சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்



இரத்தக் காட்டேரிகளுக்கு
சட்டம் படிக்க ஆசை வந்தது
மனித உருவில்
கல்லூரியில் சேர்ந்தன
மாணவர்களாய் மாறிய பின்னும்
மனம் மாறவில்லை
இரத்தவெறி மீண்டும்
தலை தூக்கியது
சக மாணவர்களின்
இரத்தம் குடிக்க
அலைந்தன
கூரிய பற்கள்
இருந்த இடத்தில்
உருட்டுக் கட்டைகள்
கல்லூரி வளாகத்தில்
காவல் துறையினர்
நுழையக் கூடாதாம்
வாயிற் கதவருகே நின்று
வேடிக்கை பார்த்தனர்.
மனிதனுக்கும் மிருகத்துக்கும்
எத்தனை வித்தியாசம்?
யோசித்துப் பார்த்தேன்
தெரியவில்லை.


nabdulrahman@yahoo.com

Series Navigation

ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்

ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்