கோமாளி ராஜாக்கள்..

This entry is part 55 of 43 in the series 20110529_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


**************************************

ராஜாக்களாய்க்
கற்பிக்கப்பட்டவர்கள்
ராணிகளாய்த் தெரியும்
சேடிகளின் கைப்பிடித்து.,
ரகசியக்காமத்துள்
சுற்றி வந்து..

பட்டத்து ராணீக்கள்
அடகு நகை மீட்கவோ.,
அலுவலகத்துக்கோ
அழும் பிள்ளைக்கு
பால் வாங்கவோ
சென்றிருக்கலாம்..

தன் அந்தப்புரத்து
ராணிகளைக்
கவனிக்க ஏலாமல்
யார் யாரின்
அந்தப்புரத்துள்ளோ
அத்துமீறி நுழைந்து

ஆக்கிரமிக்கும் ராஜாக்கள்.
சிரச்சேதம் செய்யப்படலாம்..
சேதமுற்றே திரிவோர்க்கு
சிரச்சேதம் பெரிதா என்ன..
ராஜாக்கள் கூஜாக்களாய்
பின் கோமாளிகளாய்..

Series Navigation<< ஒரு கொத்துப் புல்செல்வி இனி திரும்பமாட்டாள்! >>