சப்தம்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

நட்சத்திரவாசி


உனது கீழ் பாய்தலில்
எனது மேனி நடுங்குகிறது
கழன்று போகிறதென் அகம்
விழும் ஒவ்வொரு சுவடும்
மேதாவி நீயோ
என கேலி செய்கிறது
கண்மூடி நின்றிருக்கிறேன்
இமைதொட்டு
நாபி தொட்டு
நெஞ்சை பிடித்திழுக்கும்
ஒரு பெரும் சலனம்
தேகம் இல்லாதிருந்தால்
கரைந்திருப்பேனோ
இரைச்சல் காதை குடைந்து
கபாலத்தில் நுழைந்து
அறிந்தவற்ரையும்
அறியாதவற்ரையும்
சிதறடித்து விடுகிறது
ஒரு வெறும் ஜடம் போல்
ஆகிவிட்டேன்
உறைந்து போன என்னில்
விடுதலை பெற்றன
ஒரு நூறு பறவைகள்
ஒரே ஒரு சப்தமெழுப்பி

Series Navigation