‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

லதா ராமகிருஷ்ணன்


24 வது இளைஞர் கவிபாஸ்கர். கவிஞர்; ஓவியர். திரைப்படப் பாடலாசிரியர். தமிழர் கண்ணோட்டம், கணையாழி, தினகரன், மாலைச்சுடர், முதலிய பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. புதிய நிலா, தொட்டாற்சிணுங்கி கிய இரண்டு கவிதைத் தொகுப்புகளோடு சமீபத்தில் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பான ‘தொட்டில் கனவி’ன் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. அய்யா நிலையம் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் கவிபாஸ்கரின் கோட்டோவியங்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பகுதி நேர ஓவியராகவும் இயங்கி வரும் கவிபாஸ்கர் தஞ்சாவூரில் ஒரு சிறிய கிராமத்தில், எளிய குடும்பத்தில் பி¢றந்தவர். திரைப்படப் பாடலாசிரியராக வேண்டுமென்ற ர்வம் காரணமாக 2002ல் சென்னை வந்தவர் காற்றுள்ள வரை வாலிபன், குடியரசு, திரு, திருடிய இதயத்தை முதலிய படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியாகும் திரைப்படப் பாடல் காட்சிகளில் பாடல்களை எழுதியவர்களின் பெயர்களை வெளியிடாமல் இருப்பது தன் போன்ற எத்தனையோ பேருக்கு மனவருத்தம் அளிப்பதாகவும், இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் தங்கத்தோடு கூறுகிறார் கவிபாஸ்கர்.

தமிழ் மீதுள்ள பற்று காரணமாக கவிதை எழுத்த் தொடங்கியதாகவும், திரைப்படத் துறையில் நல்ல பாடல்களை எழுதி முத்திரை பதிக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புவதாகவும் தெரிவிக்கும் இவர் தனக்குள் ஒளிந்திருந்த எழுத்தாற்றலை வெளிக்கொணர்ந்த தனது தமிழாசிரியர், மற்றும் திரைப்படத்துறையில் தன்னை ஊக்குவித்து வரும் இயக்குனர் ராதாபாரதி, மணிவண்ணன் ,மற்றும் சிலரையும், தமிழர் கண்ணோட்டம் இதழைச் சேர்ந்த திரு.பத்ம்நாபன், திரு.மணியரசன், திரு.நெய்வேலி பாலு முதலியோரையும் நன்றியோடு நினைவுகூர்கிறார். தன் முயற்சிகளுக்கெல்லாம் ஊக்கமளித்து வரும் தாயும், தந்தையும் தனது மிகப் பெரிய பலம் என்கிறார்.

சமீபத்தில் நடந்தேறிய இவரது தொட்டில் கனவு கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே கவிபாஸ்கரின் உழைப்பு, விடாமுயற்சி, தோழமையுணர்வு முதலிய பண்புநலன்களைப் பாராட்டிப் பேசினர். 29.9.06 அன்று நடந்தேறிய விழாவில் திரு.பெ.மணியரசன்(சிரியர், தமிழர் கண்ணோட்டம்), இயக்குனர் வே.சேகர்(திருவள்ளுவர் கலைக்கூடம்), கவிஞர் பூவைசாரதி(உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை), ஓவியர் புகழேந்தி, இயக்குனர் ராதாபாரதி, எழுத்தாளர் அமரந்த்தா, லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ஜான் தன்ராஜ்(பொதிகைத் தொலைக்காட்சி), கவிஞர் பூர்ணசந்திரன் முதலிய பலர் கலந்து கொண்டனர். தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான திரு.மணிவண்ணன் கவிபாஸ்கரின் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

கவிபாஸ்கரின் சில கவிதைகளும், கோட்டோவியங்களும் கீழே தரப்பட்டுள்ளன. அவர் எழுத்துலகிலும், திரையுலகிலும் சிறப்புற வாழ்த்துவோம்.

Series Navigation