காதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் !

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன்வசம் உள்ளது உன் பிறவிப்பணி !
உனக்கு அழைப்பு வருகிறது
சிலச் செல்வ மாளிகை
அரங்கத்திலே!
உன்னதப் பாக்களை
மிக்க நளினமாய்ப்
பாடுவோனே !
உன் கர்ப்ப உதடுகள் உதிர்ப்பதை
மென்மேலும் கேட்டு,
நடன மாடுவோர் கால்கள்
இடறி முறிந்து போய்விடும்!
உந்தன் உயர் கைகளுக்குக்
கீழ்மை யான
இந்த ஏழ்மை இல்லத்தின்
தாழ்ப்பாளைத் திறப்பாயா ?
உனக்குத் தெரியாமலே
உன்னிசைக் கீதங்கள்
பூரணப்
பொன் அலைகளாக
என்னில் லத்தின் வாசல்
முன்னே வருவது பற்றி
என்ன நீ
நினைக்கிறாய் ?
ஏற்று அதைத்
தாங்கி கொள்வாயா ?

என் வீட்டுக் கூரைக் குள்ளே
பறக்கின்றன,
வௌவாலும் ஆந்தைகளும் !
என் விட்டில் போன்ற
கீச்சுக் குரல்
உன் மகரயாழ் முன்னே
எப்படிப் போட்டி இடும் ?
மெதுவாக முணு முணுப்பேன்,
மேலும்
என்னை ஒதுக்கி விட்டு
விலகுவது
எதிரொலிக் கப்படுமா ?
ஏகாந்தனாய்த்
தனித்து நீ
இனிதே பாட வேண்டி யிருந்தால்
அழுதிடும் என் நெஞ்சுக்குள்
எழுந்திடு மோர்
அவலக் குரல் !

********************
Poem -4

Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

Poem (4)

Thou hast thy calling to some palace-floor,
Most gracious singer of high poems! where
The dancers will break footing, from the care
Of watching up thy pregnant lips for more.
And dost thou lift this house’s latch too poor
For hand of thine? and canst thou think and bear
To let thy music drop here unaware
In folds of golden fulness at my door?
Look up and see the casement broken in,
The bats and owlets builders in the roof!
My cricket chirps against thy mandolin.
Hush, call no echo up in further proof
Of desolation! there’s a voice within
That weeps . . as thou must sing . . . alone, aloof.

**********

jayabarat@tnt21.com [S. Jayabarathan January 16, 2007]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா