காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

த.அஜந்தகுமார்


நீ ஒன்றும் பேசாது பறையாது
உம்மென்றபடி இருக்கிறாய்
நிமிர்கிறேன்
நிர்மலமாய் வானம்

எழிலான ஓவியமாய்
என்னருகில் நீ இருப்பாய்

வானத்திலே பூக்கிறது
வெண்ணிலவு முழுதாக

உன்னுடன் ஒன்றைப்பற்றிக்
கதைக்க நினைக்கின்ற போது
நினைவுகள் சிதறிப் பின்
வாயடைக்கிறது
நட்சத்திரங்களால் வானம்
சிதறிக் கிடக்கிறது

எனக்கும் உனக்கும் இடையில்
கரும்புள்ளிகளால் கோடுகள்……

வானத்து மதியை மறைக்கிறது
கருமேகம்

சொல்லிடவும் துணிந்திடவும்
மனதெங்கும்
ஓர்மம் தழைக்கிறது

கருமேகம் விலகி வழிவிட
வானத்திலே
கையசைக்கிறது வெண்ணிலாஸ

Series Navigation

த.அஜந்தகுமார்.

த.அஜந்தகுமார்.