கால தேவன்

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

செந்தில்


சீசரையும் ஆண்டனியையும் சீராட்டிய மண்டபங்கள் சிதிலங்களாக காலடியில்!
நீரோக்களும் பீட்டர்களும் நிகழ்த்திய விவாதங்கள் நிழல்படங்களாக!
டார்வின்சியும் ஏஞ்செலோவும் புரியாத புதிர்களாக பொருட்காட்சியகங்களில்!
நெப்போலியனும் ஹிட்லரும் மாய்( ந்)த்து மறைந்தாயிற்று!
ஓ மகா காலமே! மாயக்காலனே!
நீ சிதைக்காத உலகம் இல்லை!
உன்னை சிதைக்க உலகில் யாருண்டு!
உன்னால் மட்டுமே முடியும் உன்னை சிதைக்க!
உள்ளம் உறைந்தால் உன்னை அறிவர்!

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

செந்தில்

செந்தில்