”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

மதியழகன் சுப்பையா


தமிழ் மொழியின் மேல் அதிகபடியாக உள்ள பற்றினால் பலர் பிறமொழிகளை கண்டபடி பேசியும் எழுதியும் விடுவது இயல்பானதே.
பாபு என்றால் நாற்றமிக்கவன் என்று பொருள் கூறி முன் மொழிந்தவர்களையும் அதற்கு வரிந்து கட்டுக் கொண்டு வழிமொழிந்தவர்களையும் கண்டு சிரிப்புத்தான் வருகிறது.
”கொக்கறக்கோ” (கொக்- அரக்கன், கற-அறுத்த, கோ-கோமானே(அரசனே) என்று சேவல் கூவுவது தனது கடவுள் முருகனைப் போற்றுவதற்காக என இறையருள். திருமிகு கிருபாணந்தவாரியார் வாக்கு. என்ன செய்ய கிருபாணந்தவாரியாருக்கு முருகனை விட்டால் ஏதுவுமில்லை. ஆனால் இந்தியா முழுவதும் சேவல் அப்படித்தான் கூவுகிறது என்று விசாரித்ததில் தகவல். ( உலகம் முழுவதும் கூட அப்படித்தான் இருக்கலாம். நான் உலகம் சுற்றவில்லை/ யாரிடமும் கேட்க வாய்ப்பும் இல்லை.)
ஏப்ரலுக்கு அடுத்த மாதம் என்னவென்றால் ”மே” என்று மிகச் சரியாகச் சொல்கிறது ஆடு.
அப்பாவுக்கு எதிர்பதம் என்னவென்றால் ”அம்மா” என்று மிகச் சரியாக சொல்கிறது மாடு.
இப்படித்தான் இருக்கிறது பாபு என்ற வார்த்தைக்கு நாற்றம் பிடித்தவன் என்று பொருள் சொல்வது.
பாபு என்ற சொல்லுக்கு மரியாதைக்குறியவர் என்றும் மேன்மையானவர் என்றும் மட்டுமே பொருள்.
ஓசோவின் புத்தகத்தில் குறிப்பிட்டது போல் வெள்ளையர்கள் பெங்காளிகளை நாற்றம் பிடித்தவன் என்று விளிக்க இந்திய வார்த்தையை அதுவும் பெங்காளிகள் புரிந்து கொள்ளக் கூடிய பெங்காளி மொழியில் அழைப்பது கூட தெரியாமல் பெங்காளிகள் இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தை பெங்காள் மாநிலம் முழுவதும் பரவி இந்தியா முழுவதும் பரவுவது வரை அது இந்திய மொழி வார்த்தை என்று எந்த ஒரு இந்தியனும் கண்டு பிடித்து சொல்லவில்லையோ?
பூ-என்றால் நாற்றம் என்று பொருள்தான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அது பெங்காளி என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் அச்சொல் உள்ளது. மேலும் பாபு என்ற வார்த்தைக்கு நாற்றம் பிடித்தவன் என்று சொல்வது ஒரு மொழியை கொச்சைப் படுத்துவதாகும்.
யாராலும் எந்த மொழியையும் கொச்சை படுத்த முடியாதுதான் ஆனால் தவறான தகவல்கள் வாசகர்களைப் போய்ச் சேருதல் கூடாது என்பது எனது தாழ்மையான எண்ணம்.
அதே நேரத்தில் ”அங்ரேஜ்-பாபு” ( வெள்ளைக்காரத் துரை) பாபு-துரை என்று வெளிநாட்டவர்களை இந்தியர்கள் அழைத்தார்கள். அது முதல் அலுவல் பணியில் ஈடு பட்டவர்களை பாபு-ஆங்கிலத்தில் Sir என்று பொருள் படும் வகையில் அழைக்கவே இந்த வார்த்தை பயன் படுத்தப் பட்டது.
விரைவில் இது குறித்த ஆதாரப் பூர்வமான தகவல்களுடன் வருகிறேன்.

மதியழகன் சுப்பையா,
மும்பை


madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா