கேட்பதெல்லாம் தந்திடுவேன்..

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

செங்காளி


வரப்புமேலே நடந்துசெல்லும் அழகியைப்
பார்த்து அவன் கேட்கின்றான்,

கூடைதூக்கிப் போறவளே
கூடையிலே இருப்பதென்ன
அப்பனுக்குக் கம்பஞ்சோறு
ஆக்கிப்போறேன் மச்சானே
ஆசையாயிருக் கென்கண்ணே
அதிலெகொஞ்சம் கரைச்சுக்குடேன்
அப்படிநான் கொடுத்துவிட்டால்
அப்பனுக்குப் பசிக்காதா
என்பசிக்குக் கண்ணாத்தா
என்னதான் கொடுத்திடுவாய்
விபரமாய்ச் சொல்லிவிட்டால்
வேண்டுவதைத் தந்திடுவேன்
சொல்லிவிட்டால் என்னவென்று
சரியாகக் கொடுப்பாயா
என்னால் முடியுமென்றால்
எப்படியும் கொடுத்திடுவேன்
கட்டியணைத் துமுத்தமொன்று
கன்னத்தில் தருவாயா
அவ்வளவு ஆசையென்றால்
ஆவதைத்தான் செய்திடுவீர்
என்னசெய்ய வேண்டுமென்று
எனக்குத்தான் சொல்லிவிடேன்
தாய்தந்தை சம்மதிக்க
தாலியைத்தான் கட்டிடுவீர்
கட்டிவிட்டால் தாலியைத்தான்
கன்னத்தில் தருவாயா
கன்னத்தில் மட்டுமின்றி
கேட்பதெல்லாம் தந்திடுவேன்

என்று சொல்லிக்கொண்டே நாணம்
முகத்தில் படர நடக்கின்றாள்

—-
natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி