கவுரியின் எதிர்காலம் ?

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

புதியமாதவி, மும்பை.


கதைகளில் சினிமாவில் வந்திருந்தால் எழுதியவனை படம் எடுத்தவனை என் சகல ஆயுதங்களுடன்

கிழி கிழி என்று கிழித்து எறிந்திருப்பேன்.

‘ ச்சீ போடா நீயும் உன் கற்பனையும்.

கற்பனையில் தெரிகிறது உன் மிருகத்தனம்..

திருடுகிறவனுக்கு கூட ஒரு நியாயம் உண்டாம். அடிக்கடி என் தாத்தா சொல்லுவார். அதுபோல சினிமாவில்

காட்டப்படும் அந்த பாலியல் பலாத்காரங்களுக்கும் ஒரு அசட்டுத்தனமான நியாயம் இருக்கும், ஆனால் இதில் ?

அவள் வந்து எப்படியும் நீங்கள் இதை செய்துதான் ஆகவேண்டும் என்று சொன்னபோது முதலில் மறுத்தாள்.

இதுவரை டாக்டர் மார்க்ரெட் தாய்-சேய் மருத்துவமனையில் குழந்தைப்பேறு மட்டுமே .

ஒரு அபார்ஷன் கூட இதுவரை இந்த 30 ஆண்டு டாக்டர் தொழிலில் அவள் செய்ததில்லை.

நம்பிக்கையுடன் அவளிடன் வந்த உறவினர்கள் பலர் அவளின் பிடிவாதத்தைக் கண்டு எரிச்சல் அடைந்து

சென்றதுண்டு.

கருக்கலைப்பு என்பது அவளைப் பொறுத்தவரையில் மன்னிக்கமுடியாத பாவம்தான். ஒரு உயிரை உருவாக்க முடியாத

மனிதனுக்கு அந்த உயிரை அழிக்கின்ற உரிமைக்கிடையாது என்பதில் அவளுக்கு உறுதியான எண்ணம்.

அவள் கணவன் தேவதாசன் கூட அடிக்கடி இப்போதெல்லாம் குளோனிங் பேபிகள் காலத்தில் இதென்ன

கற்கால கண்மூடித்தனம் என்று கிண்டலடிப்பார்.

ஆனால் இந்த கேஸ் விஷயத்தில் மட்டும் அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

அந்தப் பெண்ணிற்கு 15 வயது இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு அதைவிட இரண்டு வயது குறைச்சலாகத்தான்

சொல்லமுடியும். குழந்தை முகம் இன்னும் மாறவில்லை. இவள் சோதித்துப் பார்த்தப்போது தனக்கு நடந்தது என்ன

என்றுகூட

சரியாக அந்தக்குழந்தையால் சொல்ல முடியவில்லை.

அந்தக் குழந்தை அனுபவித்தது வலியும் வேதனையும்தான்.

தொடர்ந்து காய்ச்சல். தனக்கு என்ன ஆகிவிட்டது என்று அதற்கு இன்னும் புரியவில்லை.

எதையும் வெளியில் சொல்ல பயம். வெட்கம். வேதனை.

எப்படி சொல்வது ? யாரிடம் சொல்வது ? எதைச் சொல்வது ?

எங்கிருந்து சொல்ல ஆரம்பிப்பது ?

அப்படித்தான் அந்தக் குழந்தை காய்ச்சலில் கண்மூடி முணங்கிக் கொண்டு போர்வையால் உடம்பைப் போர்த்திக்

கொண்டு

படுத்திருந்தாள். அவள் தம்பி முனிசிபல் பள்ளிகூடத்திலிருந்து வந்து

‘ பசிக்குது தீிதி.. டால் சாவல் தேனா ‘ கெஞ்சினான்.

எழுந்து உடகார்ந்து அவனுக்கு சாப்பாடு வைத்துக் கொடுக்க அவளால் முடியவில்லை.

அவனுக்கு அவன் தீதியின் மேல் கோபம் வந்தது.

பக்கத்தில் வந்து பார்த்தான். அவள் உடம்பு தனலாக எரிந்தது.

‘தீதி வா டாக்டர்கிட்டே ‘

‘ன்நை..தும் ஜாவ்.. ‘

‘தீதி வா அம்மாக்கிட்டே போயிடுவோம்.. ‘

‘வேண்டாம் .. அபி ன்நை..அம் மர்னேக்கிபாத்.. நீ இங்கே இருக்காதே ‘

‘ஏன் தீதி இப்படி எல்லாம் பேசரே ‘

‘எனக்கு பயம்மா இருக்குடா ‘

அந்தப் பையன் மறுநாள் அவன் அம்மா இருக்கும் கிராஸ்ரோட் சாலுக்குப்போய் அம்மாவிடம் எல்லாம் சொன்னான்.

அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஏண்டா டாக்டர்கிட்டே வரமாட்டேன்ன்னு சொல்றா ?

உங்கப்பன் கிட்டே சொன்னியா ?

‘இல்லம்மா.. அப்பா பேச்சை எடுத்தாலே தீதி ரொம்ப அழறா..ரொம்ப பாவம்ம்மா இருக்குமா..

வாம்மா ..அப்பாவுக்கு இது செகண்டு ஷிப்ட்தான். மதியம் 2 மணிக்கப்பறம் வாம்மா..

திதி செத்துப் போயிடுவாளொனு எனக்குப் பயமா இருக்குமா.. ‘

‘போடா வர்ர்றேன். ‘

அங்கே போய் பார்த்தால் அவளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. என்ன கேட்டாலும் மகள் அழுதாள்.

ஒரு ரிக்ஷாவை கூப்பிட்டாள். பேசாமல் அவள் வேலைப்பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து

‘மேம்சாப்.. எங்கிட்டே எதுவுமே இந்தச் சனியன்சொல்ல மாட்டேங்கறா.. நீங்களாவது கேளுங்க..

என்ன கேட்டாலும் அழுதா.. என் அடிவயித்தக் கலக்குது மேடம்.. ‘

மெளசி நீ கொஞ்சம் வெளியில் போ..

ரொம்பநேரம் கழித்து கதவு திறந்தது. இப்போது டாக்டரும் சேர்ந்து அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்து

மெளசிக்கு என்ன கேட்பது என்பதே புரியவில்லை.

‘டாக்டர்.. ‘

டாக்டர் மார்க்ரெட் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு கன்னத்த்ல் வழியும் கண்ணீரைத் துடைத்தாள்.

எவ்வளவொ சீரியஸ் கேஸ் எல்லாம் மேடம் அட்டண்ட் செய்திருக்கிறாள். எப்போதுமே மேடம் இப்படி கண்ணீர்

விட்டு அழறதை அவள் இதுவரைப் பார்த்ததில்லை.

‘என் டா என்ன ஆச்சு ?.. உங்கப்பன் என்னை அழவச்சி கெடுத்தான். நீ என்ன அழுதே கொன்னுடாதீடி..

சொல்லித்தொலையேன்.. கோபத்தில் அவள் கவுரியின் தலைமுடியைப் பிடித்து அவளை ஆட்டினாள்.

மார்க்கிரேட் வேகமா திரும்பி ‘மெளசி.. உஸ்க்கா க்யா கல்திஹே ?

ஓ தோ பேபி ஹை.. ‘

சொல்லி விட்டு ஏங்கி ஏங்கி அழும் டாக்டரையே பார்த்தாள் மெளசி.

டாக்டர் எழுந்து போய் ஃப்ரிட்ஜை திறந்து குளிர்ந்த தண்ணிரை மடக் மடக்முனு குடித்தாள்.

குளிர்ந்த தண்ணீர் அவள் தொண்டையில் இறங்குவதைப் பார்த்துக் கொண்டே இருந்த மெளசிக்கு

யாரோ அவள் தொண்டையில் நெருப்புத் துண்டுகளை இறக்குவது போலிருந்தது.

டாக்டர் எதையோ சொல்லப் போகிறாள். அதுவும் ரொம்ப மோசமான ஒன்றை..

இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்லப் போகிறாள். அதையும் கேட்க வேண்டும் என்பது

என் தலைவிதி.. வயசுப் பொண்ணு.. வளரும் பையன் இரண்டையும் சம்பாதிக்கிற அப்பனிடம்

விட்டால் பட்டினி இல்லாமல் தன் பிள்ளைகள் வளரும்.. ஏதொ தன்னால்தான் அந்த மனிதனின்

மிருகப்பசிக்குத் தீனிப்போடும் மனமும் உடம்பும் இல்லாமல் போயிடுச்சி..

அது என்னவோ இரண்டு பிள்ளைகளை அவனுக்குப் பெற்றபின்னும் அவன் தொட்டதில்

அவள் அன்பையோ காதலையோ அனுபவிக்கவில்ல்லை என்பதை அவள் சொன்னால் யார் நம்புவார்கள் ?

அதை அவள் பெற்ற அம்மாவிடம் சொன்னபோது ‘ ஆம்பிளைன்னா அப்படித்தான். சிலருக்கு கொஞ்சம்

ஆசை அதிகமா இருக்கும்டி நிதான் எல்லாம் புரிஞ்சி பகல் இரவுனு பார்க்காம நடந்துக்கனும் ‘ என்று

சொன்னாள்.

டாக்டர் சொன்னபோது …

அவள் அடிவயிற்ைறை யாரோ கத்தியால் குத்தி அவள் மார்புச் சதைகளை வெட்டித் துண்டுகளாக்கி

அவள் உள்ளங்கையில் வைத்துவிட்டது போல் ..

இப்போது அவளால் அழமுடியவில்லை.

உலக உருண்டையே ஆணின் குறியாகி அவளைப் பலவந்தப்படுத்தி தூள் தூளாக்கி அவளை

ஆகாயத்தில் தூக்கி ஏறிந்துவிட்ட மாதிரி இருந்தது.

டாக்டர் மார்க்கிரேட்டுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.

மெதுவாக டாக்டர் தன் நிலைமையை மெளசியிடம் சொன்னாள்.

‘மெளசி உனக்கு நல்லா தெரியும்., நான் அபார்ஷன் செய்றதில்லைனு. அதுவும் உன் பெண்ணு கேசில்

மாசமும் மூன்றைத் தாண்டியாச்சு. அவள் உடல்நிலையும் அதற்கு இடம் கொடுக்காது..அப்படியே

அபார்ஷன் செய்தாலும் உன் பொண்ணுக்கே ஏதாச்சும் ஆயிடலாம்.. ‘

மெளசி.. டாக்டரை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆமாம் டாக்டர்.. பாவம் செய்தது நானும் என் பொண்ணும்தானே. இதைக் கலைக்கறது பாவம்னா..

இதைப் பிரசவிக்கரது மட்டும் பாவமில்லையா டாக்டர் ?

பாவம், தர்மம், நியாயம் இதெல்லாம் உங்களுக்குத்தான்.. எங்களுக்கு அதில் எல்லாம்

அதிகாரமும் உரிமையும் கிடையாது டாக்டர்.. ‘

‘மெளசி.. நாளைக்கு உன் பொண்ணு உயிருக்கு ஏதாச்சும் ஆயிட்டா அது பாவமில்லையா ‘

‘ஆமாம் டாக்டர்.. இந்தக் குழந்தையைப் பெத்து அவள் தாயாகிற பாக்கியத்தை நீங்க தடுக்கிறது

பெரிய பாவம்தான் டாக்டர்..!!

பெத்த அப்பனே கெடுத்துச் சீரழிச்சப்பறம் .. அவன் பிள்ளையே பெத்த மகளே சுமந்து பெத்துக்கிடற பாவத்தை

உங்க ஆண்டவன் கூட மன்னிப்பானா டாக்டர் ? சொல்லுங்க டாக்டர்.. ?

டாக்டர் மார்க்கிரேட் முதல் முறையாக அபார்ஷன் செய்தாள்.

கவுரி அந்தக் கருக்கலைப்பிலிருந்து மீண்டு வந்தாளா அல்லது அந்த இரத்த வெள்ளத்திலேயே

கண்திறக்காமல் போய்விட்டாளா தெரியவில்லை.

அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவள் அப்பனுக்கு ஆயுள்தண்டனை என்று செப்டம்பர் 10ல் மும்பை

ஹை கோர்ட்டில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பின்குறிப்பு:

தீதி – அக்கா. மெளசி – மருத்துவமனைகளில் ஆயாவாக வேலைப் பார்க்கும் பெண்ணைக் குறிக்கும்

வழக்குச்சொல்

(உண்மையான அர்த்தம் சித்தி )

இந்தக் கதையின் கரு ஒரு உண்மைச் செய்தியே. என்னைஅதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி.

பார்க்க. டைம்ஸ் ஆஃப் இந்தியா செப் 16 பக் 5, மும்பை பதிப்பு.

இப்படியும் நடக்குமா ? நடந்திருக்கிறது.. அந்த இளம் குழந்தையின் எதிர்காலம், அவளின் வேதனை,

அணமைக் காலங்களில் அதிகரித்துவரும் இதுபோன்ற சமூக அவலங்கள், .. ஒரு மானிடனாய் நான்

அனுபவிக்கும் இந்தச் செய்தியின் மனவேதனையை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்….

செய்தி:

A special court on september 10 sentenced Kishan Surajmal Gehlot, an income

tax consultant

to life imprisonment for repeatedly raping his teenage daughter. the

sentence was give out

by additional sessions judge S P Davare. Gehlot was living with his 17 year

old daughter

and 11 year old son in a chawl in Malad east. His wife was staying

sepearately in another

house since 2000 due to some dispute with him….

Gehlot forcibly raped his daughter from sep 2001 to Apr2003. He threatened

her of dire

consequences if she told anybody about the rape. As a result the poor girl

had no choice

but to keep mum.

talking about the victims ‘s plight a neighbour remarked, ‘she passed her SSC

exam with

flying colours but is currently leading a recluse ‘s life at her mother ‘s

place. her father

has scarred her for the rest of her life ‘.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை