காலத்தை பின்னோக்கும் நிழல் -சிாிய கவிஞர் நிசார் ஹப்பானி ஓர் அறிமுகம்

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

எச். பீர்முஹம்மது


எப்பொழுதுமே பின்னோக்கும் நிழலுக்கு தனித்தன்மை உண்டு. எல்லாவித வாழ்வனுபவங்களும் ஒரே புள்ளியில் ஒன்று சேர வைத்து அடையாளத்தை நிறுவும் தன்மை அதற்குண்டு. வளைந்து நெளிந்து செல்லும் கடல். அதன் ஆர்ப்பாிக்கும் ஓசை தொடர்ச்சியாக/ முடிவற்றதாக ஒலித்து கொண்டிருக்கிறது. பறவையின் கண் மாதிாி காட்சி வெளிக்குள் அது சிறு துண்டாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு தீவுக்குள்ளும் ஒவ்வொரு தனித்த / தனித்தன்மையற்ற அடையாளங்கள் சிதறி கிடக்கின்றன. அதன் விளிம்பிற்குள் நிற்கும் போது நமக்குள்ளிருந்து அரூப ஒலி எழுகிறது. கவிதையின் வெளிப்பாடு/ அதன் இயங்கு தளம் குறித்து பல மாதிாியான கருத்துக்கள் ஒவ்வொரு இடங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றன. எல்லாவித வெளியும் வெளிப்படுத்தும் வாழ்வனுபவங்கள் ஒரே மாதிாியாக இருப்பதில்லை. சலனங்களின் வெளிப்பாடாக கவிதை உருவாகும்போது கவிஞன் தனக்கான அடையாளத்தை பெறுகிறான். ஒவ்வொரு சூழலுமே ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நம்மை அழைத்து செல்கின்றன. அதன் புாியாத மர்மங்கள்/ ரகசியங்கள்/ உள் வாய்ப்புகள் கலாச்சாரம் தாண்டிய பிரதியை அர்த்தம் கொள்ள செய்கின்றன. இதன் காரணமாகவே வெவ்வேறு பிரதிகளை மாறுபட்ட சூழலில் ஒருவித ஊடாட்டத்தோடு கவனிக்க வேண்டியதிருக்கிறது.

வளைகுடா பகுதியான சிாியாவின் தலைநகரான டமாஸ்கஸ்ஸில் 1923/ மார்ச் 21 ஆம் நாள் பிறந்தார் ஹப்பானி. அவாின் பிறப்புமே எழுத்து வாசனையோடுதான் துவங்கியது. சர்வாதிகார அரசின் பல்வேறு வித நெருக்கடிகள்/ அச்சுறுத்துதல்கள்/ திணிப்புகள் இருந்தும் ஒரு எதிர் அதிகார வாதியாக இறுதிவரை இருந்தார் ஹப்பானி. இவாின் முதல் கவிதை தொகுப்பு 1944 இல் ‘காிய கூந்தல் பெண் என்னிடத்தில் சொல்லியிருந்தாள் ‘ என்னும் தலைப்பில் வெளியாயிற்று. சக பெண்ணின் ஒருவழி உரையாடலாக அமைந்தது அக் கவிதை. டமாஸ்கஸ் பல்கலை கழகத்தில் சட்டக்கல்வியை முடித்த அவர் கெய்ரோ/ அஸ்காரா/ மத்ாித்/ லண்டன்/ பீஜிஸ்/ பீரட் போன்ற இடங்களில் அரசு பணிகளில் பணியாற்றினர். அவாின் எழுத்து வாழ்க்கையின் காலம் சர்வாதிகாரத்தின் உச்சத்தை அனுபவிக்க கூடியதாக இருந்தது. சிாிய மன்னாின் சர்வாதிகாரம் அவருக்கான எழுத்தின் போக்கை தீர்மானித்தது. ஒரு தடவை அவாின் கவிதை பின்வருமாறு அமைந்தது.

‘என் ஆடைகள் கிழிக்கப்படுகின்றன

உன் நாயின் நகங்களால்

கிழிப்பதற்கு அனுமதித்தார்கள்.

உன் உளவாளிகள்

ஒவ்வொரு நாளும் தட்டினார்கள்

உன் படையாட்கள் என்னை

தின்றார்கள் காலணியை கூட

நீ இருதடவை

உன்னை இழந்தாய். ‘

சர்வாதிகாரத்தின் வலிப்பு ஹப்பானியிடத்தில் கலக்குரலாக அமைந்தது. எவ்வித துயரங்களும் கலைஞனிடத்தில் ஏதாவதொரு விதத்தில் பாதிக்கதான் செய்கின்றன. 1967 இல் அரபு – இஸ்ரேல் போர் ஏற்பட்ட போது ஹப்பானி லண்டனில் இருந்தார். அங்கிருந்து தீவிரமான குரலை அவரால் கொடுக்க முடிந்தது. கடலுக்குள் நுழைகிறேன் என்ற தலைப்பில் ஒரு கவிதை அதற்கான குரலாக அமைந்தது.

சாலையில் இருபதாண்டாக தனித்து

இன்னும் அது வரையப்படவில்லை

நான் வெற்றி கொள்வேன் சில நேரங்களில்

இருபதாண்டாக புத்தக காதலில்

இன்னும் முதல் பக்கத்தில் நான்.

1954 இல் வெளியான ‘ஒரு மூலையின் குழந்தைத்தனம் ‘ அரபு இலக்கியத்தின் மரபுத்தன்மையை உடைத்தெறிந்தது. ஒரு பெண்ணின் இயல்பான வெளிப்பாட்டை வெளிக்கொண்டதாக அமைந்தது அத்தொகுப்பு.

ஹப்பானி தன்னுடைய கவிதைகள் மூலம் ஓர் அரபு தேசியவாதியாக அறியப்படுகிறார். அவருடைய கட்டுரைகள்/ பிற எழுத்துக்கள் எல்லாம் அரசியல் தன்மை சர்ந்தவை. சில நேரங்களில் அவருடைய எழுத்துக்கள் பெண்ணிய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றாக இருந்தது. சமூகம் ‘பெண் ‘ என்ற குறியீட்டை சித்தாிக்கும் நிலை மிதந்து செல்லும் அதன் உடல் எல்லாம் ஹப்பானி கவிதையின் படிமங்களானது. ‘வார்த்தைகளுடன் வரைகிறேன் ‘ என்ற கவிதை பெண்ணின் மீதான குறியீட்டு வன்முறையை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு வித உணர்ச்சிகள்/ பாவனைகள்/ சலனங்கள்/ துடிப்புகள் எல்லாம் வெவ்வேறு பிரதிகளை வரைந்து கொள்கின்றன. ஹப்பானியின் ஆரம்ப கால கவிதைகள் சற்று புரட்சித்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் பிந்தைய கால கவிதைகள் கவித்துவதன்மையுடன் இருந்தன. அவாின் சொந்த மண் பற்றிய கவிதைகளும் மிகுந்த வரவேற்பை பெற்றன. இருந்தாலும் தன் சொந்த மண் மீதான அவாின் விமர்சனம் குறைவாகவே இருந்தது. வாழ்நாளில் ஹப்பானி இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவாின் இரண்டாம் மனைவி பாக்தாத்தில் ஆசிாியையாக பணிபுாிந்தார். அவாின் கவிதைகள் மீது ஏற்பட்ட அளப்பாிய காதலே அவர் காதலித்து இரண்டாம் திருமணம் செய்ய காரணம். அவர் மனைவி ஈராக்கில் பணிபுாிந்து கொண்டிருந்தபோது ஈரானிய கெரில்லாக்களால் குண்டு வைத்து கொலை செய்யப்படார். ஹப்பானி வாழ்நாளில் மொத்தம் பதினான்கு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அவர் அரபி செய்தி இதழான அல்-ஹயத்இல் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டார். 1998-ம் ஆண்டு திடார் ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

சிாிய கவிஞர் யூசுப் கார்க்கவுட்லி அவரை பற்றிச் சொல்லும்போது ‘ஹப்பானி நம் வாழ்விற்கும்/ வெளிக்கும் அவசியமானவர் ‘ என்றார். எகிப்திய நாவலாசிாியரான மோனாஹெல்மி ‘அவாின் வலியத்தனம் அவாின் இயல்பான திறமையில் இருந்து வெளிவந்து அழகிய வார்த்தைகளை உருப்படுத்தியது. வெறும் சாதாரண நடவடிக்கைகளாக இல்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மேலும் ஆள்வோருக்கும்/ ஆளப்படுவோருக்கும் இடையே ஒடுக்குவோருக்கும்/ ஒடுக்கப்படுவோருக்கும் இடையே தூண்டலாக அமைந்தது ‘ என்றார்.

காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்ட ஹப்பானியின் நிழல் நம்மை மேற்காசிய இலக்கிய உலகுக்கு அழைத்து செல்கிறது. எல்லா நிழல்களும் தன் காலத்தை தாண்ட முடிவதில்லை. வெவ்வேறு விதமான வாசிப்பிற்குள்ளிருந்து நாம் நமக்கான பிரதியை தேர்ந்தெடுத்து கொள்வது அவசியம். வாசிப்பின் சுழிப்பானது ஒற்றை பாிணாமத்தை அடைய முயலக் கூடாது. எல்லா வாசிப்புகளிலும் ஹப்பானியின் கவிதைகளானது நம் பிரதிக்கு வார்த்தைகளை வரைகிறது.

***

peer13@asean-mail.com

http://www.kirjasto.sci.fi/quabba.htm

Series Navigation