குழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

கஜன்


—————————————-

மலர்கள் தோற்கும் அழகினிலே
. . . மனிதம் மயங்கும் சிரிப்பினிலே
புலன்கள் பொய்த்துப் போகுதிங்கே
. . . புரியும் உன்றன் செய்கையிலே
விலங்கு மனதில் மாட்டுகிறாய்
. . . வெற்றி வாகை கொள்கின்றாய்
உலகும் உன்னில் உதித்திடுமே
. . . ஒடி ஆடும் என்மகளில்

அளிக்கும் என்றன் இன்பத்தில்
. . . அமுத சுரபி நீயிங்கு
நளினம் காட்டும் புருவங்கள்
. . . நானும் மயங்கி நிற்கின்றேன்
களிப்பில் கழியும் கணங்களிங்கே
. . . கடைசிக் குழந்தை முகத்தினிலே
தெளிவாய் இன்று சொல்லிடுவேன்
. . . தினமும் சிறப்பு குழந்தையாலே
——————-
avathanikajan@yahoo.ca

Series Navigation

கஜன்

கஜன்