குருவிகளின் சாபம்:

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

கி.சார்லஸ்


எதார்த்தமாய்
குறிவைத்து
வீசியெறிந்த கல்லில்
துடிதுடித்து
இறந்தது
குருவியொன்று.
இப்போதெல்லாம்
எங்கேயேனும்
குருவிகளின்
சப்தங்களை
கேட்கும்போது
சாபமிடுவது போலவே
இருக்கிறது
என்னை.
* கி.சார்லஸ் *
காரப்பிடாகை
ckicharles@yahoo.com

Series Navigation

கி.சார்லஸ்

கி.சார்லஸ்