காவேரி உற்பத்தியாகும் கர்நாடகம்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

என் எஸ் நடேசன்


‘ ‘இந்து சமவெளிக்கு தெற்கே இருந்தவர்களை இந்துக்கள் என மத்திய சியர்களும், அரேபியர்களும் அழைத்தார்கள். இவர்களைப் பின்பற்றி ஐரோப்பியர்கள் இந்துக்கள் என்ற சொற்பதத்தை பாவித்தார்கள். நிலப்பரப்பு சம்பந்தமான இந்த அடையாளத்தை மாக்ஸ் முல்லர் போன்ற கல்வியாளர்கள் தங்கள் நூலகங்களில் வைத்து சைவர்கள், வைஷ்ணவர்கள், சமணர்கள் எனக் கூறு போட்டார்கள். ‘ ‘ என்றான் டாக்டர் ரகுபதி.

‘ ‘அப்பொழுது இந்து என்றது அடையாளம் இல்லையா ? ‘ என இடைமறித்தேன்.

‘ ‘பல மதங்கள், கணக்கற்ற வழிபாட்டு முறைகள், ஏராளம் மொழிகள் என பன்முகப் பரிமாணம் கொண்ட மக்கள் கூட்டத்தை சேர்ந்தவர்களை ஒருவார்த்தையில் அடையளாம் காண்பது ஏற்புடையதில்லை ‘ ‘ என்றான் தொல்லியல் நிபுணரும்

பால்யகால நண்பருமான ரகுபதி.

மைசூரில் இருந்து சிரவணபெலகொல என்ற இடத்திற்கு போய் கொண்டிருந்தபோது எங்களுக்குள் இந்த சம்பாசணை நடந்தது,

‘ ‘இந்த இடம் சமணர்களுக்கு வத்திக்கான் போன்றது. சந்திர குப்த மைரியன் ((3BC)) காலத்தில் இருந்து இங்கே வழிபாடுகள் நடக்கின்றன. இவர்கள் திகம்பர சமணர் எனப்படுவார்கள். ‘ ‘ மீண்டும் ரகுபதி.

திகம்பரம் என்பது திசைகளை டையாக அணிதல் அதாவது நிர்வாணமாக இருத்தலாகும்.

வேதங்களை நிராகரித்து உருவாகிய புத்தசமயம், சமண சமயம் இரண்டும் அண்ணளவாக ஒரே காலத்தில் தோன்றியது.

கிறிஸ்துக்கு முன்னே 3ம் நூற்றாண்டில் சந்திரகுப்த மைரியன் தனது சிரியார் பாட்டாபாகு ((Bhadrabahu) சிராவண பென கொலக்கு வந்தார்கள் என கல்வெட்டுகள் கூறுகிறது. இவர்கள் வடநாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தில் இருந்து தப்பிவந்தார்கள் எனச் சொல்லப்படுகிறது.

சுிரவணபெலகொலயில் இரண்டு குன்றுகள் உள்ளது.

1) விந்தியகிரியில் 18மீட்டர் உயரமான தனிக்கருங்கல்லால் ன கோமட்டேஸ்வரரின் சிலை உள்ளது.

இந்த சிலை 983 (AD)) கங்கை வம்ச (கொங்கு வேளாளர்) சேனாதிபதி ஒருவரால் வடிக்கப்பட்டது.

2) சந்திரகிரி என்ற சிறிய குன்றும் சமணர்களுக்கு மிகவும் முக்கியமானது. இங்கு பல சமண சன்னியாசிகள் சமாதி அடைந்துள்ளார்கள். இந்தக் குன்றில் சந்திரகுப்தனுடன்வந்த சியருக்கும் குகைக்கோவில்கள் உண்டு. பல சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்த பிரதேசம்.

12ம் நூற்றாண்டில் ராமனுஜரின் வருகை பின்பு வைணவம் மேலோங்கி சமணம் மங்கியது என்கிறார்கள். தற்போது இந்தியாவிலே சமணர்களின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சம் மட்டுமே.

சிறி ரங்கப்பட்டனம்

மைசூருக்கு 15 கிலோமீட்டரில் காவேரிநதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் இணையும் போது ஏற்படும் தீவுப்பிரதேசமே சிறி ரங்கப்பட்டனமாகும். காவேரியின் இயற்கை அரணில் ஹைதர் அலியும் மகன் திப்பு சுலிதானும் கோட்டை அமைத்து அரசாண்டார்கள்.

1799ல் திப்பு சுல்தானுடன் ங்கிலேயர் போரிட்டு வென்றபின் இந்தக் கோட்டை இடித்தழிக்கப்பட்டது.

பிரான்சு புரட்சி வென்றபோது மைசூரில் பிரான்சின் கொடியை ஏற்றியவன் திப்புசுல்தான். ங்கிலேயருடன் போரிட்டு கோட்டை வாசலில் இறந்தான். ங்கிலேயரை எதிர்த்த இந்திய மன்னர்களின் திப்பு சுல்தான் முதன்மையாக இருந்தாலும், ங்கிலேயர்களாலும் பின்னர் தற்கால இந்திய சரித்திர சிரியர்களாலும் குறைத்து மதிப்பிடப்படுவதாகத் தெரிகிறது. இதேவேளையில் திப்பு சுல்தான் அடக்கம் செய்யப்பட்ட சமாதி பிரதேசம் இஸ்லாமிய பொதுமக்களால் யாத்திரை தலமாக முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. வீரனாக மட்டும் இல்லாமல் சிறந்த ராஜதந்திரியுமாக விளங்கி சகல மக்களின் நற்பெயரையும் பெற்றான் என சரித்திரம் கூறுகிறது.

சிறிரங்க பட்டினத்தில் புகழ்பெற்ற விஷ்ணு லயம் உள்ளது. 814ம் ண்டு திருமலை என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது. கோபுரக்கலசம் தமிழ்நாட்டு கோயில்களை ஒத்த அமையில் காணப்பட்டது.

சோமநாதபுரம் கேசவ லயம்

உயர்ந்த பீடத்தில் மூன்று கோயில்கள் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளது. வட இந்திய சிற்பக்கலையை சாந்த வடிவமைப்பு. தற்பொழுது எந்த விக்கிரகமும் இல்லை. பார்ப்பதற்கு அழகான வடிவமைப்புக் கொண்டது. பல சினிமாப் படங்களில் பாடல் காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டதாக அறிந்தேன்.

காவேரி உற்பத்தியாகி வரும் கர்நாடகத்திலும் நதியில் பெருமளவு தண்ணிர் இல்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் விடுவதை கர்நாடக மாநில மக்கள் எதிர்ப்பதில் ச்சரியமில்லை. கார்நாடக அரசியல்வாதிகளிலும் வோட்டை நம்பித்தான் இருக்கிறார்கள்.

கார்நாடகத்தினர் காவேரியின் சரித்திர காலத்தில் இருமுறை தடுத்து அணைகட்ட முயன்றபோது தமிழ்நாட்டு மன்னர்கள் இருமுறை படை எடுக்க முயற்சித்தார்கள். நல்ல வேளையாக மழையினால் நதிபெருகி அணைகட்டு உடைப்பெடுத்தது. கல்லணைக்கு கல்லெடுத்த இடத்தில் பறவைகள் கூடும் ஏரி அமைந்துள்ளது. கடைசி படைஎடுப்பு முயற்சி நாயக்க வம்சத்தில் வந்த ராணி மங்கம்மாவின் காலத்தில் நடந்தது.

—-

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்