சட்டென ஒரு மழையிரவு:

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

சபீர்இடி மின்னல் நடத்திய
ஒளியும் ஒலியும்
முடிவதற்குள்
திரை இறங்கியது…
மழை!

கூறையில் நடத்திய
தாளக் கச்சேரி முடிந்து
மூட்டை முடிச்சுகளோடு
ஊருக்குப் போனது…
ஓடை!

பள்ளம் நோக்கிப்
பாய்ந்த வெள்ளத்தில்
படிப் படியாய்
மூழ்கிப் போனது
பக்கத்து வீட்டு
பாப்பாவின்…
கத்திக் கப்பல்!

கட்சி பேரம் பாராமல்
மழை நீர் சேகரித்தன
கூறை வீட்டின்…
தட்டு முட்டு சாமான்கள்!

மின்னல் வெட்டுக்குப் போன மின்சாரமும்
ஜன்னல் சாத்தி வந்த சம்சாரமும்
இன்வெர்ட்டரின் இயலாமையால்
வேகம் குறைந்த மின் விசிறியும்
என மழை வகுத்தது…
கோட்பாடுகள்!

விடிகாலையில்-
உப்பளங்களில்
உணவு கொத்தின…
உல்லான்கள்!

– சபீர்

Series Navigation

சபீர்

சபீர்