காதல் சாத்தானின் முகவரி

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

கோ.புண்ணியவான்அங்கெங்கெனாதபடி
காதலும் கடவுளுக்கிணையாக
சிதறிக்கிடக்கிறது

கற்பை சூறையாட
காமத்தை கண்டடைய
காதல்
மான் வேடம் பூண்ட
மா¡¢சனாய் அலைகிறது

பின்னர்
மழைநீரென
இருபாலர் விந்தும்
நிலம் முழுதும்
நிரவி சொத சொதக்கிறது

சதா பாலியலை நோக்கியே
‘கண்ணியமாய்’ நகர்த்துகிறது
தன் கவனத்தை

கண்ணீர்
தோல்வியின்
புறமுதுகென
தா¢சாய் விரவி நிற்க

உடல் மூலதனம்தான் திருமணம்
என்பதான பந்தத்தில்
காதல்
எதிர்ப்பாளர்களால்
பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாகிறது மீண்டும்

உடலைமட்டும்
பகிர்ந்து கொள்வதாய்
கணநேர சேர்க்கையில்
காதல்
குரங்கின்
கைமலரென்றாகிறது

விரும்பினால்
சுயஇறப்பை
வெள்ளோட்டம் அனுபவிக்க
சாதி முரண்கொண்ட
காதலில் குதித்துப்பார்க்கலாம்

கல்யாணத்துக்குப்பின்னும்
பற்பல காதல்கள் கருகலைந்து
வாழ்வை நிந்திக்கிறது

சுய இருப்பை
முன்னமேயே
அடையாளம் காணமுடியாமையால்
திணறுகிறது

இப்படியாகத்தான்
சாத்தானின் முகவா¢யாக
காதல்
சாபங்களைக் கையகப்படுத்துகிறது.

Series Navigation

கோ.புண்ணியவான்

கோ.புண்ணியவான்