காதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை ?

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



எப்படி நேசிப்பது உன்னை ?
எண்ண வேண்டும் நான்
எத்தனை வழிகள் உள்ளன வென்று !
என் காதல் ஆழமானது !
அகல்வது ! நீள்வது !
உணர்ச்சி மறையும் போது
பூரண நளினத்தில்
எட்டித் தொடும் என் ஆத்மா.
உயிரின முடிவாய் !
பரிதி, மெழுகுவர்த்தி ஒளிபோல்
அவசியம் தேவை
அனுதினம் காதல் எனக்கு !
மனத் தடங்கல் ஏது மின்றி
நேசிப்பேன் உன்னை,
தூய மனதுடன்
மானிட உரிமைத் தேடலாய் !
புகழ்ச்சியைத் திரும்பிப் பாரார் மாந்தர் !
முந்தையத் துக்கங்க ளிடையே
சாதிப்பாகக்
காதலிப்பேன் உன்னை
இச்சை மிகுந்து,
இளம் பருவத்து உறுதியுடன் !
புனித மதக்குரு விடம்
எனக்கிருந்த அன்பெல்லாம் நழுவி
உனை நேசிப்பேன் !
வெளிவிடும் எனது மூச்சும்
நளினப் புன்முறுவலும்
கண்ணீர்த் துளிகளும்
காட்டிவிடும் என் காதலை !
வாழ்வு பூராவும் நேசிப்பேன்.
முடிவிலே
கடவுளின் விதி அதுவாயின்,
காதல் மட்டும்
நிலைத்திருக்கும் உன்மேல்
சாதலுக்குப் பிறகும் !

********************

Poem -43

Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of Being and ideal Grace.
I love thee to the level of everyday’s
Most quiet need, by sun and candle-light.
I love thee freely, as men strive for Right;
I love thee purely, as they turn from Praise.
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood’s faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints,–I love thee with the breath,
Smiles, tears, of all my life!–and, if God choose,
I shall but love thee better after death.

*********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan October 15, 2007]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா