கொடுமைக்குக்குறைவில்லை!

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

கலைமகள்ஹிதாயாரிஸ்வி…….இலங்கை


கருணை தன்னைக் காசினியில்
காலமெல்லாம் தேடினும்
அரிய சொத்தாய் அது ஆகி
அகிலந்தன்னில் மறைந்துள்ளது!

மடமையோடு மனிதர் தம்
வாழ் நாளினையே அழித்துவிடும்
கொடுமைக்கிங்கே குறைவில்லை
குவலயத்தில் மகிழ் வில்லை!

வஞ்சங்கள் சூ தோடு
வறுமைக் கோலம் துயர் நீங்கி
பஞ் சமா பா தங்கள்
பாரில் உலவுது காண நாளாய்!

நிறைவு,இன்பம் நெஞ்சத்து
நேர்மை, கருணை எல்லாமே
இணைந்து வருமா வாழ்வினிலே
ஏக்கம் போமா?சொல்லிடுவீர்?

கலைமகள்ஹிதாயாரிஸ்வி…….இலங்கை

Series Navigation

கலைமகள்ஹிதாயாரிஸ்வி.......இலங்கை

கலைமகள்ஹிதாயாரிஸ்வி.......இலங்கை