சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

சுப்ரபாரதிமணிய‌ன்இவ்வாண்டின் சாகித்திய அகாதமி பரிசு‍ =மொழிபெயர்ப்புக்காக = ஆனந்தகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.மலையாற்றூர் ராமகிருஸ்ணனின் ” இயந்திரம் ” நாவலினை அவர் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.அது பரிசு பெற்றிருக்கிறது.காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணிபுரிகிறார்.
அவரின் வெளிவந்திருக்கிற பிற நூல்கள்: குஞ்ஞுண்ணி கவிதைகள், கிருஸ்னையரின் இந்திய நீதித்துறை, NBT வெளியிட்ட விழிப்போடு இருப்போம்

பெங்களூரில் நடைபெற்ற விழாவில் சாகித்திய அகாதமியின் தலைவர் சுனில் கங்கோபாத்தியாய பரிசு வழங்கியிருக்கிறார். இவ்வாண்டில் பரிசு பெற்றவர்களில் மூவர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர்: ஏ வி சுப்ரமணியன் , சென்னை( சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு )., மீனாட்சி சிவராமன் பாலக்காடு(‌ இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு )

” இயந்திரம் ” மொழிபெயர்ப்பு தனக்கு சவாலாக இருந்தது என்கிறார். மலையாற்றூர் ராமகிருஸ்ணன் IAS அதிகாரி என்பதாலும்,நிர்வாக அமைப்பு குறித்த களம் என்பதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், காவல்துறையினர் பலரைச் சந்தித்து பல நிர்வாக வார்த்தைகளின் சரியான அர்த்தத்தை கண்டு பிடிக்க வேண்டியிருந்தது.” இயந்திரத்தில்” பிரிட்டிஸ் கால வார்த்தைகள் ஆங்கிலத்தில் அப்படியே பயன் படுத்தப்பட்டவற்றை முறையாக தமிழ் படுத்தியிருந்தேன்.நீதித்துறை, நிர்வாக வரலாறுகளையும், உளவியல் விசயங்களையும் இணையாகப் படிக்க வேண்டியிருந்தது. குங்குமம் இதழில் தொடராக நீண்டு வந்தது என்பதாலும், பல இடதுசாரி கருத்துக்களும், பாலியல் வர்ணனைகளும் நீக்கப்பட்டு தமிழ் பதிப்பில் வந்திருக்கிறது. சவாலான அனுபவமாக இருந்தது. மலையாற்றூர் ராமகிருஸ்ணனை அவர் உயிருடன் இருந்த போது சந்திக்க முயன்றதை பரிசு வாங்கிய போது நினைத்துக்கொண்டேன் என்கிறார்.

= சுப்ரபாரதிமணிய‌ன்

subrabharathi@gmail.com

Series Navigation