This entry is in the series 20100613_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


‘ஒ’ வுக்கும்
‘ள’ வுக்கும் என்ன உறவு
எப்படி ‘ஒள’ ஆனது?

சூரியனை மூடும் மேகம்
மின்னலிடம்
தோற்பதேன்?

எறிந்தது ஒரு கல்தான்
எங்கிருந்து
இத்தனை அலைகள்?

புழுவுக்குத் தாய்மை
புரிந்தது எப்படி?

ஏழு நிறங்களை
எப்படிக் கலந்தால்
மயில் கழுத்து?

ஒரு கண் அழுமா?
ஓருதடு சிரிக்குமா?

ஒரு விரல்
மட்டும் ஏன்
மோதிர விரல்?

ராணித்தேனீ ஆணைக்கு
அடிபணிவதேன்
ஆயிரம் ஈக்கள்?

எல்லாச் சங்கும்
ஏன் வலம்புரி இல்லை?

மீண்டும் பூக்க
குறிஞ்சிக்கு ஏன்
பன்னிரண்டு ஆண்டுகள்?

ஒரு காதலில்
விழுந்தேன்
காரணம் தெரிந்தேன்

யூசுப் ராவுத்தர் ரஜித்

20100613_Issue

ஏ.தேவராஜன் 2 கவிதைகள்