குடும்பம்
Published March 29, 2007 • By
ரஜித்
ரஜித்

பசிகள் இறங்குமிடம் குடும்பம்
சுமைகள் இறக்குமிடம் குடும்பம்
குட்டிக் குடும்பம் கோடு
கூட்டுக் குடும்பம் கோலம்
உப்பு வாங்குவார் தாத்தா
அரிசி வாங்குவார் அப்பா
கறிகாய் வாங்குவார் பிள்ளைகள்
நெருப்பாய் எரிவாள் அம்மா
அம்மா
உன் சிரிப்பில்
எல்லாரும் சிரிக்கிறோம்
உன் வலியில்
எல்லாரும் அழுகிறோம்
உடல்கள் வேறாய்
உயிர் மட்டும் ஒன்றாய்
வாழும் ஆலயம் குடும்பம்
வாழ்ந்து முடிந்த அப்பா அம்மா
வணங்கும் தெய்வமாய்
வாழுமிடம் வாழ்த்துமிடம்
குடும்பம்
ரஜித்
rajid_ahamed@yahoo.com.sg