கேட்க முடியா ஓசை
சத்தி சக்திதாசன்

மொட்டு பூவாக விரியும்
ஓசை
கேட்க முடியாததே
முகில் மழையாக மாறும்
ஓசை
கேட்க முடியாததே
நீர் ஆவியாக உருமாறும்
ஓசை
கேட்க முடியாததே
இமை விழியை மூடும்
ஓசை
கேட்க முடியாததே
புன்னகை விரியும்
ஓசை
கேட்க முடியாததே
வண்டு தேனருந்தும்
ஓசை
கேட்க முடியாததே
கேட்க முடியா
ஓசைகளை கேட்க
ஆசை
அடையமுடியா இலக்குகளை
அசைபோடும் நிலையோ ?
sathnel.sakthithasan@bt.com