கானம், கனவு, கல்யாணம்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

பசுபதி


~*~o0o~*~

‘மெருகுடனே பாட்டிசைக்கக் குரல் !
வீணை,குழல் மற்றதற்கு விரல் ! ‘
. . குருசொல்வார் சீடனுக்கு,
. . ‘குரல்,விரலில் வீணனுக்கு,
இருப்பதொரு தொழில்இட்லி உரல் ! ‘
*****
வந்தமர்ந்தாள் என்படுக்கை ஓரம்,
மனங்கவர்ந்த நடிகைஇரா நேரம்.
. . இன்னுமொரு நொடியினிலே,
. . இருந்திருப்பாள் மடியினிலே .
என்கனவைக் கலைத்தகடி காரம்!
*****
முறைமனைவி மூன்றுடைசிங் காரம்,
மும்மணத்திற்(கு) அவன்விளக்க சாரம் :
. . ‘மறைசொல்லும் பெருங்கடமை !
. . மணமொன்றோ முழுமடமை !
சிறைதள்ளும் குற்றம்இரு தாரம் ! ‘

~*~o0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி