குறும்பட நாட்கள் அழைப்பிதழ்

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

அறிவிப்பு


இன்று புகலிட நாடுகளிலும் தமிகத்திலும் ஈழத்திலும் வெளியாகும் தமிழ குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள் புதியதொரு தமிழ்ச் சினிமாவின் மீதும் தமிழ் வாழ்வின் மிதும் நம்பிக்கை கொள்ளுமாறு நம்மைக் கோருகின்றன.

இத்தகைதொரு சூழலில் புகலிடக் குறும்படங்களின் அழகியல் தொடர்பாகவும் தயாரிப்பு முயற்;சிகள் தொடர்பாகவும் ஒரு மீள்பார்வையை மேற்கொள்ள வேண்டியதன் தேவை கருதி ஐரோப்பாவிலுள்ள நண்பர்கள் பாரிஸ் மாநகரில் மூன்றுநாள் புகலிடத்தில் தயாரிக்கப்பட்ட குறும்பத் த்ிரையிடலையும் அதன் மீதான கலந்துரையாடலையும் மேற்கொள்ளத் திர்மானித்திருக்கிறார்கள்.

காலஞ்சென்ற கலைச்செல்வன் நினைவாக இந்தக் குறும்படப் பட்டறை நிகழ்கிறது என்பதனையும் அவரது நண்பர்கள் அறிவிக்கிறார்கள்.

2005 டாசம்பர் 04, டிசம்பர் 18 மற்றும் 2006 ஜனவரி 08 என மூன்று நாட்கள் இந்த திரைப்படப் பட்டறை ஒழுங்க செய்யப்பட்டிருக்கிறது.

மேலதிகத் தொடர்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி :

ashokyogan@hotmail.com

Series Navigation