கொசப்பாடியும் சமுதாய நல்லிணக்கமும்

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

கா. சீனிவாசன்சில தினங்களுக்கு முன் பத்தி¡¢கைகளில் ஒரு செய்தி வெளியாகியது. விழப்புரம் அருகே கொசப்பாடியில் உள்ள செம்பியம்மன் கோயில் சாவடிக்குள் ஹா¢ஜன மக்கள் நுழைந்ததற்கு மற்ற தெருக்களில் வசிக்கம் மக்கள் எதிர்ப்பு, கலவரம் என்ற செய்தி சமுதாயத்தில் மதநல்லிணக்கம் காண விரும்பும் அனைவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது.
உலகில் எல்லா பொருட்களிலும் இறைவனை காணுதல் இந்து மதத்தின் சிறப்பு. உயிரள்ள பொருட்களில் மட்டுமல்ல சடப் பொருட்களிலும் இறைவனை காணுகிறோம். பசுவை இறை அம்சமாக வணங்குவதும் இந்து மதம்தான். வேப்ப மரத்தையும் இறை அம்சமாக வணங்குவதும் இந்து மதம்தான்.
இந்த பூமியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை வெறும் கல்லாக, மண்ணாக, மலையாக பார்ப்பதில்லை. பூமா தேவி என்கிறோம். கங்கையை வெறும் நதியாத பார்ப்பதில்லை. கங்காமாதாவாக பார்க்கிறோம்.
இப்படி உலகில் எல்லாவற்றிலும் இறைவனை காணும் நமது சமுதாயம் ஏன் சில மனிதர்களை இறை அம்சமாக இல்லை, வெறும் மனிதராக பார்க்கக் கூட விரும்பவது இல்லை? அவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது. செருப்பு அணியக்கூடாது. தேனீர் அருந்த தனி தம்ளர்..
இது ஒழிக்கப்படவேண்டிய ஒரு பழக்கம்என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது ஒழிய வேண்டும் என்று விரும்பினால் அதை ஆக்கப்பூர்வமான முறையில் கையாள வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் இன்று ஜாதி சண்டையில் குளிர் காய நினைக்கும் அரசியல்வாதிகளும், மதமாற்றும் கும்பல்களும் இதனை எ¡¢யும் தீயில் எண்ணெய் ஊற்றி வளர்க்கும் போது, இது ஒழியுமா என்பதே கேள்வி குறி.
கொசப்பாடியில் நடந்த பிரச்சினைகளுக்கு ஊர்மக்களும் காரணம் என்று ஒரு புறம் வைத்துக் கொண்டாலும், வெளியூ¡¢லிருந்து வந்த சிலர் பிரச்சினையை அதிகப்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது.
கொசப்பாடியில் போன்று அதே பிரச்சினை வேலூர் மாவட்டம் ஆற்காட்டிற்கு 16 கி.மீ. தூரத்தில் உள்ள கே.வேளூர் என்ற கிராமத்திலும் இருந்தது. ஆனால் இப்போது அந்த கிராமம் அந்த கொடுமையின் சுவடே இல்லாமல் கறைந்து போயிருக்கிறது. அதன் வரலாற்றை இப்போது பார்க்கலாம்.
சென்ற வாரம் முன்னாள் ஐ. ஏ. ஏஸ் அதிகா¡¢ வி. சுந்தரம், ஆர். எஸ். எஸ். வட தமிழக இணை செயலாளர் சாம்பமூர்த்தி அவர்களுடன் கே. வேளூர் கிராமத்திற்கும், பாலக்கோடு அருகில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் முயற்சியால் தீண்டாமை கடைப்பிடிக்காத நல்லிணக்கம் கிராமம் விருது பெற்றுள்ள ஜோதிஹள்ளி கிராமத்திற்கும் சென்றிருந்தோம். அந்த கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பார்வையிட்டோம்.
கே. வேளூர் ஹா¢ஜனங்கள் அதிகம் வசிக்கும் ஒரு கிராமம். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவி ஹா¢ஜன வகுப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வினாயகம் என்பவர் கடந்த பத்தாண்டுகளாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.
அந்த கிராமத்தின் மத்தியில் ஆதிகேசவப் பெருமாள் கோயிள் உள்ளது. மற்ற கிராமத்தைப் போலதான் அதுவும் ஆரம்பத்தில் இருந்தது. கோயிலுக்குள் ஹா¢ஜனங்கள் செல்ல முடியாது. சுவாமி கும்பிட முடியாது.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்று ஹா¢ஜனங்கள் சுதந்திரமாக, எவ்வித போலீஸ் பந்தோபஸ்து இல்லாமல் மற்ற இந்துக்களைப் போல, சாதாரணமாக கோவிலுக்கு செல்வதை காணமுடிகிறது. இதற்கு காரணம் ஆர். எஸ். எஸ். ஊழியர்கள் செய்த மகத்தான பணிதான்.
ரங்கநாதன் என்ற ஒய்வு பெற்ற பள்ளி ஆசி¡¢யர் அந்த கோயிலின் பட்டாசார்யர். ஊர் மக்களின் அன்பையும், மா¢யாதையும் பெற்றவர். மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவதற்கு காரணமாக இருந்தவர். அவா¢டம் படித்த மாணவர்கள் இன்று பல நல்ல பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
அவர் ஆசி¡¢யர் பணியிலிருந்து ஒய்வு பெற்று, அந்த கோயிலின் பட்டாசார்யர் பொறுப்பை ஏற்கும் போது அந்த கோயில் பாழடைந்து இருந்தது. அந்த கோயிலை புனர்நிர்மானம் செய்து கும்பாபிஷேகம் செய்துவிட வேண்டும் என விரும்பினார். அதற்காக தன்னுடைய வயதை, உடல் நல குறைவையும் பொருட்படுத்தாமல் இரா பகலாக பணியாற்றினார்.
புனர்நிர்மானம் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் தேதி குறிக்க ஊர் பொ¢யவர்கள் ஒன்று கூடினார்கள். ஒவ்வொருவரும் கும்பாபிஷேகத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்று தாங்கள் கருத்தை கூறினார்கள். ஆனால் பட்டாசார்யர் ரங்கநாதன் கூறிய கருத்து அங்குயிருந்த ஊர் முக்கியஸ்தர்களிடம் பொ¢ய ஆச்சா¢யத்தை ஏற்படுத்தியது.
கும்பாபிஷேகத்தை ஊர் மக்கள் மட்டுமல்ல ஹா¢ஜன மக்களும் இணைந்து நடத்திட வேண்டும் ன்ற கோ¡¢க்கையை அவர்கள் முன் வைத்தார்.
இந்த கருத்தை வேறு யாராவது கூறியிருந்தால், அந்த கூட்டத்தில் என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த கருத்தை சொன்னவர் அந்த ஊ¡¢ல் மட்டுமல்லாமல் பக்கத்து பல கிராம மக்களின் அன்புக்கும், மா¢யா¨த்ககும் பாத்திரமானவர். ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆச்சாரங்களை கடுமையாக அனுஷ்ட்டிப்பவர். அவர் இந்த கோ¡¢க்கையை ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வைத்தது அவர்களுக்கு வியப்பைதான் அளித்தது. கி¡ரம மக்களும் அவருடைய கோ¡¢க்கையை மனமார ஏற்றுக் கொண்டனர்.
இந்த விஷயத்தை பட்டாச்சார்யரே ஹா¢ஜன மக்கள் வசிக்கும் பகுதிக்கு நோ¢ல் சென்று தொ¢வித்தார். அவர்களுக்கும் ஒரே ஆச்சா¢யம். நாட்டில் எந்த மாற்றம் வந்தாலும், இந்த கிராமத்தில் இது எட்டா கனி என்று எண்ணிய அவர்களுக்கு இப்போது அது எட்டும் கனியாகி விட்டது. ஹா¢ஜன மக்கள் ஒரே உற்சாகம். உற்சாகத்தில் திளைந்தனர்.
கோயில் கும்பாபிஷேகம் அன்று ஹா¢ஜன மக்கள் அசைவு உணவு சாப்பிடாமல் விரதம் இருந்து, நெற்றில் திருமண் இட்டு, பயபக்தியுடன் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.
அந்த பட்டாச்சார்யா¢ன் புதல்வர் முகுந்தன் கூறுகிறார். ஹா¢ஜனங்கள் காலடி படாத பகுதி இந்த கிராமத்தில் எதுவுமேயில்லை – இந்த கோயிலை தவிர. இந்த கோயிலின் சுற்றுச்சுவர்க்குள் அவர்கள் நுழைந்ததேயில்லை. நீங்களும் கோயிலுக்கு வரலாம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு ஒரே சந்தோஷம். அவர்களிடம் இருந்த சந்தோஷத்தில் கோயிலுக்குள் நுழைந்துவுடன் இங்கு என்ன இருக்கிறது, அங்கு என்ன இருக்கிறது என்று இங்கும் அங்கும் ஒடி ஒவ்வொரு சிலையையும் அதிசயங்களைப் போல பார்த்ததை இன்னும் என் கண் முன்னே நிற்கிறது .
ரங்கநாதன் மனதில் மாற்றம் வந்ததற்கு என்ன காரணம். ராமானூஜர் வாழ்க்கையும் ஒரு காரணம். ராமானுஜர் செய்த புரட்சி போல தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் மனதில் தோன்றியது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் தேவநாதன் என்பவர்.
தேவநாதன் அவருடைய மருமகன். ராணிப்பேட்டையில் வேலை செய்து வருகிறார். அத்துடன் வேலூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயலாளர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அமைப்புக்காக அந்த மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்பவர். சமுதாய நல்லிணக்கத்திற்காக பிரச்சாரங்கள் செய்து வருகிறார். சமுதாய நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அந்தந்த ஊ¡¢ல் ஆர். எஸ். எஸ். கிளை இருக்க வேண்டும். அவர்கள் தினசா¢ ஒரு மணி நேரம் கூடி பயிற்சி செய்து உலக விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் என்பார்.
அதைப் போல தன் மாமனா¡¢டமும் பிரச்சாரரம் செய்தார். அது ரங்கநாதன் வாழ்க்கையில் பொ¢ய திருப்பத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா எனப்படும் கூடுதல் ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தார். அந்த ஷாகாவில் அந்த ஊ¡¢ல் இருந்த அனைத்து ஜாதியினரும் கலந்து கொண்டனர். இதுவே அந்த ஊ¡¢ல் தீண்டாமை ஒழிவதற்கு போடப்பட்ட முதல் அடிக்கல்லாக அமைந்தது.
அவருடைய அடுத்த இலக்கு கோயில். கோயிலிலும் ஹா¢ஜனங்கள் நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த காத்திருந்தார். அதற்கான நேரம் கோயில் கும்பாபிஷேகம் என்ற வடிவத்தில் வந்தது. அப்போது தன்னுடைய ஆசையை ஊர் மக்களிடம் எடுத்துரைத்து அதில் வெற்றியும் பெற்றார். அதற்காக தான் அவர் உயிரும் காத்திருந்து போலும். கோயில் கும்பாபிஷேகமும், ஹா¢ஜனகள் ஆலயப் பிரவேசமும் வெற்றிகரமாக நடத்தி முடிந்து, சமீபத்தில் அவர் கண்ணை மூடினார்.
பட்டாசார்யர் ரங்கநாதனின் உபதேசங்கள் ஊருக்கு மட்டுமல்ல, தன் சொந்த வீட்டிலும் அதை கடைப்பிடித்தார். நாங்கள் கோயிலுக்குச் சென்று ஊர்மக்களுடன் கலந்துரையாடிவிட்டு ரங்கநாதன் வீட்டிற்கு வந்தோம். இப்போது அவருடைய துணைவியார் மட்டும் அந்த வீட்டில் வசித்து வருகிறார். அவர்கள் வீட்டில்தான் எங்களுக்கு இரவு உணவு ஏற்பாடுயாகி இருந்தது. அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ஹா¢ஜன சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் எங்களுடன் சேர்ந்து உணவு உண்டனர்.
நகரத்தில் ஜாதி வேற்றுமைகள் அவ்வளவாக பார்ப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அது ரத்தத்தில் ஊறி யிருக்கிறது. ஆனால் அந்த ஒரு ஆச்சாரமான குடும்ப வீட்டில், இயற்கையா ஹா¢ஜன சமுதாய்ததைச் சேர்ந்தவர்களும் உணவு உண்டனர். அவர்களக்கும் தயக்கம் இல்லை. அந்த வீட்டில் பா¢மாறியவர்களுக்கும் தயக்கம் இல்லை. அவர்கள் சாப்பிட்ட இலையையும் வீட்டில் உள்ளவ்ர்கள்தான் எடுத்தார்கள்.
சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். வெளியில் சமுதாய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை பற்றி நீண்ட நேரம் வீர சொற்பொழிவு ஆற்றுவார்கள். ஆனால் தன் சொந்த வீட்டில் ஹா¢ஜன மக்களை அண்ட விடமாட்டார்கள். ஆனால் ரங்கநாதன் சமுதாயத்தில் என்ன மாற்றம் கொண்டு வர விரும்பினாரோ அதை தன் வீட்டிலும் கொண்டு வந்தார்.
இன்று கே.வேளூர் ரங்கநாதன் போல, ஒவ்வொரு ஊ¡¢லும் ஒவ்வொரு பேட்டையிலும் பல ரங்கராதன்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பகுதியில் ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறார்கள். ஆனால் மாற்றம் வந்து விட்டால், அரசியல் பண்ண முடியாது என்று நினைக்கும் சில அரசியல்வாதிகள், மக்கள் அறுவடை செய்ய நினைக்கும் மதமாற்றக் கும்பல்கள் இதற்கு இடையூடுகள் செய்து வருகின்றனர். இவர்கள்தான் சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகள். மக்கள் இதனை பு¡¢ந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும். அப்போது உண்மையான சமுதாய நல்லிணக்கம் ஏற்படும்.
– கா. சீனிவாசன் (mediasrinivasan@gmail.com)

Series Navigation

கா. சீனிவாசன்

கா. சீனிவாசன்