கானல் காட்டில் கவிதையும் கவிகளும்

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

ரெங்கநாயகி


—-

மன வெளிப்பாடுகளுக்கான ஒரு உயரிய சாதனம் கவிதை மொழியாகும் . கவிதை செய்தல் என்பது கலை . கலை அழகின் செறிவு , கருத்தின் பதிவு : மகிழ்ச்சியின் உறைவிடம் ப:ண்பாட்டின் , வளர்ந்த நாகரிகத்தின் சின்னம் . இந்தக் கலையின் பிறப்பிருப்பிடம் இயற்கை இந்த இயற்கை முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற கொடைக்கானல் மலைத்தொடரில் அமைந்திருக்கும் கானல் காட்டில் கவிதைகளும் , கவிகளும் ஜூன் 18 , 19 தேதிகளில் முகாமிட்டிருந்தனர் . கல் கற்பிக்கிறது சிற்பிக்கு . வர்ணங்கள் ஓவியனுக்கு என சொல்லிக் கொண்டு போகும்போது சிற்பம் , ஓவியம் , இசை , நடனம் , பஞ்சபூதம் , மனித தேக விஞ்ஞானம் , மரம் , செடி கொடி , சின்ன ரீங்காரத்திலிருந்து நுட்பமான பறவை ஒலிகள் , உயர்ந்த மரங்கள் வண்ணப்பூக்கள் , முட்புதர்கள் என இயற்கை சார்ந்த அ த்தனையும் கவிஞனுக்கு ஏதாவதொன்றை கற்பித்துக்கொண்டேயிருக்கிறது . பலசமயம் இயற்கையின் சமீபம் கிட்டாமல் , ஒரு அறைக்குள் முடங்கிக் கொண்டு , ஜன்னல் வழியே தவணை முறையில் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கு நல்லதொரு செறிவான , மாறுபட்ட , சந்தோஷமான அனுபவமாக அமைந்தது இந்த இரண்டு நாள் மூகாம் .

18 ஆம் தேதி காலை பட்டிவீரன்பட்டியில் நடந்த காலை கூட்டத்தில் , அந்தப் பகுதியைச் சார்ந்த கவிஞர்களின் கவிதை வாசிப்பும் , தொடர்ந்து திரு. மாலன் ,திரு. பொன்னீலன் அவர்களின் உரையும் இடம் பெற்றது . பகல் உணவிற்கு, ஒரு வேன் மற்றும் இரண்டு கார்களில் கானல் காடு பயணம் . பகல் உணவை முடித்துக் கொண்டு , ‘அறிதலும் ஆக்கமும் ‘ என்ற அறிமுக , மற்றும் கவிதை பற்றிய விவாதத்திற்கான அமர்வை எழுத்தாளர் திரு . மாலன் தொடங்கிவைத்தார் . கவிஞர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டு கவிதைகள் { இரண்டு மட்டும் }வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் . கவிதை வாசிப்பில் பங்கு பெற்றவர்கள்

. வைகை செல்வி , கிருஷாங்கிணி , திலகபாமா , தேவேந்திர பூபதி , பா . வெங்கடேசன் ,நித்திலன் , மதுமிதா , இந்திரன் , பா. சத்திய மோகன் , ஆர் . வெங்கடேஷ் , மாலன் ரெங்கநாயகி . அறிமுக உரையுடன் நிறுத்திக்கொண்டார் பிரம்மராஜன் . திரு . பழமலய் எழுதிய கவிதையை அவர் மாணவர் ஒருவர் ஒப்பித்தார் { பாராமல் } என்ன காரணமோ வாசித்த கவிதைகள் விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை

கவிதை வாசிப்புக்குப்பின் திரு . மாலன் கவிதை செய்தல் / கவிஞனின் பார்வை என்ற பொதுவான அம்சங்களோடு விவாதத்தை தொடங்கிவைத்தார் . மரபிலிருந்து விலகி ,நகர்ந்து கொண்டிருக்கும் கவிதை பற்றியும் , புதுக்கவிதை தனக்கென்று ஏதாவதொரு இலக்கணத்தைக் கொண்டிருக்கிறதா என்பது பற்றியும் பேசினார்கள் . தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதைகளை ‘நவீன கவிதை ‘ என்றே குறிப்பிடவேண்டும் என்றார் பிரம்மரா ?ன் . இந்த நவீன கவிதைபற்றிய விவாதம் ‘private poetry & public poetry ‘ என்று தொடர்ந்தது . private poetry என்பதை கடுமையாக சாடி அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்துப் பேசினார் கவிஞர் பழமலய் . தற்போதைய கவிதைகள் private poetry என்று சொல்லும்படியாக , அக வயக் கவிதைகளாக இருக்கின்றன . தன் விருப்பம் , தன் சோகம் , தன் கோபம் என்று கவிஞன் தன்னைப்பற்றிய பிரஸ்தாபிக்கும் private poetry யை விட , சமுதாயப் பிரக்ஞை கொண்ட public poetry { ?} மேலானது என்ற ரீதியில் பேசினார் பழமலய் . இதற்கு எதிர்வினையாக தன்வயப்பட்டு கவிதை செய்யும் அத்தனை கவிஞனும் கவிஞனின் கனவு திரும்பத் திரும்ப கவிதை வழியாகச் சொல்லப்படும்போது சுற்றி நடக்கும் தவறுகள் நின்று போகவும் வாய்ப்பு உண்டு . கிட்டத்தட்ட கவிஞன் ஒரு influence ஆகச் செயல் படுகின்றான் என்ற ரீதியில் பேசியவர் , கவிஞனின் பிரக்னை , ஆதர்சம் எல்லாமே உலகம் முழுவதும் இனிமையும் அமைதியும் பரவ வேண்டும் என்ற கனவு மட்டுமே இந்தக் கனவு காண்பது , கவிதை வழி அதை express செய்வதுதான் கவிஞனின் வேலை என்று ஏன் இதை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பேசினார் . அப்போதுதான் கவிஞர்களைச் சுற்றியிருக்கும் ‘ஒளிவட்டம் ‘ பற்றிய பேச்சு ‘மறுபடியும் எழுந்தது . {தொடக்கத்தில் திரு . மாலன் குறிப்பிட்ட ஒளிவட்டம் மொழியின் உயரிய வெளிப்பாடன கவிதையாத்தலை செய்து வரும் , ‘இருண்மைத்தன்மை ‘ என்ற வாசகக் கருத்துக்கு பதிலாகவே இந்த ‘ஒளிவட்டம் ‘ என்ற அம்சத்தை நாம் எடுத்துக்கொள்ளக்கூடும் : வித்வத்கர்வமே அந்த ஒளிவட்டம் மற்றும் அதில் தவறில்லை என்பதான விவாதம் தொடர்ந்தது . கவிஞர் , மதுமிதாவிற்கு இந்த ‘ஒளிவட்டம் ‘ பற்றிய ஐயம் கடைசிவரை இருந்துகொண்டே இருந்தது . மறுபடியும் , மரபு மீறல் மட்டுமே புதுக்கவிதையாகுமா என்ற விவாதம் மேற்கொள்ளப்பட்டது (. ஒரு informal முகாம் என்பதால் அட்டவணைப்படியான விவாதங்களோ , கலந்திரையாடலோ நடக்க வாய்ப்பில்லை } வெறும் மரபு மீறல் கவிதையாத்தலில் இருக்க முடியாது : கூடாது . மரபுடைத்தல் என்பது மற்ற டிஸிப்ளினில் {அதாவது இசை , ஓவியம் என்ற மற்ற கலைகளில் நடக்கும் பொழுதுதான் { நடந்தாலொழிய} இலக்கியத்தில் , குறிப்பாக கவிதையில் , வரலாறு ரீதியான மரபுடைத்தல் சாத்தியமாகாது என்று குறிப்பிட்டார் பிரம்மராஜன் .

மறுபடியும் ஒரு digcasion னில் பைத்தியக்காரன் போல் தன்னைப் பற்றியே பிதற்றும் கவிஞன் என்பது போல பழமலய் பேசியவுடன் , ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் பைத்தியங்கள் தாம் : a bit of lunary is there in all creative mind என்ற விவாதத்தை முன் வைத்தார் பிரம்மராஜன் . முரண்பாடகத்தான் இருக்கும் [ மறுபடியும் கவிஞர்களுக்கான : ‘ஒளிவட்டம் ‘ பற்றி பேச்சு எழுந்தது ! ] தற்போது கவிதை உலகின் ‘போலச் செய்தல் ‘ . ‘போலிச் செய்தல் ‘ பற்றியும் விவாதம் நடந்தது . different ? school of verse writing ? _ copying the ‘model poets ‘ இவையே சில சமயங்களில் போலிச் செய்தலாகின்றன ! விவாதங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தால்தானே வளர்ச்சி ? முடிவு என்ற ஒன்றை எட்டி விடாமல் . . .

பைத்தியம் உளறுவது போல தன்னைத்தானே பிரஸ்தாபிக்கும் கவிஞன் எப்படி சமூகப் பிரக்ஞை உள்ளவனாக இருக்க முடியும் , மேலும் , கவிதை என்ற _expression மக்கள் மொழி சார்ந்ததாக மக்களை reach செய்வதாக இருக்க வேண்டும் என்று பழமலய் பேசினார் . இந்த மக்கள் மொழி என்று பேசப்பட்டபோதுதான் ‘Narration ‘ என்ற உத்தியை ஏன் கவிதைக்கு கூடாது என்று அபிப்பிராயப்படுகிறார்கள் என்று கவலைப்பட்டார் ! தேநீர் , சிற்றுண்டிக்குப் பின்னும் விவாதங்கள் தொடர்ந்தன . புல்வெளியிலிருந்து அறைக்குள் இரவு 7. 30 வரை மீண்டும் private poetry / public poetry பற்றிய கருத்துக்களை திரு . இந்திரன் , திரு . மாலன் மறுபடியும் பழமலய் என தொடர்ந்தனர் . ஒரு கட்டத்தில் ‘டாலி ‘ என்ற ஓவியர் பற்றிய கருத்துக்கள் மற்றும் குறிப்புகள் என்ற பேச ஆரம்பித்த பிரம்மராஜன் குரலுக்கு பழமலய் முழுமையாக செவி சாய்த்தாரா என்பதே கேள்விக்குறியானது! Purpose of poetry is to communicate : what do poets communicate ? இந்த Communication இல் இருண்மை இருந்தால் வாசகனின் எதிர்வினை.

*

இரவு உணவிற்குப்பின்னும் தனித்தனி குழுக்களாய்ப் பிரிந்து கவிதை பற்றியே பேசிக்கொண்டிருந்ததே ஒரு சந்தோஷ அனுபவம் . வைகைச் செல்வியும் அவர் அலுவலக நண்பர்களும் பாடிய சுற்றுச் சுழல் விழிப்புணர்வுப்பாடல்கள் மற்றும் திரு . ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்து காட்டிய மிமிக்ரி முகாமின் சிறப்பு அம்சங்கள் . குறிப்பாக இரண்டு நாள் அமர்வின் ‘report ‘ மாதிரி , விவாதிக்கப்பட்ட கருத்துக்களையே தனது மிமிக்ரி நிகழ்வில் பயன்படுத்திக் கொண்டது மிக சிறப்பு . பிறகு ஒரு relaxation போல நெறிப்படுத்தப்பட்ட இரண்டு games round 1

நெறிப்படுத்தியவர் திலகபாமா . நல்ல சட்டாம்பிள்ளை ! வயது வித்தியாசம் இல்லாத ஒரு சமன் மனநிலையை எல்லோரும் பெற முடிந்ததே ஒரு புதுமையான அனுபவம்தான்

உறங்குவதற்கான கூடாரங்கள் தயார்நிலையில் இருந்திடினும் , உறங்க மனமின்றி ஒரு விவாதங்களைத் தொடர்ந்தவாறே இருந்தனர் . முகாமிற்கு அன்று இரவு 12 . 30 மணிக்கு /ாதிட்டார் தொ . ப . பெண் அடிமைப்படுத்தப்பட்டனர் என்பது இந்த ஆடை விவகாரத் திலிருந்தே ஆரம்பிக்கிறது என்றார் . ஒரு வழியாக கண்கள் சோரிந்து , கூடாரங்கள் நோக்கி நடந்தன கால்கள் . அதிகக் குளிர் இல்லை . AC அறைபோலிருந்தது வெளி .

*

19 ஆம் தேதி :-

மறுநாள் காலை ட்ரக்கிங் , வாக்கிங் என்று இரு குழுக்களாகப் பிரிந்து சென்று காலை உணவு எடுத்துக்கொள்ள சுமார் எட்டு மணிக்கு அனைவரும் முகாமிற்குத் திரும்பினார். Walking சென்ற போது பேரா . கண்ணனிடம் அவரது சமீபத்திய நூலைப்பற்றியும் இலக்கியம் பற்றியும் பேசமுடிந்தது காலை உணவிற்குப் பின் , புல் வெளி சூழ கூடாரத்திற்கான தளத்தில் , பேரா . தொ . ப . வின் உரை நிகழ்ந்தது . சங்க காலத்திலிருந்து சமகாலம் வரை கவிதையின் நகர்வு பற்றிய உரை , பட்ட மேற்படிப்பு வகுப்பில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு அப்போது 1 அத்தனை செய்திகள் . மண் வாசனைப் பேச்சும் , மக்களின் வாழ் முறையுமே கவிதை என்ற சீரிய மொழி ஒழுக்கத்தை வகைப்படுத்திக் கொண்டும் , திருத்தியமைத்துக்கொண்டும் , மாறுபடுத்திக்கொண்டும் வந்திருக்கிறது : வருகிறது என்றார் . நம் மொழி வரலாறு , கலாச்சார நிகழ்வுகள் மற்று ம் மாறுதல்கள் என உணர்ந்து தெரிந்து அறியாதவர்கள் கவிதை எப்படிச் செய்யமுடியும் என்றார் . தற்போது எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் நிகண்டுகளைப் படிக்கவேண்டிய கட்டாயத்தை உணர்த்தினார் .

பாட்டனும் , பூட்டனும் பயன்படுத்திய மொழி பற்றிய பிரக்ஞையாவது இருக்கவேண்டும் அல்லவா ? இப்போதுள்ள படைப்பாளிகளுக்கு , குறிப்பாக கவிஞர்களுக்கு , வார்த்தை வளம் {vocabulary } இல்லை என்று வருத்த்ப்பட்டார் .

கடைசி வரியை நோக்கியே கவிதைகள் செல்கின்றன . இது நல்ல ஆரோக்கியமான விஷயமாக நாம் ஏற்றுகொள்ளவியலாது , ஏனெனில் , கவிதையின் ‘insight ‘ எந்தக் கவிஞனுக்குள் தானே {அதாவது கவிதைக்கும் முன்பே கவிஞனுக்குள் } உருவாகிறதோ அந்தக் கவிதையே காலத்திற்கும் நிற்கும் என்பதாகப் பேசினார் . மொழி வித்தை மட்டும் கவிதை ஆகாது . ஒரு பாட்டு ஒரு மெய்பாட்டுடன் இருத்தல் {அதாவது ஒரு ரசம் {rasa}நலம் என்ற கருத்தை சங்கப் பாடல்களை மேற்கோளிட்டு விளக்கினார் .

மொழிவாயிலாக வாழ்க்கையை பிரதிபலித்தல் 1 : 1 என்ற தர்க்க ரீதியான அடிப்படையில் கவிதை செய்யத்தேவையில்லை என்று கூறியவர் , எல்லாவிதமான படைப்பாற்றலை உருவாக்குகிறது . புலன்களின் நிலை குலைவும் , இந்தப் படைப்பாற்றலின் உதவியில் மறுபடி அந்தப்புலன்களின் யோகமும்தான் {அதாவது புணைவு } கவிதையை வடிவமைக்கிறது என்றார் . தாளிசைபற்றியும் , :ஞானத்தில் ஆண் பேச்சு ? என்பதான விளக்கங்களுடன் பேராசிரியரின் உரை நிகழ்ந்தது .நிறைவான அமர்வு .இலேசான சாரல் புல்வெளி அரங்கத்தை நகர்த்தி அறைக்குள் எடுத்துச் சென்றது . பிரம்மராஜனின் உரை மேலை நாட்டு இலக்கியம் , கவிதை பற்றியதாக அமைந்தது . தான் சந்திக்க வாய்த்த கவிஞர்கள் , 80 களில் world poetry என்ற anthology யை {மொழி பெயர்ப்பு செய்யப்ப்பட்ட உலகக் கவிதை } வெளியிட்ட வேண்டிய போது தானும் , மற்ற நண்பர்களும் சேர்ந்து மொழி பெயர்ப்பு செய்த கவிதைகள் {ஒரு சில மட்டும் மேற்கோள் காட்டப்பட்டது } மற்றும் கவிஞர்கள் பற்றிப் பேசினார் , ஏன் ப்ரெக்டை ஒரு காதல் கவிஞராக அறிமுகம் செய்ய நேர்ந்தது அல்லது பிடிவாதமாய் தான் அப்படி செய்தது என்பது பற்றியும் , தான் எழுத வந்த காலகட்டத்தில் இயங்கிய கவிதை பற்றிய கருத்தியல்களுக்கு எதிர்வினையாக அப்போது தான் வாசித்திருந்த சில மேலை நாட்டுக் கவிதைகள் இருந்ததால் அவற்றை தமிழுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்ற உந்துதலில் மொழி பெயர்ப்புக்கவிதைகள் நிறைய செய்ததையும் கூறினார் . தம்மை ஈர்த்த மேலை நாட்டுக் கவிஞர்களை தமிழ் கவிதை சுழலுக்கு நேர்மையாக ஆரோக்கியமாகக் கொண்டு வருவதன் அவசியம் இருந்ததையும் கூறினார் . இதனடிப்படையில் தான் ஆங்கிலக் கவிதையாகத்தை பரீட்சார்த்தமாக தமிழுக்கு apply செய்து பார்த்தது , அப்படி 80 களில் பிரமிப்பை ஏற்படுத்திய நெரூடா தற்போது அந்த பிரமிப்பை தருவதில்லை என்றும் , என்றோதான் மொழிபெயர்ப்பு செய்திருந்த {அல்லது முயன்றிருந்த } முக்கியமான கவிஞரான பிரேடன் பிரேடன் பாஸ் என்பவரின் கவிதைகளை சமீபத்தில்தான் தமிழ் படைப்புலகிற்கு எடுத்துச் சென்றது பற்றியும் , இது போலவே நாம் அறிந்து கொள்ளவேண்டிய நுட்பமான கவிதைத்துவம் மிக்க கவிஞர்கள் {ரில்கே} இருப்பதைப்பற்றியும் ,பொருளுக்குள் மொழியை – சொல்லை போட்டு விட முடியுமானல் அந்தக் கவித்துவம் பாரட்டுக் குரியது ., பின்பற்றக்கூடியது என்ற ரீதியில் உரையை முடித்தார் .

அடுத்து , திரு . இந்திரன் அவர்கள் தன்னை ஈர்த்த ஆப்பிரிக்கக் கவிஞர்கள் , கவிதைகள் பற்றிப் பேசினார் . பிறகு vole soyinka வின் கவிதையின் {தனது } மொழியாக்கத்தை வாசித்துக்காட்டினார் .

தொடர்ந்து , பகல் 12 தாண்டி பாலை மீறிய கவிதைகள் {!} என்ற சூடான விவாதம் ஆரம்பித்தது { நடுநடுவே பல வகையான snachs களுடன் !} விவாதத்தை தொடங்கி வைத்த திலகபாமா மற்றும் வைகைச் செல்வி கூறியதாவது .

காமத்துப் பால் கவிஞர்கள் என்று சில பெண் கவிஞர்க:ளை இந்தியா டுடே அடையாளப்படுத்தியது தவறு என்றும் , பெண் சுதந்திரம் , பெண் சுய மரியாதை என்று பேசுவது போல இவர்களது கவிதைகள் அமைந்திருப்பது ஒரு தோற்றமே . இந்தத் தோற்றம் மற்ற கவிஞர்களையும் {அதாவது ஆண் கவிஞர்கள் } ஆண் கவிதை விமர்சகர்களையும் மேலும் ஒரு வகையில் பெண்ணைப்பற்றி { பொதுவாகப்பெண் } எழுத உற்சாகப்படுத்துவது போல அமைந்திருக்கிறதே ஒழிய நிஜமான பெண் சுதந்திரம் இதில்லை என்றார் .

மேலும் , குறிப்பிட்ட பெண் கவிஞர்களும் , அதிலும் , அவர்களது குறிப்பிட்ட சில கவிதைகள் மற்றும் கவிதை வரிகளுமே சமிபகாலமாக விமர்சகர்கள் , கட்டுரையாளர்கள் என அனைவராலும் திரும்பத் திரும்பக் Quote செய்யப்படுகின்றனர் / படுகின்றன . பேசப்படும் பெண் கவிஞர்கள் இந்த குறிப்பிட்ட வகையில் எழுதுபவர்கள்தான் {அதாவது உடல் / உறுப்பு மொழியில் } என்றும் சாடினார் . இதனைத் தொடர்ந்து இந்தப் பேசப்படுதல் பற்றிய விளக்கமாக ரெங்கநாயகி எடுத்துரைத்தது . தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கவிதையாகத்தில் பெண் கவிஞர்களின் பங்கு பற்றி எந்தக் கட்டுரையை சமிபகாலத்தில் } படித்தாலும் குறிப்பிட்ட ஐந்தாறு கவிஞர்களைத் தவிர மற்றவர்கள் பற்றிய குறிப்பு இருப்பதில்லை . தன்னைப்பொருத்தவரை : பேசப்படுவதற்காக எழுதவில்லை என்று கொண்டாலும் , தீவிர கவிதையாக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற கவி ஞர்கள் பற்றி வாயே திறப்பதில்லை இவர்கள் . பெண் உடல் / உறுப்பு பற்றி எழுதப்பட்டால் கவிதையும் கவிஞரும் பேசப்படுவார்கள் { அதுவும் பல சமயங்களில் மோசமாக off the record ! } என்பதான இன்றைய இலக்கியச்சூழல் ஒரு துர்பாக்கியம் , மு . சத்யா என்ற கவிஞர்பற்றியோ சே . ப்ிருந்தா , இளம்பிறை போன்றவர்களோ இத்தனை விஸ்தாரமாக பேசப்படுகிறார்களா என்பது கேள்விக்குறி . தொடர்ந்தும் அவரே பேசினார்.பெண் எதைப்பற்றி எழுதுகிறாள் என்பதை மட்டும் ஒரு அளவு கோலாக வைத்து செயல்படும் ஆண் விமர்சகர்கள், கட்டுரையாளாகள் மற்றும் ஆண்கவிஞர்கள் என இவர்களது மேதாவிலாச கவனம் தான் நாம் பேசப்படுகிறோம் என்கின்ற மற்றெரு விதமான கவனத்தை இந்த பெண் கவிஞர்களுக்குத் தருகிறது. ஆக மேலும் மேலும் இப்படி எழுதினால்தான் கவிஞராக அடையாளம் (நவீன கவிஞராக !) காட்டப் பெறுவோம் என்கின்ற அபாய கதியில் இயக்கம் பெற நேர்கிறது. இவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, குறுக்கிட்டு (அமோதிப்பது போல என்றுதான் நினை க்கத் தோன்றுகிறது} திரு. .மாலன் commercial ஆக்கப்படுகிறது என்றார். EVERYTHING IS COMMERCIALISED என்றார்.

திரு அண்ணா கண்ணன் பேசும் போது குறிப்பிட்டது இது போன்ற பெண் உடல்/ உறுப்பு மொழி கவிதையாத்தல் ஒரு ஆரம்பமே. இதற்கே ஏன் இத்தனை எதிர்வினைபுரிய வேண்டும் ? இந்த ஆரம்பத்தின் எல்லை எதுவென்று தெரிந்து கொள்ள அதை வரை விட்டு பிறகு அதன் போக்கை, தேவை என்றால், கண்டித்தோ, எதிர் வாதம் செய்தோ உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாமே. இதில் தவறில்லை என்ற ரீதியில் இருந்தது அவர் பேச்சு இந்த சமயத்தில் தான் கிருஷாங்கிணி மற்றும் அவரைத் தொடர்ந்து ரெங்கநாயகி அம்பையின் ஒரு கவிதை நாடக ம் பற்றிப் பேசினார்கள். 1987 என்று ஞாபகம், மீட்சியில் வெளியான அம்பையின் கவிதை நாடகம். மூன்று பெண்களின் மரபு சார்ந்த, மரபு மீறிய என்ற பெண் மனநிலை மற்றும் வழி நடத்தல் என்ற கருத்தால் இயக்கம் கொள்ளும் நாடகம். இது நடிக்கப்பட்டது என்றும் கிருஷாங்கிணி கூறினார். நாடகத்தின் கருத்தே பெண் உடல்/ உறுப்பு வாயிலாக கலவியின்பத்தை தானே பெறுகிறாளா/ உடலுறவு திணிக்கப்படுகிறதா- உணர்ச்சியற்ற ஜடமாக பெண் உடல் இயங்க வேண்டுமா ஜடம் எப்படி இயங்கும் ?) என்பதான் போராட்டம். அந்தரங்கமான ஒன்று அரங்கில் விவாதிக்கப்ப்டுகிறது. இது வெளி வந்த சமயம், தற்போதைய ‘பால் சார்ந்த ‘ கவிதை வரிகள் விஸ்தாரமாக விவாதிக்கப்படுவது போல இது விவாதிக்கப்படவில்லை. மரபுடைத்த/ நவீன/ பெண்ணியம், பேசும் அதுவும் துணிவுடன் பேசும் கலைபடைப்பாக ஏற்றக் கொள்ளப்பட்டது. அதற்குக் காரணம் அந்தக் கவிதை மொழி சொல்லாடல். பகிஷ்கரிக்கப்பட்ட சொற்கள் அல்ல ,முலையும், யோனியும் அம்பை எழுத்துக்கு ஏன் எதிர்ப்பு வரவில்லை ? { வந்ததாகத் தெரிய வில்லை . எதிர்ப்பு வந்திருந்தால் இந்தகட்டுரையாளருக்கு தகவல் தரலாம் . ஏற்றுக்கொள்ளப் படும் } ஆக , இப்படிப்பட்ட பெண் எழுத்துக்கு அப்போது வராத எதிர்ப்பு இப்போதுள்ள பெண் எழுத்துக்கு ஏன் ?

இந்த கேள்விக்கு என்று குறிப்பிட்ட பதில் அந்த விவாதத்தில் பெற முடியவில்லை .ஏனெனில் , திடாரென்று பழமலய் பெண் துறவிக்கு நிர்வாண தீட்சை உண்டா என்ற ரீதியில் பேச ஆரம்பித்தார் . நிர்வாணம் nudity இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று திரு தொ. ப மற்றும் சிலர் கூற , பெண் துறவியாகும் போது ஆணைப்போல் சமமாக ஏன் பாவிக்கக்கூடாது என்ற கேள்விக்கு , ஆணுக்கே துறவறத்தில் நம் கலாச்சாரத்தில் ஏக வஸ்திரம் தான் உண்டே ஒழிய நிர்வாணம் {அதாவது பழமலய் கருத்துப்படி ஒரு ஆடையும் இன்றி } கிடையாது . ஜைனர்கள் வருகைக்குப் பின்புதான் நிர்வாணமே என்பதாக கருத்துச் சொன்னார் திரு . தொ. ப. பெண் தொடர்புடைய வசைச் சொற்களை ஆண்கள் { சில சமயம் பெண்களும் கூட !} பயன்படுத்துவதை நாம் தவறாக , குற்றம் சாட்டிப் பேசுவதேயில்லை என்ற இந்திரன் அதை கொச்சை மொழி என்றபடி ஏற்றுக் கொள்கிறோம் : மற்றபடி கொச்சை மொழி எப்படி கவிதையாக முடியும் என்ற கேள்வி விடைகாணமல் போய்விட்டது .

மறுபடியும் பெண் துறவிகள் பற்றிய பேச்சு எழுந்த போது ‘அக்கம்மா ‘ தவிர வேறு பெண்துறவியை நிர்வாண நிலையில் வைத்துப் பேச இயலாது . என்றார் பேரா . தொ .ப. சமுதாயத்தில் மற்ற மீடியாக்களில் பெண்கள் எப்படி கேவலமாக நடத்தப்படுகிறார்கள் / கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்ற ரீதியில் மறுபடியும் சிலர் track மாறி விவாதத்தைத் தொடர்ந்தனர் . சமுதாயப்பிரக்ஞையுடன் பெண்ணைக் கேவலப்படுத்தும் செயல்கள் பற்றிய விவாதம் அல்ல இது . முழுக்க முழுக்க பெண் கவிஞர்களாகவும் படைப்பாளியாகவும் தங்களை எப்படி express செய்கிறார்கள் என்பதே கேள்வி என்று கொஞ்சம் எரிச்சலுடன் திசை திருப்பியவர்களை நோக்கினர் பெண்கள் 1

ஆண்டாளின் திருப்பாவை , நாச்சியார் திருமொழி பற்றியும் பேச்சு எழுந்தது . ஒரு விஷயம் , உபாதை காரணமாக ஓய்வெடுக்கச் சென்று விட்ட பிரம்மராஜன் இந்த விவாதங் களில் பங்கேற்கவில்லை . முதல் பத்து நிமிடங்களே இந்த அமர்வில் கலந்து கொண்டார் . நாச்சியார் திருமொழி பாலியல் ரீதியில் எழுதப்பட்டதால் எதிர்வினைகள் கடுமையாக இருந்தன என்று சொல்லப்பட்டது . செறிவான , தீவிர , அழகியல் கருத்துக்கள் கொண்ட எந்த வாசகனும் நாச்சியார் திருமொழியை ஒதுக்கியிருக்க முடியாது என்றார் ரெங்கநாயகி ,மேலும் , ஆண்டாள் மொழிவாயிலாகச் சொல்லாத பாலியல் பெண் உணர்வுகளை இப்போதுள்ள எந்தப் பெண்ணும் சொல்லவில்லை . ஆண்டாளுக்கு அவற்றைக் கவிதையாகத் தரத் தெரிந்திருந்தது என்றார் தொடர்ந்து பேசியவர் , கவிஞன் எழுத ஆரம்பிக்கும் கணத்த ிலேயே கவிதையும் தன்னைத்தானே எழுதிக்கொள்ள { ஒரு தெம்புடனும் , அழகியல் கூறுகளுடனும் மொழியுடனும் } ஆரம்பிக்கிறது .அப்போது நெருடலான , தேவையில்லாத , துருத்திக்கொண்டிருக்கும் படியான வார்த்தைகள் கவிதையையே துப்பிவிடுகிறது . தனக்குத்தேவையான சொற்களை தானே தேர்வு செய்கிறது . அப்படிப்பட்ட தேர்வில் பெண் உடல் / உறுப்பு மொழி சார்ந்த சொற்கள் இருந்தால் அதைப்பற்றிய ஆட்சேபம் எந்த வகையிலும் வராது . ஆனால் , ஏதோ ஒரு வெளிக்காரணத்திற்காக கவிஞர் தானே சொற்கள் இட்டு நிரப்பும் போது , ஒரு கலாச்சார அதிர்வோ , திடுக்குறல் ஏற்படுத்தலோ பயன்படுத்தும் சொற்கள்தான் சர்ச்சைக்குரியதாகின்றது என்றார் . ஆண்டாள் தேர்வு செய்தது அத்தகைய சுதந்திரமான கவிதையை , கேள்விக்குரிய சொற்களைப்பற்றிய தர்க்கத்தை சுதந்திரமாகவும் , வலிமையுடனும் முன் வைத்துப் பேசக்கூடிய தெம்பு இருக்கும்பட்சத்தில் ஆட்சேபத்திற்குரியது என்று எதுவுமில்லை

பெண் மொழியில். தொடர்ந்து குண்டு வைத்து சிதைக்கப்பட்ட யோனிகள்என எழுதப்படும் ஒரு போராளிக் கவிஞரின் வரியில் தென்படும் பெண் உறுப்பு மொழி கவிதை மொழியன்றி வேறில்லை என்று திலகபாமா மிகவும் தீவிரமாக இந்த ஒரு கருத்தை கட்டுரையாளரிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார் .

ANDRO CENTRIC அல்லது லிங்க மையவாதம் என்ற கருத்தியல்படி மத்யமாவதி என்ற பெண் கவிஞர் எழுதிய ‘புருஷார்த்தம் ‘ என்ற கவிதையில் , எளிமையான சொற்பிரயோகங்களில் ஆணுறுப்பை மிக இலவாகஒரு symbol

மூலமாக குறிப்பிட்டுச் சொல்லும் பாணி, மற்றும் இந்தத்துணிவான மொழியாள்கைக்கு மிகவும் நேர்மாறான மரபு சார்ந்த கருத்தான ‘ஆண்தான் பெண்ணுக்கு எப்போதும் காவல் , ‘ துணை என்பதாக கவிதை செய்யப்பட்டிருப்பதை கட்டுரையாளர் பிறகு , பகல் உணவின்போது ஒரு சிலருடன்{ திரு .மாலன் , திரு தொ .ப. இதில் அடங்குவர் } பகிர்ந்து கொண்டார் .

நல்ல விருந்தோம்பல் , சிறப்பான மேலாண்மை , informel என்றாலும் கண்டிப்பான ஒரு நெறியாள்கை என இயங்கிய திலகபாமா பாராட்டுக்குரியவர் . பார்த்து பார்த்து தேவைகளை பூர்த்தி செய்தல் , ஒருங்கிணைப்பு , என தன்னை சிறந்த நெறியாளராக அடையாளம் காட்டிக்கொண்டார் . கடைசிவரை தன் வாதத்திற்கான எதிர் வாதங்களில் திருப்தியுறாதவராகவே இருந்தார் .

இதை எழுதுங்கள் , இப்படி எழுதுங்கள் சவாலாக அதே கருத்துக்கள் கொண்ட கவிதை களை அந்தக் குறைபாடுகளை நீக்கி வேறு விதமாக கவிதைப்படுத்துவதில் உங்கள் எதிர்வினையை புரியுங்கள் என்று suggestion சொன்ன நண்பர்கள் வார்த்தை கூட இவரை சமாதானப்படுத்தவில்லை .

ஒரேடியாக கட்டுரை வாசிப்பு என்றில்லாமல் ரொம்ப informel ஆக இருந்த இந்த இரண்டு நாள் முகாம் உண்மையில் வித்தியாசமான ஒரு முகாம் . ஒத்த கருத்துடையவர்கள் அல்ல வந்திருந்த அத்தனை பேரும் : ஆயினும் முகாம் முடிந்து பிரியும்போது இலக்கியம் பேசுபவர்களாக , கவிஞர்களாக நண்பர்களாக மட்டுமல்லாது , ஒரு புதிய தோழமை தொற்றிக் கொள்ள சாத்தியமானது என்பதுதான் உண்மை .

—-

mathibama@yahoo.com மூலம் பெறப்பட்டது

Series Navigation