காதலி எனும் கிறுக்கல்கள்!

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

ரசிகன்


ஒவ்வொரு

காதலின் சட்டைப்பையிலும்

ஆயிரமாயிரம்

புண்பட்ட மௌனங்களும்

மேம்பட்ட சலனங்களும்

ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன!

அதில்

குறிப்பிடும்படியாக

குறிப்பெழுதும்படியாக

ஒன்றிரண்டு மட்டும்

அவ்வப்பொழுதான பகிர்தலின் பொருட்டு

பசியாற்றப்பட்டு விடுகிறது!

மீதம் எஞ்சியவை

ஒற்றை மரப்பட்டையிலும்

கோவில் உள் மதில்சுவரிலும்

கடற்கரையோர அலைபரப்பிலும்

காதலியின் பெயரென

அழகாய் அழுத்தமாய் கிறுக்கப்படுகிறது!

-ரசிகன்

பாண்டிச்சேரி

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

ரசிகன்

ரசிகன்