குறும்பட வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

சிவகாசி திலகபாமா


அய்யநாடார் ஜானகியம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் தன்னிச்சையாய் திரிந்து கொண்டிருந்த மயில்களை வியப்போடு வைகை செல்வி பார்த்த படி வர உள்நுழைந்தோம். முதல்வர் அறை எதிர் கொண்டழைத்தது. இயல்புகளை கூட வியப்போடு பார்ர்க்கின்ற தருணங்கள் நேருவது , மயில்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் நேருகின்றது . அதே கருத்தை உரைக்க எடுக்கப் பட்ட குறும்படத்தை திரையிட ஒன்று கூடல் மாலை 4 மணிக்கு துவங்கியது.

அரங்கத்தில் மாணவிகளை விட மாணவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தனர். முதல்வர் அவர்கள் தலைமை உரை நிகழ்த்த வைகை செல்வி லக்ஷ்மி அம்மாள் பற்றியும் , குறும்படம் பற்றியுமான அறிமுக உரையுடன் இப்படத்திற்கான தேவையையும் வலியுறுத்திப் பேசினார்.

உரைக்கு பின் வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு எனும் குறும் படம் முதல்வர் சுடரொளி அவர்கள் வெளியிட வைகை செல்வி பெற்றறுக் கொண்டார். தொடர்ந்து படம் திரையிடப் பட்டது. ஆசிரியர் பரிமளா அவர்களும் மாணவியர்களும் திரையிடப் பட்ட குறும்படத்தை பற்றி உரை நிகழ்த்தினர். மாணவிகள் நெகிழ்ச்சியுடன் எங்கள் திறமைகள் மறைந்து போக விடாமல் வெளிக் கொண்டு வருவோம் என உறுதியுடன் பேசினர்.

திலகபாமா தனது ஏற்புரையில், லக்ஷ்மி அம்மாள் அறிந்திருந்த இலக்கிய உலகின் உரையாடல்களை , விவாதங்களை பதிவு செய்ய என்று அம்மாவின் குரலை, குரல் வழியாக சில வரலாறுகளை பதிவு செய்ய முயற்சிக்கையில் இந்த சமுதாயம் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பார்க்க மறந்த இன்னுமொரு பக்கம் இருப்பதை உணரத் துவங்கியதாகவும், அதை நோக்கி இந்த குறும் படம் இயக்கப் பட்டிருக்கின்றது. அந்த வகையில் லக்ஷ்மிஅம்மாளை தான் நினைத்த விதத்தில் பதிவு செய்த இந்த முயற்சி நிறைவானதாக இருக்கின்றதென்றும், இன்று இலக்கியம் சார்ந்து அம்மாவின் முழுமையான் உரையாடல்கள் அடுத்த முயற்சியில் வெளிவரும் அது இன்னும் காத்திரமாக லக்ஷ்மி அம்மாளை மட்டுமன்றி ஒவ்வொரு பெண்ணின் இயல்பான இருப்பையும் அழுத்தமாக வெளிப்படுத்தும் என்று கூறினார்

—-

mathibama@yahoo.com

Series Navigation