தேவர்கள் தீர்ப்பைக் கேட்கப் போகிறேன். உலகில் யார் உன்னத அறிவாளி என்பதை நான் தெரிந்தாக வேண்டும் இந்த தீர்ப்பு தினத்தில் !

[அப்போது ஏதென்ஸின் பெரும் பேச்சாளி, லைகான் (Lycon) வருகிறான். மெலிடஸ் ஓடிவந்து லைகானை நிறுத்துகிறான்.]

மெலிடஸ்: (கோபத்தோடு) நீ முன்பே வரவேண்டியவன் ! ஏன் இப்படித் தாமதம் ? உனக்குக் கடிதம் வரவில்லையா ?

லைகான்: என்ன கடிதம் ?

மெலிடஸ்: அதுதான் கிழவர் சாக்ரடிஸைப் பற்றி !

லைகான்: நானதைக் கிழித்துப் போட்டு விட்டேன் !

மெலிடஸ்: நீ பங்கெடுக்கப் போகிறாயா ?

லைகான்: எதில் பங்கெடுக்க வேண்டும் ?

மெலிடஸ்: தெரியாதா உனக்கு ? இன்றுதான் தீர்ப்பு தினம் ! உலகிலே யார் உன்னத அறிவாளி என்று தேவர் குழு (Oracle) அறிவிக்கப் போகிறது !

லைகான்: மோசடிப் பக்தன் !

மெலிடஸ்: ஆமாம் எல்லாரும் ஒரே கூட்டம்தான் ! இன்று சாக்ரடிஸ் வாழ்வுக்கு முடிவு விழா !

லைகான்: என்ன சொல்கிறாய் ? புரிய வில்லையே !

மெலிடஸ்: வேடிக்கை பார் ! இன்றோடு சாக்ரடிஸ் பெயர் விழுந்து விடும் ! அவர் ஒன்றும் உன்னத அறிவாளி அல்லர் ! அவரை விடப் பெரிய ஞானிகள் உலகிலே இருக்கிறார் !

(தொடரும்)
***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair, The Book Society of Canada (July 1966)

++++++++++++++
ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato : Euthyphro, Apology, Crito (Phaedo The Death Sentence), Translated By : F. J. Church (1956)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

10. The Trial of Socrates By : Douglas Linder (2002)

11. Plato – The Trial & Death of Socrates By : G. M. A. Grube (1983) Hackett Publishing Company Inc. USA.

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 5, 2009)]

Series Navigation