கோவிந்த் கடிதம் பற்றி

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

ராம்கி


தமிழ், இந்தியா, அமெரிக்கா என பேச ஆரம்பித்து இறுதியில் ஹிந்தி படியுங்கள் என முடித்திருக்கிறார் நண்பர் . பல நாட்களாக இந்த ஹிந்தி பிரச்சாரம் பல வடிவங்களில் வருவதன் காரணம் மட்டும் புரியவில்லை.
உலகமயமாக்கலின் புண்ணியத்தில் ஆங்கிலம் வாயிலாக பிழைப்பு நடக்கிறது. இகத்திற்கும் இல்லாத பரத்திற்கும் இல்லாத ஹிந்தி எதற்கு? தேசிய மொழி என்கிறீர்களா? என்னைப் போன்றவர்கள் ஏற்கவில்லை. பிரிவினை வாதம் என்கிறீர்களா? கவலை இல்லை! உச்ச நீதிமன்றம் ஹிந்தியை தூக்கிப்பிடிக்கிறதாக துக்ளக் கூட கவலை தெரிவிக்கிறது.
நிலவி வரும் உலகமயமாக்கலில் ஆங்கிலம் இன்றியமையாதது. வட மாநிலங்களும் ஆங்கிலத்தின் பின் போவது தவிர்க்கமுடியாதது. நிலைமை இவ்வாறு இருக்க ஹிந்தி தேவையற்ற வீண் சுமை. தி மு க, பா ம க தலைவர்களின் இரட்டை வேடம் நாடறிந்தது. அதை வைத்து இப்பிரச்சினையை பார்ப்பது குழப்பத்திற்கே வழி வகுக்கும். இந்த மாறிய சூழலில் ஹிந்தி பற்றிய வாதம் தேவையே. முன்மொழிந்த கோவிந்திற்கு நன்றி.


vijiramki@yahoo.com

Series Navigation

ராம்கி

ராம்கி