This entry is in the series 20101212_Issue

ஆர்த்தி



தொலைத்தலின்
தேடுதலிலேயே
தொடங்கிவிடுகிறது தினம்

அழுகிறேன்,சிரிக்கிறேன்
உறங்குகிறேன் கோபப்படுகிறேன்
இதெல்லாம் விடுத்து,
ஒன்று உண்டு

இலகுவானதில்லை
ஒவ்வொரு கேள்விக்கான பதிலும்
மற்றுமோர் கேள்வியாய்
உருவெடுத்து நிற்கையில்
பரிசாய் வரும்
குழப்பங்களை ஏற்றுக்கொள்வது ..

புலம்பல்களை நிறுத்திக்கொண்டு
முழுங்க கற்றுக்கொள்கிறேன்..

நீங்கள் எதையும்
தோண்டிப்பார்க்க வேண்டாம்
போகிற போக்கில்,புதிதாய் எதையும்
விதைக்காமல் இருங்கள் ..

நாளையேனும் எனக்காய்
ஓர் வார்த்தை கிடைக்கும்,
என்னோடு புதைத்துக்கொள்ள..

அதற்காய்,

இன்று மண்ணோடு
மரித்துப்போகிறேன்
சடலாய்வு செய்யமாட்டீர்கள்
என்ற நம்பிக்கையோடு!!

Series Navigation