சக்திமுக்தியடைந்தவளாகினள் யொருதினத்தில்.

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

கோ.முனியாண்டி, மலேசியா


நின் படர்தலுக்காய் காத்திருந்த
ஆகிருதியென்னுடையது.

பொங்கு காமக்கடலில்
சிக்கிய கலமாய் உடைந்துவிடக்
காத்திருப்பதும் யானே!
சிப்பியின் மலர்தல் சிற்பிக்குத்தான்
தெரியுமென்று செதுக்கிச்
செலுத்துவதற்காகவெனவே
எனதானயுடைமைகளைத்
திறந்து வைத்தே யானும்
காத்திருக்கிறேன்.

வேட்கையுடனலையும்
அலைகலையடக்க
என்குறிக்குள் உம் மழையிழை
நுழையவும் தவம்கொண்டேன்

அம்பதையூட்டியக் கூத்தனாய்
நீயுன் அக்கினிவிரல் நீட்டித்
தீண்டினாய்.
யிரவைக்கண்டு நாணிய
கன்னிவெளிச்சம்போல்
யானும் வளைந்தேன்.

அமுதைபொழிந்ததொரு
இராக்கணத்தில்
உனதுள்ளிருந்து வழிந்த நல்
அமிலத்தாரையை ஏந்திக்கொண்டேன்.

தீ கொழுந்துடன் உயர்ந்தது
முக்கண்ணும் தழைந்தாடிய பொழுதுகள்
சடைமுடியாட யாடியபொழுதிலும்
உன் சூரியனாய் எனதாழத்தில்
பூக்கள் நீந்தியபோதிலும்
எனையாலும் தாகம் அடங்க மறுப்பதேன்.

இவ்வளவுதானா என நான்
கூறிவிடத்துடிக்கிறேன்.
என்ன நீ பெண் ஞானி எனயுட்டி நகைப்பாய்
வரம் கேட்டொருநாள் தவம் தொடங்கிய
யெனை அவமதித்தாய்.
அடங்கமறுக்குமென் பசிதீர்க்க
நின்முகம் போதாது
என் தகிப்பின் எல்லை விரிகிறது
உயரத்தில் வானாகிறது
தரையில் மானாகிறது
யுனக்காக யாசித்தவள் கேட்கிறேன்
கர்வமின்றிசொல்
இவ்வளவுதானா
இதற்காகதானா
உவகையாளுமுன் பராக்கிரமம்
விரற்குறியில் அடங்கிவிட்டதா ?

பெண்வென்றடக்க முடியாதவள்
ஆகினள்
யாராலும்.

****
கோ.முனியாண்டி, மலேசியா
****
kabirani@tm.net.my

Series Navigation

கோ.முனியாண்டி - மலேசியா

கோ.முனியாண்டி - மலேசியா