கீதாஞ்சலி (87) அவளைத் தேடிச் செல்கிறேன்!

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாநம்பிக்கை யிழந்த நிலையில்,
தேடிப் போகிறேன்,
நானவளை!
வீடெங்கும் மூலை முடுக்கெல்லாம்
தேடுகிறேன்!
காண வில்லை நானவளை!
சிறியது என்னில்லம்,
மறுபடியும்
பெறுவ தில்லை ஒருபோதும்,
மறைந்தது அங்கே!
அதிபனே!
வரம்பற்ற மாளிகை உன்னுடையது!
ஆயினும்
வந்திருக்கிறேன்,
உந்தன் மாளிகை வாசலுக்கு
அவளைத் தேடிய வண்ணம்!
உன் அந்தி வானின்
பொன் விதானக் குடையின் கீழ்
நின்ற வண்ணம், ஆர்வமாய்
உன்முகம் நோக்கின
என் விழிகள்!
விண்வெளியின்
முடிவில்லா விளிம்புக்கு நான்
வந்திருக் கிறேன்.
காணாமல் போகாது எதுவும் அங்கே!
கண்ணீர் வழியாகத் தெரியும்,
களிப்பில்லாத, உறுதியற்ற
ஒளிக்கண் ணில்லாத,
முகமில்லை அங்கே!
அவளின்றி வெறுமையாய்ப் போன
என் வாழ்வை,
மூழ்க்கிடு கடலுக் குள்ளே! முழுமையாய்
ஆழ்த்திடு படு பாதாளத்தில்!
பிரபஞ்சத்தின் பூரணத்தில்
கரங்கள் தொடும்
இனிய வாய்ப்பினை இழந்து போனதாய்
உணர வேண்டும் நான்,
ஒருமுறை யாவது!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 20, 2006)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts