கொடி — மரம்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

ப. செளந்தர ராஜன்


—————————

அறுபட்டது தொப்புள்கொடி
அந்நாளில்…
மற்றொரு பந்தமும்
துண்டானது
பின் நாளில்…

கணக்குப் போட்டு
காகிதங்களாய்த் துப்பின
கம்ப்யூட்டராய் மாறிய இதயங்கள்

வாடிக்கொண்டிருக்கும்
வயதான மரமிரண்டும்
பச்சையாய் மாறிடுமோ
காகித எச்சத்தால் ?!

Series Navigation