This entry is in the series 20101107_Issue

ராம்ப்ரசாத்


பூக்களைத் தாங்கும்
காம்புகளும், கூர் முட்களும்
பார்த்திருக்க பூக்கள்
காற்றில் தங்கள் வாசங்களை
பரப்புகின்றன…

வாசங்களைக் கொண்டு
பூக்களை வந்தடைகின்றன‌
வண்டுக்கூட்டங்கள்…

தென்றலுடன் சரசமாடுவதையும்,
வண்ணப்புழுக்களுடன் நட்பு கொள்வதையும்
தவிர்க்க நேரிடும் காம்புகளின், முட்களின்
காலங்கள் தேனைத்திருட வரும் வண்டுகளால்
கரைந்து போகின்றன சத்தமின்றி…

சூழமைவு மாற்றங்கள்
பூக்களை வாழ்வாதாரமாக்குகிறது,
அது கானலென்றறியாமல்…

– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Series Navigation