காதலில் தொடங்கிய என் பயணம்

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

பாண்டித்துரை

மலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசப்பரப்பை பெற்றுத்தந்துள்ளது. இவ்விரு இதழ்களின் மூலமாக எண்ணற்ற இளம் படைப்பாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சிலர் உலகம் தழுவிய வாசகர் பரப்பை தொட்டுச்சென்றதென்னவே உண்மை.

அப்படி நிலவெளியில் தடம்படித்தவர்களாக ம.நவீன், சந்துரு, பா.அ.சிவம், அகிலன், மஹாத்மன், யுவராஜன், தோழி, பூங்குழலி என்ற ஒரு பேரலை எழுந்துள்ளது. ஆமாம் எழுந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட படைப்பாளிகள் எல்லோருமே எனக்கு காதலாகி பின் வல்லினம் வழியேதான் அறிமுகம். குறிப்பாக மஹாத்மன் எழுதுகின்ற பத்திகளும், கட்டுரைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.

தமிழகத்தையொத்த பரந்துபட்ட மலேசிய தமிழ் இலக்கிய ஆர்வளர்களுக்கு இந்த ஒரு (காதல் இதழ் தற்பொழுது வெளிவருவதில்லை. இதன் நீட்சியாகவே வல்லினம் மலர்ந்துள்ளது) இதழ் போதுமானதா என்றால் யானைக்கு சோளப்பொறி கொடுத்த கதை தான். இன்னொரு கதையும் ஞாபத்திற்கு வருகிறது பூனைக்கு யார் மணிகட்டுவது? அப்படி ம.நவீன் சார்ந்த நட்பு வட்டங்கள் மணி கட்ட, இன்றோ அகிலனும், மஹாத்மன்-னும் எனக்கு கிடைத்துள்ளார்கள்.

இந்த வெளி போதுமானதா என்றால் இல்லை. இதில் சிங்கப்பூர் படைப்பாளிகள்வேறு சில பக்கங்களை வசியம் செய்துவிடுகின்றனர். இத்தகு சூழலில் இருமாத இதழாக அநங்கம் என்கிற இதழ் (தனிச்சுற்று) மலேசிய மண்ணில் மலர்ந்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளாரான s.இராமகிருஸ்ணனின் வாழ்த்துகளுடன் மும்முனை தாக்கங்களாய் படைப்பாளிகள் – விமர்சகர்கள் – வாசகர்கள்-ளை இணைப்பதாக அநங்கம் (ஜீன்-08 பதிப்பு) வெளிவந்துள்ளது. மலேசிய சிறுகதைவெளியல் மிகச்சிறந்த சிறுகதையொன்றை விட்டுச் செல்ல காத்திருக்கும் கே.பாலமுருகன் இவ்விதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரும் எனக்கு காதலால் அறிமுகப்படுத்தப்பட்டவரே.

அநங்கம் இதழ் எனக்கு தமிழ்வெளியின் வனம்-தனை ஞாபகப்படுத்துகிறது. ஞாபகம் என்று சொல்லவருவது வனம் போன்று பக்கஅளவில் ஒத்துவருகிறது என்பது மட்டுமே.

அநங்கம் முதல் இதழில் மஹாத்மன், யுவராஜன், கே.பாலமுருகன் இவர்களின் சிறுகதைகளும்

சீ.முத்துச்சாமி, ம.நவீன், செ.நவீன் இவர்களின் பத்திகளும்

பாண்டித்துரை (நான்), தோழி, ரமேஸ்.டே, கவிதா, ப.மணிஜெகதீசன் இவர்களின் கவிதைகளுடன் வெளிவந்துள்ளது.

மலேசிய பெருவெளியில் அநங்கம் இதழுக்கான இடத்தினை கட்டமைப்பது கே.பாலமுருகன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினருக்கும், வாசகர்ளாகிய நம்முடைய பொறுப்புகளாகும்.

அநங்கம் இதழ் சிறப்புற

நட்புடன் வாழ்த்துவது

பாண்டித்துரை

சிங்கப்பூர்

pandiidurai@yahoo.com

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை

காதலில் தொடங்கிய என் பயணம்

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

பாண்டித்துரைமலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசப்பரப்பை பெற்றுத்தந்துள்ளது. இவ்விரு இதழ்களின் மூலமாக எண்ணற்ற இளம் படைப்பாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சிலர் உலகம் தழுவிய வாசகர் பரப்பை தொட்டுச்சென்றதென்னவே உண்மை.

அப்படி நிலவெளியில் தடம்படித்தவர்களாக ம.நவீன், சந்துரு, பா.அ.சிவம், அகிலன், மஹாத்மன், யுவராஜன், தோழி, பூங்குழலி என்ற ஒரு பேரலை எழுந்துள்ளது. ஆமாம் எழுந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட படைப்பாளிகள் எல்லோருமே எனக்கு காதலாகி பின் வல்லினம் வழியேதான் அறிமுகம். குறிப்பாக மஹாத்மன் எழுதுகின்ற பத்திகளும், கட்டுரைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.

தமிழகத்தையொத்த பரந்துபட்ட மலேசிய தமிழ் இலக்கிய ஆர்வளர்களுக்கு இந்த ஒரு (காதல் இதழ் தற்பொழுது வெளிவருவதில்லை. இதன் நீட்சியாகவே வல்லினம் மலர்ந்துள்ளது) இதழ் போதுமானதா என்றால் யானைக்கு சோளப்பொறி கொடுத்த கதை தான். இன்னொரு கதையும் ஞாபத்திற்கு வருகிறது பூனைக்கு யார் மணிகட்டுவது? அப்படி ம.நவீன் சார்ந்த நட்பு வட்டங்கள் மணி கட்ட, இன்றோ அகிலனும், மஹாத்மன்-னும் எனக்கு கிடைத்துள்ளார்கள்.

இந்த வெளி போதுமானதா என்றால் இல்லை. இதில் சிங்கப்பூர் படைப்பாளிகள்வேறு சில பக்கங்களை வசியம் செய்துவிடுகின்றனர். இத்தகு சூழலில் இருமாத இதழாக அநங்கம் என்கிற இதழ் (தனிச்சுற்று) மலேசிய மண்ணில் மலர்ந்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளாரான s.இராமகிருஸ்ணனின் வாழ்த்துகளுடன் மும்முனை தாக்கங்களாய் படைப்பாளிகள் – விமர்சகர்கள் – வாசகர்கள்-ளை
இணைப்பதாக அநங்கம் (ஜீன்-08 பதிப்பு) வெளிவந்துள்ளது. மலேசிய சிறுகதைவெளியல் மிகச்சிறந்த சிறுகதையொன்றை விட்டுச் செல்ல காத்திருக்கும் கே.பாலமுருகன் இவ்விதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரும் எனக்கு காதலால் அறிமுகப்படுத்தப்பட்டவரே.