தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னை அழைத்திடு, என்நாய்க் குட்டியின்
செல்லப் பெயரில் !
சின்னஞ் சிறு பிள்ளையாய் நான்
செல்லமாக
விளையாடும் போது
அழைத்தால் ஓடிச் செல்லும்
அந்த பெயர் என்
செவிதனில் விழட்டும் !
செவ்வந்திப் பூக்கள்
என்னுள்ளம் கவர்ந்தவர் முகத்தின்
விழியோரப் பார்வையை
முன்னோக்கும் !
தெளிவான தேவ கானமாய்த்
தெரியாமல்
ஈர்த்திடும் அந்த வாய்ச்சொற்களில்
எனக்கினி அழைப்பு
இல்லாமை உணர்கிறேன்.
கடவுளை நான் வேண்டும் போது
சுமைதாங்கி மேல் நிற்கும்
சவப்பெட்டியில்
அமைதி !
மரித்துப் போனவர்
உடமைக்கு
உரிமை அளிக்கட்டும் உன் வாக்கு.
வடபுறத்துப் பூக்களைச்
திரட்டி வந்து
தென்புறத்தை நிரப்பு !
இளம் பருவத்தில் எழும் காதலை
மேற்கொண்டு
முதுமையிலும் தொடரட்டும் !
அந்தச் செல்லப் பெயராலே என்னை
அழைப்பாய் !
குழந்தை மனத்தோடு
உண்மையைச் சொல்வேன் நான்
உடனடியாக !
************
Poem -33
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
Yes, call me by my pet-name! let me hear
The name I used to run at, when a child,
From innocent play, and leave the cow-slips piled,
To glance up in some face that proved me dear
With the look of its eyes. I miss the clear
Fond voices which, being drawn and reconciled
Into the music of Heaven’s undefiled,
Call me no longer. Silence on the bier,
While I call God–call God!–So let thy mouth
Be heir to those who are now exanimate.
Gather the north flowers to complete the south,
And catch the early love up in the late.
Yes, call me by that name,–and I, in truth,
With the same heart, will answer and not wait.
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 30, 2007)]
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- வாசிப்பின் எல்லைகள்
- அக்காவின் சங்கீத சிட்சை
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- கடிதம்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- பொதுவாய் சில கேள்விகள்
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- பெண்கள்
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- போதி
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- மௌனம்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- அழகிய சிங்கரின் கவிதைகள்