கவியும் நிழல்

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

ஹெச்.ஜி.ரசூல்



இரவுதோறும்
எனக்கு முளைத்துவிடும் மார்பகங்கள் குறித்து
அவள் விசித்திரம் கொள்கிறாள்.
மேலும் கீழுமாய்
இரண்டு பிரபஞ்சங்கள் புரண்டு கிடக்க
ஆலிங்கனத் தழுவல்களில்
உடல்கள் உருமாறி
ஒன்றுக்குள் ஒன்று ஒளிந்து கொள்கின்றன.
மங்கிய வெளிச்ச சிதறல்
என்னுடலைச் சூழ்கிறது.
நாதமெழுப்பும் நரம்பின் நுனியில்
பனித்திவலைகள் உருகி வழிய
வெற்றுடம்பு ஒரு செடியாய்
புணர்வின் உச்ச்த்தில்
வெட்டுப்பட்டுக் கிடக்கிறது.
ஒரு ரகசியமாகவும்
அதே சமயம் அதிசயமாகவும்
இது அவ்வப்போது நிகழ்கிறது.
விடிகாலை ஒளிப் புலர்வில்
விரல்கள் தொட்டுணரும் தருணங்களில்
மிகவும் பதட்டமாக
மார்பகங்கள் இல்லாத
என் வெற்றுடலின் நிழல்
அவள் மீது மெதுவாய் கவிகிறது.

Series Navigation