குளிர் காலம்
கணேஷ் குட்டி

குளிர் காலம் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது அமெரிக்காவில்
கோடையில் மட்டும் காய்ந்த எனக்கு
இந்த குளிர் காலம் இதமாக தோன்றியது முதலில்
பனி சூழ்ந்த இந்த பிரதேசம்
புதிய பிரபஞ்சமாய் தோன்றியது முதலில்
பனிமழையிலும், பனிசறுக்கிலும்
என்னையே நான் மறந்து போனேன் முதலில்
ஆனால் தொடர்ந்து வரும் குளிர் காலம்
தொந்தரவாக தோன்றுகிறது இப்போது
இப்போது தான் தெரிகிறது
என் நாட்டின் வெயிலின் அருமை