குறும்பு
Published December 4, 2003 • By
நம்பி
நம்பி

———–
எல்லா வீட்டுக் கூரையிலும்
வேப்பிலையை விடிவதற்குள்
செருகிவிட்டு
தெருவே ‘கொல் ‘லென்று
காலையில் ஆனபோது
ஊமையாய் சிரித்தது.
ஆரியபவன் கைகாட்டியை
கல்லூரி காண்டினுக்கு
திருப்பிவிட்டு
புதுப் பெற்றோர் திண்டாடியதை
தூரத்திலிருந்து ரசித்தது.
‘do not disturb ‘ எனத் தொங்கும்
ஹோட்டல் அறைக் கதவை
‘please make up room ‘ என
மாற்றிவிட்டு போவது
குற்றமில்லா குறும்புகள்
தொடர்கின்றன…
எங்கிருந்தாலும்.
———————–
nambi_ca@yahoo.com