கவிதையாதெனில்….
Published July 1, 2004 • By
பாஷா
பாஷா

உன்னிடமிருந்து ப்ரதி
எடுக்கப்படுவதே என் கவிதை
எண்ணிக்கையிலடங்கும் கவிதைகளைமட்டும்
எனக்கு கொடுத்துவிட்டு
ஏராளமான எழுதப்படாத கவிதைகளை
உனது
சிரிப்பாய், சிணுங்களாய்
கோபமாய்,கொஞ்சலாய்
அக்கரையாய்,அழுகையாய்
‘வெண்ணெய்…. ‘என்றேயெனை
அழைக்கும் அழகாய்
உனக்குள் ஒளித்து வைத்துள்ளாய்!
—-
sikkandarbasha@hotmail.com