தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
தோழமை எனக்கு வேண்டுமென
வாழ்ந்தேன்
உள்ளொளி யோடு,
பல்லாண்டுக்கு முன்பு
ஆடவர், பெண்டிர் அன்புக்குப்
பதிலாக !
பரிவுள்ள துணைவராய்ப்
பார்த்தேன் அவரை,
பாடிய அவரது பாட்டுக்கும்
மேலாகச் சுவைமிகும்
பண்ணிசை கேட்குமென
எண்ணிலேன் !
அத்தமிக்கும் அவரது உறவுகளில்
விரைவாக
மண்புழுதி படிவதில்
விடுவிப் பில்லை,
புல்லாங்குழல் ஊமை யானது !
மறைந்திடும் அவரது விழிக் கவர்ச்சியில்
மயங்கி விட்டேன்
மடத்தனமாய் !
போலியான நட்புகளிடையே
அப்போது நீ
காட்சி அளித்தாய் என்னை
ஆட்கொள்ள !
என்னினிய அன்பனே !
மின்னிடும் அவரது தோற்றமும்,
இன்னிசைக் கீதமும்
உன்னதப் பகட்டுகளும் குவிந்து
புனித எண்ணைப் பீடத்தில்
சங்கமம் ஆகும்
உன்னிடம் நதிபோல் !
தேவைகளில் திருப்தி யுற்று
என் ஆத்மாவும் துள்ளி யெழும்
உன்னுறவால் !
ஏனென்றால்
மனிதனின் உன்னதக் கனவுகள்
மன வேதனையில்
விடப்படும்
கடவுளின் கொடைகளால் !
********************
Poem -26
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
I lived with visions for my company
Instead of men and women, years ago,
And found them gentle mates, nor thought to know
A sweeter music than they played to me.
But soon their trailing purple was not free
Of this world’s dust, their lutes did silent grow,
And I myself grew faint and blind below
Their vanishing eyes. Then THOU didst come–to be,
Belovழூd, what they seemed. Their shining fronts,
Their songs, their splendours (better, yet the same,
As river-water hallowed into fonts),
Met in thee, and from out thee overcame
My soul with satisfaction of all wants
Because God’s gifts put man’s best dreams to shame.
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 18, 2007)]
- ரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா? – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ? மனிதர் கடைப்பிடிக்கக் கூடிய ஐம்பது முறைகள் -1
- நான்…….?
- கடிதம்
- மனவெளி கலையாற்றுக் குழு – 14 ம் அரங்காடல்
- மெய் எழுத்து வெளியீடு
- கடிதம்
- மலர் மன்னனின் …..மனவெளிக்கு!
- குணவதிமைந்தனின் ‘புதுச்சேரியில் பாரதி’ குறும்பட வெளியீட்டு விழா
- மலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு
- இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்
- ‘கதைச்சொல்லி’யும், கதையும்
- விழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை ! – சால் ஒன்று.
- லாகவமா? லாவகமா?
- காலம் மட்டுமே அறியும் ரகசியம்
- காதல் – King Arthur – கார்ல் ஜுங்
- சிவாஜி முதல் சிவாஜி வரை
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6
- கனகமணி!
- தீபச்செல்வன் கவிதைகள்
- அன்னையின் வீடு
- புரிந்து செய்!!
- நித்திரை யோகம்/மலம்கொண்ட உடல்
- ஒரு சொல்.. தேடி..
- காதல் நாற்பது (26) தோழமை தேடிய உள்ளொளி !
- கோவிலில் எம்மதத்தார்
- தமிழர் நீதி
- ஷா ஆலம் முகாமின் ஆவிகள்
- “கிராமம்”
- தொடர் நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-11
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 15