காதல் நாற்பது -17 முழுமைப் படுத்தும் என்னை !

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகண்ணியம் மிகுந்த வேந்தனைப் போல் நீ
என்னை மீட்டுக் கொண்டதால்
எனது அச்சத்தை எதிர்த்து
மேற்பட்டு நிற்கிறாய் !
போர்த்தி விடு
உன் பழுப்பு வண்ண அங்கியை
என் மீது !
நெருங்கி என்னிதயம்
ஒன்றி உன்னிதயமுடன்
ஒருங்கே வளரட்டும் !
தனிமையில் நான் தவித்த போது
எப்படி என் மனம்
ஆடிப் போன தென்று
அறிவாய் நீ !
உயர்ந்து மேலெழ ஒருவர்
அழுந்தித் தணிவது போல்
உன்னை வெல்வது
முழுமைப் படுத்தும் என்னை !
சீமானாய் நிரூபிக்கும் உன்னை!
விழுந்த படைவீரன்
குருதிப் புலத்தி லிருந்து
தூக்குவோன் கையில்
விட்டுவிடும் உடைவாள் போல,
முடிந்தன இறுதியில் எனது
முயற்சிகள் !
இனிநீ எனக்கு அழைப்பு விடுத்தால்
உன் சொல்லை மதித்து
என் தாழ்வுணர்வைத் தாண்டி நான்
மேல் எழலாம் !
என்னினிய காதலனே
உன் காதல் உணர்வை விரிவாக்கு
என் மதிப்பு நிலை
உயர்வாக !

+++++++++++
Sonnets from the Portuguese
By: Elizabeth Barrett Browning (1806-1861)

And yet, because thou overcomest so,
Because thou art more noble and like a king,
Thou canst prevail against my fears and fling
Thy purple round me, till my heart shall grow
Too close against thine heart henceforth to know
How it shook when alone. Why, conquering
May prove as lordly and complete a thing
In lifting upward, as in crushing low!
And as a vanquished soldier yields his sword
To one who lifts him from the bloody earth,–
Even so, Belovழூd, I at last record,
Here ends my strife. If thou invite me forth,
I rise above abasement at the word.
Make thy love larger to enlarge my worth.

+++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 10, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா