கேள்வியின் நாயகனே!

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

சித்ரா ரமேஷ்


‘பீச்சில் காதலிக்கு சுண்டல் வாங்கித் தரலாமா ? ‘

டி.ஜே. பாஸ்கரன்

அய்யம்பேட்டை

பதில்1: தாராளமாய் வாங்கித் தரலாம். திருமணத்திற்கு முன் மிசூற்நுசூஷ் தான் வாங்கித்தரக்கூடாது.

பதில்2: பீச்சில் சுண்டல் விற்பது எப்போது ஆரம்பித்தது என்பது பற்றி ஏற்கெனவே ாபோனார்கள் குழி பறித்தார்கள்ா தொடரில் எழுதி விட்டேன். ாகாதலி, பீச்ா என்று ரொமான்டிக்காக கேட்டு விட்டு கூடவே எதற்கு சுண்டல் ?

பதில்3: சுண்டல் ரொம்ப உத்தமமான மாலை வேளை சிற்றுண்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த போது திரட்டுப் பால் சாப்பிட்டதாகத்தான் ஞாபகம். கோவிலில் தான் சுண்டல் கிடைக்கும். இருந்தாலும் சுண்டலில் அதிகப் புரதச் சத்து இருப்பதால் இப்படி தினமும் சுண்டல் வாங்கித் தந்தால் உங்கள் காதலி உங்களை விட ஒரு பிடி கூடுதல் உயரமாக வளர வாய்ப்பிருக்கின்றது!!!

பதில்4: தேர்தலை ஒட்டி பீச்சில் பேரணி நடத்தாமல் தடை போட்டு விட்டாலும் ஆளும் கட்சியின் அடிப்படை நோக்கத்தை சற்று கவனித்தால் பீச்சில் சுண்டல் விற்கும் பையன்களின் எதிர் காலத்தைப் பற்றி நாமாவது கவலைப்பட வேண்டியிருக்கிறது.

பதில்5:இந்தியாவின் குழந்தைத் தொழிலாளிகளில் பெரும்பான்மையினரை இங்கே மெரினா கடற்கரையில் காணலாம். சேலம், தர்மபுரி பக்கத்திலிருந்து வறுமையின் காரணமாக ஓடி வந்தவர்கள். இவர்களைப் பற்றிய விழிப்புணர்வு இயக்கம் ஒன்றினை விரைவில் தொடங்கப் போகிறேன்.

பதில்6: சுண்டல் சரி. பீச் எங்கே ? ?ா! ?ா! ஐய்யோ பாவம் உங்க காதலி!

நம் பத்திரிகைகளை தொடர்ந்து படிப்பவர்கள் இந்த பதில்களுக்கு பழகியிருப்பார்கள். கேள்வி கேட்பவருக்கு உண்மையிலேயே காதலிக்கு சுண்டல் வாங்கித் தருவதற்கு ஆலோசனை தேவையா ? அப்படி உண்மையாகவே ஆலோசனை கேட்கும் ாஅப்பாவிா வாசகராக இருக்கும் பட்சத்தில் முதல் பதில்தான் அவருடைய சந்தேகத்திற்கு விடையளிக்கிறது. அய்யம்பேட்டையில் ஏது பீச் ? அப்படியே அந்த வாசகர் சென்னைக்கு வந்து காதலியைத் தேடி பிடிக்கும் சாமர்த்தியசாலியாக இருந்தால் இந்த கேள்வி பதில் எல்லாம் அநாவசியம்.

பிராக்மாட்டிஸம், ரியலிசம், சர் ரியலிசம், மேஜாக்கல் ரியலிசம், க்யூபிசம் என்ற அறிவு பூர்வ கேள்விகள், அமெரிக்காவின் அதிகாரப்போக்கு, ஆஃப்கானிஸ்தானின் ஆபத்தானப் போக்கு என்று சர்வதேச அரசியல், காந்தியின் ஒத்துழையாமை இயக்கக் கொள்கை, நேருவின் டெமாக்ரடிக் சோஷாயலிசக் கொள்கை, இந்திரா செய்த தவறு, வாஜ்பாயின் தாராளமயக் கொள்கை என்ற இந்திய அரசியல் கேள்விகள், திருவள்ளுவர் ஏன் நான்காம் பால் இயற்றவில்லை (ஏன் ?), குறுந்தொகையில் அகப்பாட்டுகள், கம்பர் சைவரா, வைணவரா போன்ற சங்க,சங்கம் மருவிய கால இலக்கியக் கேள்விகள், தற்கால இலக்கியத்தில் பின் நவீனத்துவப் போக்கு, புதுக் கவிதைகளில் கவிஞர்கள் கையாளும் படிமங்கள் ாபெண்ா கவிதாயினிகளின் பாலியல் சிந்தனைகள் என்ற இலக்கியக் கேள்விகள்,

இருக்கவே இருக்கிறதே தமிழர்களின் தலையாயப் பிரச்சினை!!! அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ? ரஜனியின் அடித்த படம் எப்போது ? அதை இயக்கப் போவது யார் ? சிம்ரன் இடத்தை பிடிக்கப் போகிறது யார் ?(த்ரிஷாவா ? சினேகாவா ?) இப்படி பலதரப்பட்ட கேள்விகள்….

இதற்கு மேல் மருத்துவக் கேள்விகள், அந்தரங்கக் கேள்விகள் (இதில் பாதிக்கு மேல் பக்கத்து வீட்டுக்காரர், உடன் வேலை செய்பவர்,கணவரின் நெருங்கிய நண்பர்களுடன் உறவுக் குழப்பக் கேள்விகளாக இருந்து கேள்வி கேட்பது ?ாலிவுட் நடிகைகளா இல்லை நம் தமிழ் பெண்களா என்று சந்தேகப்பட வைத்து பாதி ஆண்களை கதி கலங்கடிக்கிறது.)

அழகுக் குறிப்புக் கேள்விகள் (சென்ற வாரம் நீங்கள் குறிப்பிட்டிருந்த சோற்று கற்றாழையையும் ஊமத்தை இலையையும் அரைத்து தடவி வருகிறேன். எத்தனை நாள் இவ்வாறு செய்ய வேண்டும் ?) இப்படி ரொம்ப நாள் செய்ய முடியாது. அடுத்த இதழில் பதில் வருவதற்குள் பத்து நாள் காரியம் முடிந்திருக்கும். நம் பெண்மணிகளுக்கு ாமுக்கியமானதுா சமையலறைச் சந்தேகங்கள்தான்! தந்தூரி அடுப்பில்லாமல் தந்தூரி ரொட்டி செய்வது எப்படி ? பன்னீர் தயாரிப்பதற்கு வினீகர் தேவையா ? ஸ்டஃப்புடு கேப்ஸாகம் செய்வதற்கு உருளைக்கிழங்குத் தேவையா ? என்று எத்தனையோ உயர் மட்டக் கண்மணிகளின் கேள்விகள்!அடேயப்பா! கேட்க ஆரம்பித்தால் மாளாது.

இதில் நிறையக் கேள்விகளுக்கு பதில் எனக்குத் தெரியும் என்பதால் திண்ணை ஆசிரியர் கூட இந்த பகுதி தொடங்குவதைப் பற்றி யோசிக்கலாம்.

இதில் வசதியான விஷயம் என்னவென்றால் கேள்வி கேட்பவருக்கு உண்மையிலேயே பதிலைப் பற்றிய அக்கறை கிடையாது. அய்யம் பேட்டை டி.ஜே.பாஸ்கரன் என்ற பெயரை அச்சில் பார்த்தால் போதும். பதில் பதில் சொல்பவருக்கு இதைவிட பெரிய வசதி இவரே தனக்குத் தேவையான கேள்விகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பதில் தெரியாதக் கேள்விகளை ாஅவுட் ஆஃப் சிலபஸ்ா என்று ஒதுக்கி விடலாம். ாகச்சா முச்சாா கேள்விகளை தற்செயலாக தேர்ந்தெடுத்து இஷ்டத்துக்கு திட்டி கூட பதில் அளிக்கலாம்.

சரி! சென்ற வாரம் குறிப்பிட்டிருந்த சாலமன் மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். பறவைகளைப் போல் சாலமன் மீன்களும் இடம் பெயர்ந்து முட்டையிடும். நன்கு வளர்ந்த சாலமன் மீன்கள் கடலில்தான் காணப்படும். இவை சாப்பாடு, தூக்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடல் நீரிலிருந்து நீந்தி சில சமயம் 2,000 மைல் வரை நீந்தி சரியாக தங்கள் பிறப்பிடம் வந்து சேரும். பூமியின் சுழற்சி, நட்சத்திரங்கள், காந்த சக்தி, மோப்ப சக்தி இவற்றால் மிகத் துல்லியமாக கணக்கிட்டு தாய் எங்கே முட்டையிட்டதோ அதே இடத்திற்குப் போய் சேர்ந்து விடும். பெண் மீன்கள் நீருக்கடியில் தங்கள் வாலினால் மணலைத் தோண்டி சிறிய கூட்டை உருவாக்கி முட்டைகளிடும். கிட்டத்தட்ட 10,000 முட்டைகளிடும். இதைத் தொடர்ந்து வரும் ஆண் மீன்கள் விந்து திரவத்தை முட்டைகள் மேல் சுரந்து மூடி விடும். கல்யாணம், கவிதை, மல்லிகைப்பூ,அல்வா போன்ற குழப்பங்கள் ஏதும் இல்லாமல் எளிமையான இனப்பெருக்கம். கடல் நீரில் வாழ்வதற்குத் தேவையான உடலமைப்பை பெற்ற வளர்ந்த சாலமன் மீன்கள் ஆற்று நீரில் வாழ முடியாமல் நீண்ட பயணத்தினால் வேறு களைத்து பலவீனமாகி இனப்பெருக்கத்திற்குப் பிறகு இறந்து விடுகின்றன. பிறகு முட்டையிலிருந்து வரும் குஞ்சுகள் மீண்டும் தங்கள் வாழ்க்கை போராட்டத்தை தொடருகிறது. முதலில் ஆற்று நீரில் வாழ்வதற்குத் தகுந்த உடலமைப்பை பெற்றிருந்தாலும் ஆற்றை நீந்தி கடலுக்குச் செல்வதற்கு முன் முகத்துவாரத்தில் ஒரு வருடம் தங்கி உப்பு நீரில் வாழத் தேவையான உடல் மாற்றங்களைப் பெறுகின்றன. இறுதியில் கடலுக்குச் சென்று இரண்டிலிருந்து ஐந்து வருடங்களில் முழு வளர்ச்சியடைகின்றது. மீண்டும் இனப்பெருக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தேடி பிறப்பிடம் நோக்கி நீந்தத் தொடங்குகின்றன.

இதனால்தான் ஜோவிற்கு ஒரு பெரிய சாலமன் மீன் கூட கிடைக்கவில்லை. சில வகை சாலமன் மீன்கள் 55கிலோ எடை வரை கூட இருக்கும். அப்படியே முட்டையிட வந்த சாலமன் மீன்களிருந்தாலும் தூண்டிலுக்கெல்லாம் மாட்டாது. இறுதியாக ஒரு சந்தேகம். மீன் பிடிக்க தூண்டில் போட்ட யாருக்காவது பழைய காலணி மாட்டியதுண்டா ?

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்